KAILASA Library/ஜீவன் முக்தி/தூங்கி எழுந்ததும் உள்ள உணர்வே உங்களை எடை போடும் அளவுகோல்Sign in
ஜீவன் முக்தி

தூங்கி எழுந்ததும் உள்ள உணர்வே உங்களை எடை போடும் அளவுகோல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The state of your consciousness atThe time you wake up is a scale of measure of yourself

மாற்றக்கூடியதை எல்லாம் மாற்றும் சக்தி.

அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்கள் வாழ்க்கையே மாறிக்கொண்டு இருக்கிற சக்தி தானே.

எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருக்கிற முயற்சிதான் உங்கள் வாழ்க்கை. மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்ளும் புத்தி.

"எது மாற்ற வேண்டாதது? எது மாற்ற வேண்டியது?" என்று எப்படி தெரிந்து கொள்வது? அந்தப் புத்தியைப் பெறுவது எப்படி?

இந்த ஒரு லக்ஷணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

காலையில் எழுந்திருக்கும்போது தூக்கத்தில் இருந்த உணர்வும், விழித்த உடனே வருகிற உணர்வும் ஒரு அதிர்ச்சியாக இல்லாமல், ஒரு சோர்வாக இல்லாமல் இனிமையான, ஒரு சாந்தமான, சுமுகமான உணர்வுமாற்றமாக, இனிமையாக இருந்தது என்றால், நீ ங்கள் சரியாக வாழ்கிறீர்கள்.

நீங்கள் மாற்ற வேண்டியதை மட்டும் மாற்றுகிறீர்கள். மாற்ற வேண்டாததை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றர்த்தம்.

ஆனால், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் முரண்பாடு இருக்குமானால், எழுந்த உடனே தூக்கத்தில் இருந்த இனிமையான உணர்வு உங்களுக்கு இருக்காது.

"எந்த உணர்வில் இருந்தீர்கள்?" என்று நினைத்துப் பார்க்க சொல்லும்போது "ஆம்! ஏதோ ஒன்று, எதற்குள்ளேயோ போட்டு வைத்து அழுத்தி இருந்த மாதிரி தோன்றியது," என்று சொல்வீர்கள்.

சிலபேர் சொல்வார்கள், "நான் தூங்கும்போது என் மார்பில் உட்கார்ந்து பேய் அமுக்கியது," என்று. உங்களைப் பிடிப்பதற்குத் தனியாக வேறு ஒரு பேய் வர வேண்டுமா? நீங்கள் அந்தப் பேயைப் பிடிக்காமல் இருந்தால் போதாதா?

நாம்தான் நம்மைப் பிடித்த பேய். வேறு யாரும் கிடையாது.

"தூக்கத்தில் ஏதோ ஒன்று என் மார்பில் உட்கார்ந்து அழுத்தியது," என்று பலர் சொல்வார்கள்.

உங்கள் மார்புமேல் உட்கார்ந்து அழுத்துவதற்காக, வேறு யாரோ ஒருவர் உங்களைத் தேடி எங்கேயோ இருந்து பயணம் செய்து வரவேண்டுமா?

நேரில் சென்றாலே பார்த்துப் பேசுவதற்கு ஆள் இல்லை. அதிலும் நீங்கள் தூங்கும்போது அழுத்துவதற்கு யாரும் வரப்போவது இல்லை. அவ்வளவு வேலையில்லாதவர்களாகவா அவர்கள் இருக்கிறார்கள்?

அப்படியென்றால் தெரிந்துகொள்ளுங்கள், நிம்மதியற்ற, பரபரப்பான உணர்விற்குள்ளே இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிறீர்கள்.

சில நேரத்தில் விழித்த உடனே சுமுகமாக இருக்கும்.

சில நேரத்தில் விழித்த உடனே 'அய்யோ! ஏண்டா விழித்தோம்? ஒரு நாள் ஆரம்பித்துவிட்டதே? தூக்கத்திலேயே இருந்திருக்கலாமே! சுகமாக இருந்ததே!'என்று எண்ணும்போதும் அந்த விழிப்பு நிலை டென்ஷனாக இருக்கும்.

சாதாரண நாட்களில் இந்த இரண்டாவது நிலை உங்களுக்கு இருந்தது என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மாற்ற வேண்டாதவற்றை மாற்ற முயற்சிக்கிறீர்கள். அதனால் உங்களுக்குத் தேவை... ஓய்வு.

எனவே ஓய்வு எடுங்கள். அமைதி ஆகுங்கள்.

ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரியுங்கள். ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரிக்கத் துவங்குங்கள்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று...

அது மூன்றாவது, எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற 'கனவுதான்' என்கிற தெளிவு, 'யுக்தி'.'

அது இந்த வினாடியே உங்களுக்குள்ளே வரமுடியும். சத்தியத்தைக் கேட்ட உடனே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவ்வளவுதான்.

'சட்டி சுட்டடடா கை விட்டடடா', நெருப்பைத் தொட்டால் சுடும் என்று தெரிந்த உடனேயே, தொடாமல் விட்டுவிடுவது அவ்வளவுதான்.

"இல்லை, இல்லை. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. தொட்டால் சுடும்தான். ஆனால், தொடாமல் இருக்க முடியவில்லையே?" என்று சொல்கிறோமா, கிடையாது.

தொட்டால் சுடும் என்று புரிந்தவுடனேயே, விட்டால் போதும் என்று விட்டுவிடுகி றோம்.

அதுதான் புத்திசாலித்தனம்.

அதுதான் வாழ்க்கை.

சட்டி சுட்டடடா... கை விட்டடடா...

சட்டி சுடுகிறது. ஆனால், கை விடமாட்டேன்கிறதே! என்ன செய்வது? என்று சொல்கி றாமா?

இல்லை.

அப்படி நம்மிடம் இருந்து கைகளை உடனே எடுத்துக்கொள்ளும் யுக்தி,

தெளிவு.

எனவேதான் சொல்கிறோம்.

யுக்தி நிகழ்வதற்கு தனியாக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அது இப்போதே இங்கேயே நிகழக் கூடியதுதான். மிக எளிதாய் உங்களுக்குள் நிகழ கூடிய தெளிவுதான் யுக்தி சக்தியையும், புத்தியையும், யுக்தியையும் உங்களாலேயே மிக எளிதாகக் கையாள முடியும்.