துறவறத்தின் ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
• ஞானமடைய வேண்டுமானால் குடும்பத்தை விட்டுவிட வேண்டுமா?
சந்நியாசியாய் வாழ வேண்டும் என்பது என் சுய முடிவு. உங்களுக்கு அப்படி விருப்பம் இல்லாதபட்சத்தில் ஜனகர்போல, கிருஷ்ணர் போல இல்லறத்திலேயே நல்லறம் செய்யும் ஞானிகளாகலாம். ஞானமடைந்தால் சோம்பேறியாக மாட்டார்கள். ஒரு புரட்சி சந்நியாசியாகவோ, ஒரு சிறந்த வியாபாரியாகவோ, ஒரு நல்ல தலைவனாகவோ அல்லது குடும்பஸ்தராகவோ மாறுவார்கள். ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள் .....
ஞானமடைந்தால், இப்போது வாழும் வாழ்வையே பல்லாயிரம் மடங்கு இனிமையாய் வாழும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்வீர்கள். எதை விடுவது என்பது முக்கியம் அல்ல. எதை அடைவது என்பதுதான் முக்கியம். ஞானமடையுங்கள். நீங்கள் யாராகயிருந்தாலும் அதுவே முக்கியமானது. அதுவே இறுதியானது.