எனக்குக் கிடைத்தால்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களுக்கும் கிடைக்கும்
இமாலய பாதயாத்திரையில் கலந்துகொண்டு ஆன்மீக சாதகர்களுக்குப் பரமஹம்ஸர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நம்பிக்கையூட்டும் வரலாற்றுப்பகுதியை இங்குப் பிரசு ரம் செய்வதில் மிகுந்த ஆனந்தமடைகிறோம்.
-நித்யானந்த தியானபீடம்
உடலே வீழ்ந்தாலும் வீழாத மனம்
The mind will not fall even if The body falls
இமயமலையில் நடந்த ஒரு இனிமையான சம்பவம் இது! என்னுடைய பரிவிராஜக நாட்களில் நடந்த மிக அருமையான சம்பவம்.
ஒருமுறை உடல்நலம் சரியில்லாமல், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன்.

சாதாரண காய்ச்சலோ, இருமலோ இல்லை, ரத்த சீத பேதி, வாந்தி, ஜீரம் என்று ஒரே சமயத்தில் எல்லாமே என் உடலில் ஆட்கொண்டு அது மிகவும் கடுமையானதாக இருந்தது.
ஒரே சமயத்தில் உடலில் எல்லாக் கதவுகளும் திறந்து கொண்டது.
தனியாளாய் இருந்தேன்.
ஆனால், என் உடலில் நடந்தவற்றையெல்லாம்
பார்க்கும்போது நான் தெளிவாக முடிவு
செய்திருந்தேன் நான் இறந்துவிடப் போகி
றேன் என்று. ஆனால் எனக்கு எந்த விதமான
பயமோ, அல்லது நான் செத்துவிடுவேன் என்ற
பீதியோ இல்லை, எந்த எண்ணமும், எந்த
உணர்வும்கூட அப்போது பெரிதாக என்னிடம்
இல்லை. அந்த நேரத்தில்கூட நான் இறந்து
போகப் போவதைப் பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை.
வாழ வேண்டும் என்ற ஆசையே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். வாழவேண்டும் என்ற ஆசை போய் விட்டது என்றால் அது, வாழ்க்கையின் மீதான வெறுப்பினாலோ பயத்தினாலோ அல்ல. காரணம் உடல் அந்த அளவிற்கு, அப்போது தன் சக்தியை இழந்துவிட்டு இருந்தது. ஒரே நேரத்தில் வாந்தி, சீத பேதி என்று எல்லாமே நிற்காமல் நடந்தால் உடல் என்னதான் ஆகும்.
உடலை அசைக்கக்கூட முடியாத அளவிற்கு முற்றிலுமாக வலுவிழந்து போய் விட்டது.
நான் சாகத்தான் போகிறேன் என்று முடிவே செய்து விட்டேன்.
என்னைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது வாழ வேண்டும் என்றே றா எனக்கிருந்த எண்ணம் உட்பட எல்லாவிதமான ஆசைகளையும் இழந்து விட்டேன்.
அப்போது, கிருஷ்ணர் 'கீதையில்' சொன்னது நினைவுக்கு வந்தது.
அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம்
"யாரெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, யாரெல்லாம் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ, உங்களின் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பேற்பேன்.
கிருஷ்ணர் கீதையில் இவ்வாறு உறுதியளிக்கிறார்.
அதன்பிறகு நான் நினைத்துக் கொண்டேன், கிருஷ்ணரின் உறுதிமொழியைச் சரிபார்த்துக் கொள்ள, இது தருணமில்லை. ஆனால், நான் உண்மையில் அவருள்தான் வாழ்கிறேனா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
பாருங்கள், அப்போதுகூட அந்த இக்கட்டான சமயத்தில்கூட, நான் கிருஷ்ணர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்க நினைக்கவில்லை. அவர் என்னைத் தேடி வந்து என்னைப் பாதுகாத்து உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றுவாரா என்று நினைக்கவில்லை.
அதற்குப் பதிலாக, அவர் கீதையில் சொன்னதைப் போல் உண்மையில் நான் அவருள் வாழ்ந்தால், நான் அவரோடு ஒன்றாக இணைந்து இருந்து, அவரையே நினைத்துக் கொண்டிருந்தால், அவரைத் தவிர எனக்குள் வேறு எந்த நினைவும் எனக்குள் இல்லாமல் இருந்திருந்ததால், அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படியே எல்லாம் நடக்கட்டும். அவர் அதை நிச்சயமாகச் செய்வார் என்ற ஆத்மார்த்தமான உணர்வு (feeling connectedness) எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
"ஒரு வேளை இந்த உணர்வு என்னிடம் ஆழமாக இல்லையென்றால், எனக்குள்தான், ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
பிறகு எதற்காக இந்த உடலைப் பேணிக்காக்கவேண்டும்? அப்படி இறந்தால் இறந்துபோகட்டுமே?
இறந்தால் இன்னொரு உடலையும் மனத்தையும் எடுக்கலாம், குறைந்தபட்சம் அடுத்த பிறவியிலாவது கிருஷ்ணர் சொன்னதை நான் செய்ய முயற்சிக்கலாம் அல்லவா?
அதனால், என்னுடைய உடலை அசைக்கக்கூட போவதில்லை அது மட்டும் அல்லாமல், யாரிடமும் எந்தவித உதவியையும் கேட்கப் போவதில்லை என்று உறுதியாக முடிவு எடுத்தேன்.
கங்கை நதிக்கரையின் பாலத்தின் அடியில், ஒரு பக்கத்தில் தன்னந்தனியாகப் படுத்து இருந்தேன். நான் அங்குப் படுத்திருப்பது யாருக்குமே தெரியாது .
உடலே வீழ்ந்தாலும், வீழாத மனம் அப்போது என்வசம் இல்லை.
உடலே வீழ்ந்த பிறகுக்கூட, வீழாமல் இயங்கும் மனித மனம் அப்போது என்னுள் ஆதிக்கம் செலுத்தாமல் ஓய்வாக இருந்தது. கிருஷ்ணரின் மீது பொங்கி வழிந்த ஆத்மார்த்தமான பக்தி உணர்வால், மனம் இருக்கும் இடம் தெரியாமல் ஓய்ந்திருந்தது. "அவர் எப்படி நினைக்கிறாரோ அப்படியே நடக்கட்டும்," என்ற ஆத்மார்த்தமான உணர்வில் எல்லாம் கரைந்தது.

பொது மக்களுக்காகப் பரமஹம்சரே நேரடியாக உலகம் முழுவதும் நடத்தும் தியான சத்சங்களின் ஒரு பகுதி...
உடலே வீழ்ந்த பிறகும்கூட வீழாமல் இயங்கும்
அகங்காரம் இல்லாததால் அப்படியே கங்கை
கரையிலேயே அவரின் நினைவிலேயே
நிம்மதியாய் ஆனந்தமயமாய்
படுத்துவிட்டேன்.
நீங்கள் கேட்கலாம், "இந்த நிலையில்கூட
ஒருவரால் ஆனந்தமாய் இருக்க முடியுமா."
பதில், "ஆம்,".முடியும் என்பதே!
> அவர் எப்படி
> விரும்புகிறாரோ அப்படியே
> எல்லாம் நடக்கும் அவர் அதை
> நிச்சயமாகச் செய்வார் என்று
> ஆத்மார்த்தமான உணர்வு
> எனக்குள் இருந்துகொண்டே
> இருந்தது.
என் பக்தி, என்னுள் பொங்கி என் உணர்வை நனைத்துக் கொண்டிருந்த ஞானத்தை தாண்டிய ரசம் என்னை அந்த நிமிடத்திலும் ஆனந்தத்திலேயே இருக்க வைத்தது.