ஜீவன் முக்தி தீக்ஷை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்சரின் ஜெயந்தி தினத்தன்று 2009,
ஜனவரி ஒன்று, பரமஹம்ஸர் அவருடைய
அவதார திருநாளின் பிரசாதமாக உலகுக்கு
அவரளித்த மஹா அருளுரையில் இருந்து
ஜீவன் முக்தர்களாக வாழ விரும்பும்
ஒவ்வொருவருக்குமான முக்தி யுக்திகள்
இங்கு தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது...
-நித்யானந்த தியான பீடம்
31 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
32-வது ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கிறே றாம்.
31 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்து, நான் கேட்டது; கற்றது; தெளிந்தது; தெளிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது அனுபவித்து உணர்ந்தது, இதேபோல் எல்லா நிலைகளிலும் நான் உணர்ந்ததினுடைய சாரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தெளிந்தது! என்றால், நாம் அடைந்த ஞானத் தன்மையை மற்றவர்களுக்கு அளிக்க முடியும், உணர வைக்க முடியும், அனுபவிக்க வைக்க முடியும் என்கிற தெளிவு புரிய ஆரம்பித்தது.
31 ஆண்டுகள் மனிதக் குலத்தோடு, இந்த ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி மற்றும் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி...
இவைகளின் மூலமாக, எதை எல்லாம் நான் உணர்ந்தேனோ, எதை நான் வாழ்கிறேனோ, அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிற செய்தியின் மொத்தச் சாரமும் ஒரே ஒரு வார்த்தை.
‘ஜீவன் முக்தராக வாழுங்கள்’
ஜீவன் முக்தி என்பது என்னவென்றால், Conflict free life முரண்பாடு இல்லாத வாழ்க்கை.
முக்தனாக்கும் யுக்திகள்
இன்னும், ஆழமாக சில வார்த்தைகளை உபயோகப்படுத்தி விளக்கவேண்டுமென்றால்....
முதலாவது: மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றுகிற 'சக்தி' வேண்டும்.
அப்படியென்றால், சோம்பேறித்தனம் இல்லாமல் வாழ்தல்.
சோம்பேறித்தனம் ஞானம் கிடையாது. நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். சோம்பேறித்தனம் ஆன்மீகம் கிடையாது.
மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றக்கூடிய சக்தி.
இரண்டாவது: மாற்ற வேண்டாதவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் 'புத்தி.'
எதையுமே மாற்றாமல் ஏற்றுக்கொள்பவன் 'சோம்பேறி.'
எல்லாவற்றையும் மாற்ற முயற்சி செய்து துக்கப்படுபவன் ‘பேராசைக்காரன்.’
இந்த இரண்டுமே ஜீவன் முக்தி கிடையாது. சக்தியையும், புத்தியையும் சரியாய் உபயோகிக்கும் யுக்தியால் எளிதில் சாத்யமாகக்கூடிய ஒன்றுதான் ஜீவன் முக்தி!
முடியுமா, முடியாதா என்ற தெளிவே ஒரு யுக்தி
Whether 'possible" or 'not",That clarity itself is an understanding
மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றுகிற சக்தி என்றால், உங்கள் தோளிலே பலம் இருக்கும்வரை மாற்ற வேண்டிய விஷயங்களை மாற்றுங்கள்.
அப்படிச் செய்தீர்களானால் அதற்கான சக்தியைப் பெறுவீர்கள். எப்போது ‘உங்களுடைய எல்லை இதுதான்' என்று புரிகிறதோ, அப்போதே “இது என் எல்லைக்கு அப்பாற்பட்டது,” என்று உங்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
“ஏற்றுக்கொள்கிற எல்லை எது?” என்று எப்படித் தெரிந்து கொள்வதென்றால், எப்பொழுதெல்லாம் உள்ளுக்குள்ளே முரண்பாடும், துக்கமும், ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் எல்லையைத் தாண்டுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதாவது, காலையில் எழும் பொழுது, ஒரு துக்கமான உணர்விலிருந்து எழுந்து, வெளியே வருவது மாதிரி இருந்தது என்றால், உங்களின் எல்லையைத் தாண்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அது உங்களின் எல்லையை நீங்கள் தாண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம்.
அதுதான், எல்லையைத் தாண்டுகிறீர்களா, இல்லையா? என்பதற்கு அளவுகோல். காலையில் எழும்போது, சுதந்திரமாக, உணர்ந்தால் உங்களின் எல்லையை தாண்டவில்லை என்றர்த்தம்.
தூக்கத்தில் உங்களுக்கு இருந்த உணர்வுக்கும், விழித்தபோது உங்களுக்கு வருகிற உணர்வுக்கும், இந்த இரண்டு உணர்வுக்கும் முரண்பாடு இல்லாமல், இருக்கிற ஒரு சு தந்திரமான ஒரு இனிமையை உணர்வதுதான் அளவுகோல்.
வெண்ணைக்குள்ளே கத்தி போகிற மாதிரி இனிமையான உணர்வோடு, தூக்கத்திற்குள்ளே போய்விட்டு, அதே உணர்வோடு காலையில் எழும்போது வெளியே வந்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் எல்லையிலே வாழ்கிறீர்கள்.... எல்லையைத் தாண்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால், அந்தத் தூக்கத்திலே இருந்த உணர்வு பரபரப்பாகவோ அல்லது விழித்த உடனே வருகிற உணர்வு பரபரப்பாகவோ இருந்தது என்றால், உங்களுடைய எல்லையைத் தாண்டி உங்களுடைய தோளினுடைய வலிமையைத் தாண்டிய சுமையைச் சுமக்க முயற்சிக்கிறீர்கள் என்றர்த்தம்.
உண்மையில், உங்களின் தோள் வலிமையைத் தாண்டிய சுமையை உங்களால் சுமக்க முடியாது. ஒரு உதாரணம் நம்முடைய கோயில் கோபுரத்தில் பதுமை இருக்கும். அந்தப் பதுமை நினைத்துக் கொள்ளுமாம், அந்த மொத்தக் கோபுரத்தையும் தானே தாங்குவதாக!
ஆனால், அந்தப் பதுமைக்குத் தெரியாது, கோபுரம்தான் அந்தப் பதுமையைத் தாங்குகிறது என்று. அந்தப் பதுமை "இவ்வளவு பளுவை என்மேல் வைத்திருக்கிறார்களே, நான் எவ்வளவு நேரம்தான் இந்தக் கோபுரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது," என்று துக்கப்பட்டதாம்.
அந்தப் பதுமையோட துக்கம் மாதிரிதான், நம்முடைய துக்கமும். நம்முடைய தோளை மீறிய துக்கத்தை நாம் தாங்குவதாக நினைத்தால், அது பதுமையின் துக்கம்தான்.
மிக அழகாக ரமண மகரிஷி, ஒரு கதை சொல்வார்...,
இரயிலில் ஏறியவர் தன் தலைமேலே
இருக்கிற மூட்டையை இரயிலில் இறக்கி
வைக்காமல், அதையும் தலை மேலேயே
வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாராம்.
ஏனென்று கேட்டால்... "ரயிலுக்குப் பளு
இருக்காது, ரயில் இன்னும் வேகமாகப்
போகும்," என்றாராம்.
இப்படித்தான் தேவையில்லாத பளுவோடு மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.
தூக்கத்திலே இருந்த உணர்வு
பரபரப்பாகவோ அல்லது விழித்த
உடனே வருகிற உணர்வு
பரபரப்பாகவோ இருந்தது என்றால்
உங்களுடைய எல்லையைத்
தாண்டி உங்களுடைய
தோளினுடைய வலிமையை
தாண்டிய சுமையைச் சுமக்க
முயற்சிக்கிறீர்கள்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்... எப்போது உங்கள் எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இதுதான் அளவுகோல்.
காலையில் எழுந்த உடனே உங்களிடம் இருந்த உணர்வும், தூங்கும்போது உங்களிடம் இருந்த உணர்வும், எப்படி இருந்தது என்று நினைத்துப் பாருங்கள்.
தூங்கும்போது இருந்த உணர்வும், விழித்தபின் இருந்த உணர்வும், சுதந்திரமாக, இனிமையாக இரண்டிற்கும் எந்தவொரு வித்தியாசமுமே இல்லாதது போல் இருந்ததென்றால், நீங்கள் மிகச்சரியாக மாற்ற வேண்டியவற்றை மாற்றி, மாற்ற வேண்டாதவற்றை ஏற்று, உங்களின் எல்லைக் கோட்டிலேயே வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
காலையில் வருகிற உணர்வு மிக முக்கியமானது. விழித்த உடனே வருகிற உணர்வு என்பது விழிப்பற்ற ஆழ்மனமும், விழிப்பு மனமும் சந்திக்கும்போது வெளிப்படுவது.
உங்களுடைய சக்தியும், புத்தியும் சந்திக்கிற நேரம் அதுதான்.
தூக்கத்தில் இருந்தபோது ரொம்பப் பரபரப்பாக இருந்த மாதிரியோ அல்லது தூக்கத்தில் இருந்து எழுந்தவுடனே, “அய்யோ! ஏண்டா விழித்தோம், தூங்கிக்கொண்டே இருந்திருக்கலாமே... இன்னொரு நாள் ஆரம்பித்துவிட்டதே,” என்று டென்ஷனானீர்கள் என்றால், இரண்டில் ஏதாவது ஒரு பாகம் முரண்பாடு உடையதாக இருக்கும். அப்படியென்றால், நீங்கள் உங்கள் எல்லையை மீறி, மாற்ற வேண்டாதவை களை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அப்போது உங்களுக்குத் தேவை என்னவென்றால், 'Relax Please”
கொஞ்சம் பொறுமை ஆகுங்கள். கொஞ்சம் அமைதி ஆகுங்கள்.
கொஞ்சம் ஆற, அமர ஆழ்ந்து தியானியுங்கள்.
மாற்ற வேண்டியதைக்கூட மாற்றாமலே இருக்கிறவர்களுக்கு இந்தப் பிரச்சினையே வராது. ஏனென்றால் அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கப் போவதே இல்லை. எழுவதைப் பற்றிகூட யோசிக்காதவர்கள் சோம்பேறித்தனத்தின் உச்சம்.
எழுந்தாலும், என்ன செய்யப் போகிறார்கள்? அடுத்த தூக்கம் வரும் வரைக்கும் விழித்துக்கொண்டு இருக்கப் போகிறார்கள்.
இது முழு சோம்பேறித்தனம். அது ஆன்மீக வாழ்க்கை இல்லை.
மாற்ற வேண்டியவற்றை மாற்றும் சக்தி.
மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்ளும் புத்தி.
எதை மாற்ற முடியும்? எதை மாற்ற முடியாது? எதை மாற்ற வேண்டாம்? என்ற தெளிவே ஜீவன் முக்தனாய் வாழ வைக்கும்.