KAILASA Library/ஜீவன் முக்தி/இந்த ஒரு வருடத்தை ஜீவன் முக்திக்காகத் தியாகம் செய்யுங்கள்Sign in
ஜீவன் முக்தி

இந்த ஒரு வருடத்தை ஜீவன் முக்திக்காகத் தியாகம் செய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Dedicate This year for Living Enlightenment

இந்த ஒரே ஒரு சத்தியத்தை உள் வாங்குங்கள்.

இந்த ஒரு வருடத்தை முழுவதும் ‘ஜீவன் முக்தனாக’ வாழ்வதற்காகத் தியாகம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் பல வருடங்கள், பல விஷயங்களுக்காகச் செலவு செய்திருப்பீர்கள்.

இது வரைக்கும் வாழ்ந்த வருடங்களைப் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்குத் தியாகம் செய்துள்ளீர்கள்.

உறவுகளை உருவாக்குவதற்குத் தியாகம் செய்திருப்பீர்கள். குடும்பத்தை உருவாக்கத் தியாகம் செய்திருப்பீர்கள். எது எதற்காகவோ உங்களின் வாழ்வைத் தியாகம் செய்துள்ளீர்கள்.

பலபேர் திருமணம் செய்வதற்காகப் பெண்ணைத் தேடித் தேடியே நான்கு வருடங்கள், பத்து வருடங்கள் என்று கழித்திருக்கிறார்கள்.

இன்னும் பலர் திருமணம் செய்துகொண்டு, அதன்பின் நிம்மதியைத் தேடித் தேடி 40 வருடம் கழித்துக்கொண்டு இருப்பார்கள்.

எதை வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம். எத்தனை வருடத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.

இந்த ஒரு வருடத்தை மட்டும் எது
எதற்காகவோ, செலவு செய்யாமல்
உங்களுக்காகச் செலவு செய்யுங்கள்.

இந்த ஒரு வருடத்தை ‘ஜீவன்
முக்தனாக’ வாழ்வதற்காகத் தியாகம்
செய்யுங்கள்.

உடனே அடுத்த கேள்வி வரும்
“அப்போது அடுத்த வருடத்தில்
இருந்து ஜீவன் முக்தனாக வாழ
வேண்டியது இல்லையா?” என்று
கேட்காதீர்கள். நான் அப்படிச்
சொல்லவில்லை.

> உங்கள் வாழ்க்கையில் பல > வருடங்கள் பல விஷயங்களுக்காகச் > செலவு செய்திருப்பீர்கள் இது > வரைக்கும் வாழ்ந்த வருடங்களில் > பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்குத் > தியாகம் செய்துள்ளீர்கள் உறவுகளை > உருவாக்குவதற்குத் தியாகம் > செய்கிறீர்கள் இந்த ஒரு வருடத்தை > முழுவதுமாக ‘ஜீவன் முக்தனாக’ > வாழ்வதற்குத் தியாகம் செய்யுங்கள்.

இந்த ஒரு வருடத்திலே பழகிக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வருடத்தில் பழகிக் கொள்ளலாம்.

இன்று உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி இதுதான்.

இந்த ஒரு ஆண்டு 'ஜீவன் முக்தனாக வாழ்வது' என்கிற சங்கல்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்தச் சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலமாக, உங்கள் அனைவருக்கும் 'ஜீவன் முக்த தீக்ஷை' அளிக்கிறேன்.

இந்த ஒரே ஒரு சத்தியத்தை மட்டும் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

ஒரு ஞானி,

ஒரு பரமஹம்ஸர்,

ஒரு அவதார புருஷர்,

என்னை 'ஜீவன் முக்தன்'

என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரே ஒரு பலத்தை உங்களின் இதயத்திலும், உங்களின் உணர்விலும், ஒவ்வொரு செயலிலும் வாழ ஆரம்பியுங்கள்.

வாழ்க்கையில் எதை எதிர் கொண்டாலும், வாழ்க்கையில் என்ன முரண்பாடு, என்ன துக்கம் ஏற்பட்டாலும், உடனே நினைத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்லியிருக்கிறார், அவர் வார்த்தை பொய்க்க முடியாது!

ஒரு அவதார புருஷனுடைய வார்த்தை சத்தியம். அவர் சொல்லியிருக்கிறார் என்றால், 'நான் ஜீவன் முக்தன்தான்'.

இப்பொழுது இந்த ஜீவன் முக்தன், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வான் என்று பாருங்கள்.

கட்டாயமாகப் பயமும், குழப்பமும் ஒரு
ஜீவன் முக்தனுக்கு இருக்காது. அதனால்
முதலில் அதைக் கீழே போடுங்கள்.

ஒரு ஜீவன் முக்தன் எப்படி இந்தச் சூழ்நிலையில் நடந்து கொள்வார்?

அவர் எப்படி நடந்துகொள்வாரோ,
அப்படியே நீங்களும்
நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு ஜீவன் முக்தன்தான் என்பதை

Swamiji with devotees

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். உணர்ந்து, உள்வாங்கிக்கொள்ளுங்கள். இதுதான் சூட்சமம். இதுதான் மந்திரச்சாவி.

நீங்கள், ஒரு ஜீவன் முக்தன் என்கிற உணர்வை வைத்துக்கொண்டே, எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளுங்கள்.

எது வந்தாலும் சரி, நான் ‘ஜீவன் முக்தன்’ என்கிற தெளிவோடு எதிர்கொள்ளுங்கள். அப்போது என்ன ஆகும்? உங்கள் வாழ்க்கையில் கவலை என்ற ஒன்றே இருக்காது. குழப்பம் என்ற ஒன்றே இருக்காது. கலக்கம் என்ற ஒன்றே இருக்காது.

என்ன வேண்டுமென்றாலும் வரட்டும் ‘நான் ஜீவன் முக்தன்’ என்கிற உணர்வோடு இருங்கள்.

இனி ஆனந்தம் மட்டும்தான் உங்கள் வாழ்வில் வரும்.

வேறு எதுவும் வராது.

ஒரு ஜீவன் முக்தன், மருத்துவராக இருக்கலாம்.

ஒரு ஜீவன் முக்தன், வியாபாரியாக இருக்கலாம்.

ஒரு ஜீவன் முக்தன், டாக்டராக இருக்கலாம்.

ஒரு ஜீவன் முக்தன், என்ஜீனியராக இருக்கலாம்.

நீங்கள் இவ்வளவு நாள் வரைக்கும் டாக்டராக ஆவதற்கு உழைத்திருப்பீர்கள். என்ஜீனியர் ஆவதற்கு உழைத்திருப்பீர்கள். லாயர் ஆவதற்கு உழைத்திருப்பீர்கள். இப்போது ஜீவன் முக்தராக ஆவதற்காக வாழுங்கள் என்று சொல்கிறோம். அவ்வளவுதான்.

ஒரு ஜீவன் முக்த டாக்டராக வாழுங்கள். ஒரு ஜீவன் முக்த என்ஜீனியராக வாழுங்கள். ஒரு ஜீவன் முக்த வியாபாரியாக வாழுங்கள்.

ஜீவன் முக்தனாக வாழுங்கள்.

என்ன சூழ்நிலை வந்தாலும், இந்த ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘நான் ஜீவன் முக்தன்’.

இதைத்தான் முதலில் நீங்கள் உங்களுக்குள், உங்களைப் பற்றி எடுத்து வர வேண்டிய முதல் கருத்து, முதல் சத்தியம், முதல் உண்மை, முதல் உணர்வு.

‘நான் ஜீவன் முக்தன்’ என்கிற இந்தப் பூர்ணத் தன்மையில் இருந்து இயங்குங்கள்.

அந்தப் பூர்ணத் தன்மையிலேயே நிலைகொண்டு, என்ன செயல்களைச் செய்தீர்களானாலும், அந்தப் பூர்ணத் தன்மை, பூர்ணத் தன்மையையே வெளிப்படுத்தும்.

பூர்ணத்திலிருந்து பூர்ணம் வெளிப்படும்.

குறையே இருக்காது.

'நிறை உணர்வு'தான் பொங்கும்.

நிறை உணர்வில் இருந்து பொங்குகிற நிறை வாழ்க்கையைத்தான் ‘ஜீவன் முக்தி’ என்று சொல்கிறோம்.

அதனால் இந்த ஒரு ஆண்டு ஜீவன் முக்தராக வாழ்வதற்கு என்று தியாகம் செய்யுங்கள்.

இதன் மூலமாக வேறு எந்தப் பக்க விளைவுகள் வந்தாலும் அதையும் வாழ்வதற்குத் தயாராகுங்கள்.

ஆனந்தம் தவிர, வேறு எந்தப் பக்க விளைவும் வராது.

மேலும் நீங்கள் ஏற்கெனவே சம்பாதித்து வைத்திருக்கிற பாதிப்புகள் எல்லாம் சரியாகும்.

உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும், உறவுகளையும் எல்லா வற்றையும் நிறைய பாதிப்புக்குள்ளாக்கி வைத்திருப்பீர்கள்.

அது எல்லாமே குணமாகிவிடும்.

என்னென்ன இருந்தாலும், அது எல்லாமே சுத்தம் ஆக ஆரம்பித்துவிடும். அதனால் இந்த ஒரு ஆண்டை ஜீவன் முக்தனாக வாழ்வதற்குத் தியாகம் செய்யுங்கள்.

அதற்காகவே முழு முயற்சியோடு வாழுங்கள்...