KAILASA Library/ஜீவன் முக்தி/நம் சொந்த ஊரு பூமி இல்லைSign in
ஜீவன் முக்தி

நம் சொந்த ஊரு பூமி இல்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Planet earth is not our native place

எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு நீண்ட கனவு என்கிற யுக்தி, தெளிவு.

இந்த ஒரு யுக்தி பிறந்து விட்டதென்றால் போதும், மிகப் பெரிய சாந்தமும், ஆனந்தமும் நமக்குள்ளே நிறைந்துவிடும். எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு கனவுதான்.

நன்றாக, ஆழமாக, நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இரவு முழுக்க, ஒரு நீ ண்ட கனவில் பெரிய பங்களா ஒன்றைக் கட்டி, நான்கைந்து கார் வாங்குகிறீர்கள்.

100, 200 வேலைக்காரர்களை வைத்து ஏற்கெனவே பளபளவென்று இருக்கிற பங்களாவைத் தேய்த்து, தேய்த்து துடைத்து, இன்னும் பளபளவென்று தயார் செய்து, பின்பு கிரகப்பிரவேச ரிப்பனை நீங்கள் வெட்டும்போது பளிச் சென்று கட்டிலிலிருந்து விழித்துக் கொண்டால் எப்படி இருக்கும்!?

எவ்வளவுதான் மாற்றினாலும், இந்தப் பிரபஞ்சமே, மாறிக்கொண்டே இருக்கிற ஒரு கனவுதான் என்று புரிகிற யுக்தி.

புரிந்து கொள்ளாவிட்டால்கூட அதைத்தான் இப்போதும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி, எவ்வளவு பெரிய குடும்பத்தைச் சேர்த்து, எவ்வளவு பெயர், புகழ் சேர்த்து என்னென்ன இருக்கிறதோ அதையெல்லாம் சேர்த்து வைத்தாலும், எவ்வளவுதான் சேர்த்து வைத்தாலும் திடீரென்று ஒரு நாள் விழித்துக்கொள்வீர்கள்.

விழித்துக்கொண்டு “என்னடா! இது? இவ்வளவு நேரமும் கனவு கண்டுகொண்டு இருந்தோம் போலிருக்கிறதே! இவ்வளவு நாளுமே மனிதனாகப் பிறந்ததாகக் கனவு கண்டுகொண்டு இருந்தோம் போல் இருக்கிறதே!” என்று நினைப்பீர்கள்.

இது ஒவ்வொருவருடைய வாழ்விலும் நடக்கும். நீங்கள் ஞான மடையும்போது இது நிகழும். இல்லாவிட்டால் உங்களுக்கு மரணம் நிகழும்போது இது நிகழும்.

சில நேரத்தில் ஏதோ ஊருக்குப் போய்விட்டு வருகிற மாதிரியே கனவு கண்டிருப்பீர்கள். கனவு கண்டு விழித்த உடனே, “ச்சே... இங்கேதான் படுத்திருக்கிறோமா? அதற்குள் மதுரைக்குப் போகிற மாதிரி கனவு கண்டு விட்டோமோ?” என்று நினைப்பதுபோல், “அடடே! பூமிக்குப் போன மாதிரி கனவு கண்டு இருக்கிறோமே!” என்று நிச்சயமாக ஒருநாள்

எவ்வளவுதான்
மாற்றினாலும்
இந்த உலகமே
மாறிக்கொண்டே
இருக்கிற ஒரு
‘கனவு’

விழித்துக் கொள்வீர்கள்.

அதுதான் உண்மை!

அதுதான் சத்தியம்!!

தூக்கத்திலிருந்து விழித்தீர்கள் என்றால், முதலில் என்ன செய்வோம்? அந்தப் படுக்கையைத் தொட்டுப் பார்ப்போம். தலையணையைத் தொட்டுப் பார்த்துக் கொள்வோம்.

இல்லையென்றால், அந்த அறையை திரும்பத் திரும்ப, சுற்றிச்சுற்றிப் பார்ப்போம். அதே போட்டோ, படம், காலண்டர், கடிகாரம் என எல்லாம் இருக்கிறதா? என்று பார்த்து உறுதி செய்துகொண்டு, "ஓ... நாம் இந்த அறையில்தான் இருக்கிறோம். இந்த ஊரில்தான் இருக்கிறோம்.

அதற்குள்ளே, அமெரிக்கா போனதாகக் கனவு கண்டுவிட்டோமே, போய்விட்டுத் திரும்பி வந்ததாக வேறு நினைத்தோமே," என்று நினைப்பீர்கள்.

இப்படி எவ்வளவுதான் மாற்றினாலும், இந்தப் பிரபஞ்சமே மாறிக்கொண்டே இருக்கிற கனவுதான் என்று மிகத்தெளிவாக உணர்ந்து கொள்கிற யுக்தி.

இந்த யுக்தி நிகழும்போதுதான் நம் சொந்த ஊரு பூமி இல்லை என்பது அனுபவமாகும். நம் சொந்த ஊரு எது என்பதும் தெரியவரும்.