KAILASA Library/ஜீவன் முக்தி/ஆனந்தத்தைப் பகிர்வதே ஆன்மீக சேவை!Sign in
ஜீவன் முக்தி

ஆனந்தத்தைப் பகிர்வதே ஆன்மீக சேவை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Sharing bliss is spiritual service!

ஒருமுறை பேராசிரியர் ஒருவர், "சேவை என்றால் என்ன?" என்று கேட்டார். "பகிர்தல்," என பதிலளித்தேன்.

"பகிர்தல் என்றால்?"

ஆம் உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் அது ஆனந்த சேவை அதாவது ஆன்மீக சேவை (Spiritual Service)

உங்களிடம் இருக்கும் பெயர், பதவி, ஆள்பலம் போன்றவை மூலமாக உங்களால் என்னென்ன நல்ல காரியத்தைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ, அதற்காக உங்களின் சமூக பலத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் சமூக சேவை (Social Service)

உங்களிடம் உள்ள பொருட்களையும், சொத்துகளையும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வகையில் பகிர்ந்து கொள்வதே செல்வச் சேவை (Economical Service).

உங்களுடைய அறிவாற்றலை சமூக எழுச்சிக்காகவும், விழிப்புணர்விற்காகவும் பாமரர்களிலிருந்து படித்தவர்கள்வரை பகிர்ந்து கொள்வதே அறிவு சேவை (Intellectual Service)

உங்களின் தனிமனித சக்தியை உலக அமைதிக்கு உதவும் வகையில், தனிநபர் தியானமாகவோ, கூட்டுத்தியானமாகவோ, உழவாரப்பணியாகவோ, சுப வேலைக்கு உதவும் கரங்களாகவோ பகிர்ந்து கொள்வதே தனிமனித சேவை (Individual Service) எனச் சொல்லி முடித்தேன்.

உயர்ந்த மனிதர்கள் அனைவரும் இந்த ஐந்து சேவைகளையும் செய்பவர்கள்

கட்டித்தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால், நீங்கள் வேண்டுமானால் உங்களைப் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பணக்காரர்களாக வாழ முடியாது.

> கட்டித் தங்கத்தை
> பெட்டிக்குள் பூட்டி
> வைத்தால் உங்களைப்
> பணக்காரர்கள் என்று
> சொல்லிக் கொள்ளலாம்
> ஆனால் பணக்காரர்களாக
> வாழ முடியாது.

நிஜமாய் வாழ, வளமாய் வளர, முழுமையாய்ச் செழிக்க, உங்களிடம் இருப்பதையெல்லாம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆனந்தம் கொழிக்க ஆரம்பிக்கும்!

ஆரோக்கியம் தங்க ஆரம்பிக்கும்!!

நிம்மதி முளைக்க ஆரம்பிக்கும்!!!

இப்போது நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது வெறும் வழிப்போக்கர் கூற்று அல்ல.

என் வாழ்வின் போக்கையே மாற்றிய அனுபவக்கீற்று.

பலர் கேட்பதுண்டு, “12,000 தியான சிகிச்சையாளர்களை ஐந்தே வருடத்திற்குள் எப்படி உருவாக்கினீர்கள்?”

அப்போது நான் சொல்வதுண்டு, “நான் உருவாக்கினேன்,” என்று சொல்வதற்கு எனக்கு நேரடியாக எந்த உரிமையும் இல்லை.

இறைசக்தி எனக்குள் தந்த ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அன்றிலிருந்து வற்றாத அமுத சுரபியாக என்னுள்ளிருந்து சக்தியானது பொங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த சக்திதான் 12,000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியவர் இவர் எனும் தகுதியை எனக்குத் தந்திருக்கிறது.”

நீங்களும் பகிர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.

நீங்களும் மகான் என்று போற்றப்படும் தகுதியைப் பெறுவீர்கள்.

பகிர ஆரம்பியுங்கள்!

தகுதியைப் பெறுவீர்கள்!!