கடவுளுக்கு நாம் எழுதும் காதல் கடிதம் - பக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Bhakti (Devotion) is our love letter to God
இந்தப் பிரபஞ்சமே மாறிக் கொண்டேயிருக்கிற ஒரு கனவுதான் என்கிற யுக்தி வரும்பொழுது, மாறாத ஒன்றின் மீது ஆழமான பக்தி வரும்.
என்னதான் உலகமே மாறிக்கொண்டு இருந்தாலும், மாறாத ஒன்று எல்லாவற்றையும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறாத ஒன்றின் மீது ஒரு ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான இணைப்பு வரும். அதைத்தான் குரு பக்தி என்று சொல்கிறோம்.
இது எல்லாமே, நீங்கள் நின்றுகொண்டு இருக்கிற பூமி உட்பட, எது மேல் நின்றுகொண்டு இருக்கிறீர்களோ அது உட்பட, உங்களுடைய ஆதாரம் உட்பட, உங்கள் கால் மட்டும் அல்ல, கால் ஊன்றி நின்று கொண்டிருக்கிற பூமி உட்பட, எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிற கனவுதான் என்கிற யுக்தி நிகழும்பொழுது, மாறாத ஒன்றின் மீது உணர்வுப்பூர்வமான
மாறாத ஒன்றின் மீது
ஒரு ஆழ்ந்த உணர்வுப்
பூர்வமான இணைப்பு
வரும் அதைதான் 'குரு
பக்தி' என்று
சொல்கிறேன்.
இணைப்பு ஏற்படுகிறது. அதன் காரணம்கூட தெரியாது.
ஏன் அந்த உணர்வு ரீதியான தொடர்பு வந்தது
என்றுகூட நமக்குத்தெரியாது. ஆனால் அந்த
இணைப்பு இருக்கும்.
> உங்களுக்கே தெரியாமல்
> உங்களுக்குள்ளே
> தூங்கிக்கொண்டு இருந்த
> “பக்தி உணர்வை,” தட்டி
> எழுப்புபவர்தான்
> “ஞான குரு,”
பார்க்கும் பொழுது மட்டும் அல்ல, நினைத்த உடனே நெஞ்சுபொங்கி... தோள் தளர்ந்து, மேனி சிலிர்த்து, உணர்வெல்லாம் குளிர்ந்து, உயிரெல்லாம் உருகிக் கரைகிற உணர்வு அது. அதைத்தான் பக்தி என்று சொல்கிறேன்.
பக்தர்களுக்கு மட்டும், அவர்களைப் பற்றி, அவர்களுக்கே சந்தேகம் வரும். எனக்கு என்ன ஆச்சு...?
உங்களுக்கே தெரியாது. “எப்படிடா இது எனக்குள்ளே நடந்தது? என்ன மந்திரம் போட்டிருப்பாரு? நான் எந்த மந்திரத்திற் கும் அசைகிற ஆள் இல்லையே. எதுக்குமே அசையாத எனக்குள் எப்படி இது நிகழந்தது?” என்று யோசிப்பீர்கள்.
உங்களுக்கே தெரியாமல், உங்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த ‘பக்தி உணர்வை’த் தட்டி எழுப்புபவர்தான் ‘ஞான சத்குரு.’
நமக்குள்ளேயும், வெளியேயும் இருக்கும் கடவுள் சக்திக்கு நாம் எழுதும் காதல் கடிதம்தான் பக்தி.
மாறாத ஒன்றின் மீது ஏற்படுகிற ஈர்ப்பு. அதைத்தான் பக்தி என்று சொல்கிறோம். ச க்தி, புத்தி, யுக்தி, பக்தி ஆகிய இந்த நான்கையும் வாழ்க்கையில் வாழ்வீர்களானால், அதுதான் ஜீவன்முக்தி.