உலகைக் காக்கும் ஜீவன் முக்தராகுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Become Jeevan Mukta.The saviours of planet Earth
எவ்வளவுதான் மாற்றினாலும் மாறிக்கொண்டே இருக்கிற இந்த உலகம் ஒரு நீண்ட கனவுதான் என்கிற யுக்தி. இதைத் தாண்டியது பக்தி.
அது நான்காவது: மாறிக்கொண்டே இருப்பதுதான் உலகம். வாழ்வு, உறவு, சமுதாயம்... என்கிற யுக்தி வந்த உடனே, மாறாத ஒன்றின் மீது ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான தொடர்பு, இணைப்பு ஏற்பட்டுவிடும். அதுதான் பக்தி
இந்த நான்கு நிலையையும் சேர்த்து வாழ்வதுதான் ‘ஜீவன் முக்தி’. இதற்குமேல் வேறு நிறைய வார்த்தைகளை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை.
நான் உங்களோடு பகிர விரும்பும் செய்தியின் மொத்த சாரமும், ஒரே ஒரு வரியில் சொல்கிறேன்...
"ஜீவன் முக்தராக வாழுங்கள்."
நிறைய வார்த்தைகளைச் சொன்னேனென்றால், என்ன செய்கிறீர்கள்? சக்கையையெல்லாம் பிடித்துக்கொண்டு சாரத்தை விட்டு விட்டுப் போய்விடுகிறீர்கள்.
வெளியில் போய் "என்ன சொன்னார்?" என்று கேட்டால், நான் சொன்ன இரண்டு, மூன்று கதைகளையும், ஜோக்கையும் சொல்கிறார்களே தவிர, சாரத்தை விட்டுவிடுகிறார்கள்.
உலகைக் காக்க ஜீவன் முக்தர்களை உருவாக்குங்கள்.
உலகைக் காக்கும் ஜீவன் முக்தர்களாக உருவெடுங்கள்.
படாதபாடுபட்டு ஒரு பெரிய பாகவதர், அரிச்சந்திரர் கதையை நான்கு நாட்கள் சொன்னார். கேட்டு முடித்த மக்கள் வெளியில் எழுந்து வந்தார்கள்.
அதில் ஒருவரிடம், "கதையில் இருந்து என்னப்பா தெரிந்துகொண்டாய்?" என்று கேட்டதற்கு, "உயிரே போனாலும் சத்தியம்தான் பேச வேண்டும்," என்று தெரிந்துகொண்டேன் என்றாராம். இன்னொருவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். "கதையில் இருந்து என்னப்பா தெரிந்துகொண்டாய்?"
அதற்கு அவர், "அவசர ஆபத்து என்றால் மனைவியைக்கூட அடகு வைக்கலாம்," என்று தெரிந்துகொண்டேன் என்றாராம்.
இப்படிப் பலர் சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையைக்கொண்டு செல்கிறார்கள்.அதனால், இப்பொழுது எந்தச் சக்கையையுமே கொடுக்கப் போவதில்லை. சாரத்தை மட்டும் கொடுக்கிறேன். இதை உங்களுக்குள் எடுத்துச் செல்லுங்கள். அதுவே போதுமானது. அது, 'உலகைக் காக்கும் ஜீவன் முக்தராகுங்கள்'.