உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
(சேவை)
ஒரு ரகசியம்...
நீங்கள் எதை மீண்டும் மீண்டும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறீர்களோ அது மீண்டும், மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.
நீங்களும் அதை நோக்கியேதான் ஈர்க்கப்படுவீர்கள். என்னிடம் பேச ஆரம்பிப்பவர்களில் பலர், "என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களே இருக்க முடியாது," என்று ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர், "எனக்கு நடந்த கொடுமை என் எதிரிக்குக்கூட நிகழக்கூடாது," என்று சொல்வார்கள்.
இன்னும் சிலர் அவர்களோடு எத்தனை மணி நேரம் நான் பேசிக் கொண்டிருந்தாலும், தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதாவது ஒரு துக்ககரமான விஷயத்தையே பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட அன்பர்களுக்கு எப்போதும் நான் சொல்லும் ஒரு சின்ன கதை...
பேராசிரியர் ஒருவர், ஜென் ஞானி ஒருவரிடம் இப்படிக் கேட்டாராம், "பல மணி நேரங்கள் உங்களிடம் பேசிவிட்டுச் சென்றாலும், சில நிமிடங்களே உங்களோடு பேசி விட்டுச் சென்றாலும், என் மனம் மிகவும் அமைதியாகிவிடுகிறது.
ஆனால், வீட்டிற்குப் போனதுமே மீண்டும் பழையபடியே துக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறதே, ஏன்? ஆனால், நீங்கள் மட்டும் ஆனந்தமாகவே இருக்கிறீர்களே! எப்படி?"
அதற்குச் சிரித்தபடியே ஜென் ஞானி சொன்னாராம், "நான் உங்களோடு என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் எப்போதும் என்னோடு உங்களின் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறீர்கள். அதுதான் காரணம்."
அருமையான பழமொழி ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 'பெட்டிக்குள் பூட்டி வைத்த கட்டித்தங்கம்'. இப்படி வைத்திருப்பதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது.
கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தம்மிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
காரணம் இருவரின் முகமும்
துக்கமாகவேயிருக்கும். இருவரின்
உணர்வும் துவண்டுபோயிருக்கும். கேலி
கூத்துக்காகக் கும்மாளமடிப்பதைத் தாண்டி,
நிஜமாகவே தம்முடைய ஆனந்தத்தை
மற்றவர்களுடன் பகிர ஆரம்பிக்கும் பொழுது
அவருக்குள்ளிருக்கும் ஆனந்தத்தின் அளவும்
அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
கஞ்சனாய் இறப்பதும்,
பிச்சைக்காரனாய் இறப்பதும்
ஒன்றே. தன்னிடமிருக்கும்
ஆனந்தத்தை மற்றவரிடம்
பகிர்ந்து கொள்ளாத
ஒருவருக்கும் ஒரு மன
நோயாளிக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை.
அப்படிப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் அவரின் உள்ளுணர்வானது துவண்டு போக ஆரம்பிக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி மன நோயாக ஒரு நாள் அது வெளிப்படும்.
எல்லா மன நோயாளிகளும் ஆனந்த மயமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களே.
உலகத்தோடு ஆனந்தத்தைப் பகிர்வது நிறுத்தும் பொழுது, உலகத்தில் இருக்கும் துக்கம் உங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடும்.