KAILASA Library/ஜீவன் முக்தி/பலன் எதிர்பாரார சேவை, உங்கள் ஆனந்த வாழ்விற்குத் தேவை!Sign in
ஜீவன் முக்தி

பலன் எதிர்பாரார சேவை, உங்கள் ஆனந்த வாழ்விற்குத் தேவை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Selfless service is what you need for a blissful life!

சமூகத்தின் கட்டுப்பாடே உங்களை யோசிக்கவிடாது. (மனித வளர்ச்சியைக் குன்ற வைக்கக்கூடிய ஒன்றாகவே இன்றைய சமூக அமைப்பு இருக்கிறது) அதனால்தான் சொல்கிறோம், உங்கள் எல்லைகளை விரித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

இன்றைய நாடும், இந்த உலகமும் முன்னேற வேண்டுமானால் உங்கள் எல்லையை நீ ங்கள் விரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன விஷயம். உங்களால் ஐந்து மணி நேரம் வேலை செய்ய முடியுமென்று நீ ங்கள் நம்பினீர்கள் என்றால், அடுத்து ஒரு 10 நாட்களுக்கு மட்டும் ஒரு 6 மணி நேரம் வேலை செய்யுங்கள்.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் என்ன செத்துப் போய் விடுவோமா? சாக மாட்டோம்.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் செத்துப்போய் விடுவோம் என்றால், அந்த உடம்பை வைத்துக்கொண்டு வாழ்கிறதைவிட சாகிறதே மேல். அந்த மாதிரியான ஒரு உடம்போடு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கட்டாயமாக ஒரு மணிநேரம் அதிகமாக சேவை செய்தால் ஒன்றும் செத்துப் போய் விடமாட்டோம். மெதுவாக, சேவையை வாழ்வில் அதிகமாக்குங்கள்.

அடுத்த ஒரு பத்து நாட்களுக்கு ஒரு உறுதியான முடிவு எடுங்கள். "என்ன நடந்தாலும் இப்போது 5 மணி நேரம் வேலை செய்தால், இனி 6 மணி நேரமாவது வேலை செய்தே தீருவது," என்று முடிவு எடுங்கள்.

அதேபோல, இப்பொழுது உங்களுடைய உடலுழைப்பு 2 மணி நேரமென்றால், 3 மணி நேரமாவது உழைத்தே தீருவது என்று முடிவு எடுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்: லாபம் தராத, பணத்தைக் கொடுக்காத, புகழைக் கொடுக்காத ஏதாவது ஒரு சமூக சேவையில், ஒரு நாளைக்கு, ஒரு அரை மணி நேரமாவது செலவிடுங்கள்.

ஒரு தெருவைப் பெருக்குவது, ஒரு கோயிலைத் தூய்மை செய்வது, ஏதாவது ஒரு சமூக சேவை நிறுவனத்திற்கு ஒரு சிறுபணி செய்வது.

இப்படிப் பணத்தைத் தராத, புகழைத் தராத ஏதாவது, ஒரு சமூகப் பணியை நீ

ங்கள் ஒரு அரைமணி நேரம் செய்வீர்களானால், ஏதாவது ஒரு பணியை, முதல்முறையாகக் காரணமில்லாமல், வேலை செய்கிறதனாலேயே பொங்கும் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.

நமக்கெல்லாம் வேலை செய்வது என்றாலே, ஒரு வெறுப்பு வருவதற்குக் காரணம் என்னவென்றால், அந்த வேலை செய்யும் பொழுதே, இந்த லாபம் நமக்கு வரவேண்டும், இந்தப் பலன் நமக்கு வரவேண்டும் என்ற அழுத்தம் மனசு க்குள் வந்து விடுகிறது.

தெரிந்துகொள்ளுங்கள்! இந்த நற்பணி மன்றங்கள் என்ற பெரிய போர்டுகள் போட்டு, செய்வது எல்லாம் சேவை என்று நினைக்காதீர்கள். அதெ ல்லாம் பெயருக்காகச் செய்யப்படுபவை. பெயருக்காகச் செய்யப் படாமல், எந்த ஒரு தனிநபரின் உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்காகவே ஒரு நற்பணி மன்றம் இயங்கினால், அது தொடர்ந்து சேவைகளைச் செய்வதை மட்டுமே மையமாய் வைத்து இயங்கினால் அது நற்பணி மன்றம் அல்ல, கோயில். இப்படிப்பட்ட உண்மையான சேவை மன்றங்களைதான் வீரமிக்க இந்திய இளைஞர்களான நீங்கள் உருவாக்க வேண்டும்.

சேவை மன்றங்களை நாடு முழுவதும், கிராமங்கள் தோறும் எழுப்புங்கள், இந்தியாவைக் காப்பாற்றி விடலாம். தேசபக்தி, கடவுள் பக்தி, நற்பணி என்பது இதுபோன்ற உணர்வுப்பூர்வமான, மக்களுக்கு நேரடியாக உதவக்கூடிய சேவைகளில் இறங்குவதில்தான் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஒரு சின்ன கதை,

சாரணர் படை, பள்ளிகளில் இருப்பார்கள்! scouts என்று சொல்வார்கள். அந்த scout ஆசிரியர் ஒரு நாள், "ஏதாவது ஒரு சின்ன சமூக சேவையாவது செய்து விட்டு வந்து நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்," என்று சொன்னார். மாணவர்கள் எல்லோரும் நாங்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று தினந்தோறும் சொன்னார்கள்.

ஒரு நாள் மூன்று மாணவர்கள் எழுந்து, "ஐயா! நாங்கள் மூன்று பேர் சேர்ந்து, ஒரு வயதான மூதாட்டி சாலையைக் கடப்பதற்கு உதவினோம்," என்று சொன்னார்கள்.

ஆசிரியர் கேட்டார், "அப்பா, ஒரு மூதாட்டி சாலையைக் கடப்பதற்கு ஒருவர் போதுமே, மூன்று பேர் அதற்கு தேவைப்படாதே," என்றார்.

"இல்லை சார், நாங்கள் மூன்று பேர் தேவைப்பட்டோம். காரணம், அந்த மூதாட்டி சாலையைக் கடக்க விரும்பவில்லை, 'கடக்க மாட்டேன்' என்று அந்தப் பாட்டி சொன்னதினால், நாங்கள் மூன்று பேர் சேர்ந்து தூக்கிச்சென்று சாலையைக் கடக்க வைக்க வேண்டியதாகப் போயிற்று,"என்று சொன்னார்.

பேருக்காகவும், புகழுக்காகவும் செய்யப்படும் சேவைகளெல்லாம் திணிக்கப்படும் சேவைகள், தொந்தரவாக முடியும் சேவைகள். அவை, சேவையாக முடிகிற சேவைகள் அல்ல; வேதனையாக முடிகிற சேவைகள்.

அவர்கள் விரும்பி நாம் உதவி செய்தால், ஒருவர் போதும், விருப்பம் இல்லாததினால் மூன்றுபேர் தேவைப்படுகிறது, அவரைச் சாலையைக் கடக்க வைப்பதற்கு!

இதே மாதிரிதான் பெரும்பான்மையான
நேரத்தில், நாம் நம்முடைய வாழ்க்கையிலும்
செய்து கொண்டிருக்கிறோம்.

> பணத்தைக் கொடுக்காத
> புகழைக் கொடுக்காத
> ஏதாவது ஒரு சமூக
> சேவையில்
> ஒரு நாளைக்கு ஒரு
> அரை மணி நேரமாவது
> செலவிடுங்கள்.

பெயரையோ, புகழையோ தரக் கூடியதில்லாத ஏதாவது ஒரு சேவையை, எளிமையான சேவையை, ஒரு அரை மணி நேரம் செய்வது. ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக அந்த கோயிலைத் தூய்மை செய்வது. யாருக்காகவும் அல்ல; உங்களுக்காக.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், யாருக்காகவும் அல்ல; உங்களுக்காக செய்யுங்கள்.

நான் ஏன் இதை செய்யச் சொல்கிறேன் என்றால், ஒரு அரை மணி நேரம் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், இனிமையாக உங்கள் உடல் இயங்குமானால், பலனைப் பற்றியே யோசித்து, மனத்தை வருத்தாமல், உடலை இயக்குவது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

இங்கு அரை மணி நேரம் என்று நான் குறிப்பிடுவது ஒரு உதாரணத்திற்குத்தான். இதை சாக்காக வைத்து வேறு அரை மணி நேரத்தை ஆனந்தத்தை நிறுத்த விடாதீர்கள். இது போன்ற சேவை நாட்டுக்குத் தேவை.

பலனை எதிர்பாராமல் சேவை செய்யும் இதயங்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகத்திற்கு பெரும் தேவைதான். பலன் எதிர்பாராமல் சேவை செய்வது ஆனந்தம், தியானம், தெய்வகுணம்.