KAILASA Library/ஜீவன் முக்தி/வாழ்வின் சாரமே சேவை நேரம்Sign in
ஜீவன் முக்தி

வாழ்வின் சாரமே சேவை நேரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The essence of life isThe time spent in service

‘கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன’

கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.

கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு உரிமை உண்டேதவிர, பலனை எதிர்பார்ப்பதற்கு இல்லை.

ஒரு அரை மணி நேரம் பலனைப் பற்றி சிந்திக்காமல் ரொம்ப தளர்வாக (relaxed), ஏதாவது ஒரு சமூக சேவை செய்தீர்களானால், பலனை எதிர்பாராமல் வேலை செய்கிற அந்த அரை மணி நேரம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிலருக்கு வீண் போலத் தெரியலாம்.

ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அப்படிப்பட்டவருக்குக்கூட தெரியும், அந்த அரை மணி நேரம்தான் உங்களின் வாழ்க்கையிலேயே சாரம் மிகுந்த இனிமையான நேரம் என்று புரியும்.

அதன் பிறகுதான் தெரியும், அந்த அரை மணி நேரம் நீங்கள் எவ்வளவு தளர்வாக இருக்கிறீர்கள் என்று! அந்த அரை மணி நேரம் உங்களை எவ்வளவு நிம்மதியாக வைத்திருக்கிறது என்று.

இப்படி ஒன்றிரண்டு சின்னச்சின்ன சேவைகளைச் செய்யத் துவங்கினீர்களானால் உண்மையிலேயே உங்களுடைய சக்தி வெளிப்படும், சக்தி விரிவு நடக்கத் துவங்கி விடும்.

சேவை இல்லாத வாழ்க்கை தேவையில்லை. அப்படியே மீறி சேவையில்லாத வாழ்க்கையை வாழ்ந்தால் தேவையில்லாத பல துக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சாரம், சேவை நேரம்.

சேவையின் ரகசியம்

  • தானம், சேவை. என்ன வேறுபாடு? தானம் "நான் கொடுக்கிறேன்," என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய்க் கொண்டது.

சேவை, "மற்றவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா," எனும் பண்பை அச்சாணியாகக்கொண்டு செயல்படுவது.

  • சேவையின் மகத்துவம்? சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைபிடிக்க ஆரம்பிப்பீர்கள். இது அகங்காரத்தைக் கரைக்கும்.
  • சேவையை யார் செய்யலாம்? திமிர்பிடித்தவன்கூட பத்துப்பைசாவை பிச்சைக்காரனுக்குத் தூக்கியெறிந்துவிட்டு... "நான் தானம் செய்தேன்," என காலர் தூக்கிவிட்டு பேசலாம்.

உண்மையான சேவை ஒரு சேவகனால் மட்டுமே சாத்தியம்.

உயர்ந்த உணர்வு நிலையில், நன்றிப் பெருக்கால் பக்தன் கடவுளிடம், சீடன் குருவிடம், மனதளவில் கரமேந்தி, "என்னுடைய சேவை ஏற்றுக் கொள்ளப்படுமா?" என கைக் கூப்பி நிற்பது சேவை. உண்மையான சேவை செய்பவரால் தன் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள்கூட தெய்வத்தைப் பார்க்கமுடியும். நிஜமான சேவையால் மேலும் மேலும் உருகிப்போவார். காரணம் அது, நம்மைத் தெய்வ hisசக்தியின் பாகமாக்கும் யுக்தி.