KAILASA Library/ஜீவன் முக்தி/பிரார்த்தனையில் உருகுபவர் சொர்க்கத்தில் வாழ்கிறார்Sign in
ஜீவன் முக்தி

பிரார்த்தனையில் உருகுபவர் சொர்க்கத்தில் வாழ்கிறார்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The one who melts in prayer, lives in heaven

பிரபஞ்ச சக்தியின் மீது பொங்குகிற அன்பினாலும், ஈடுபாட்டாலும், பிடிப்பாலும், உணர்வு ரீதியாக இணைவதால் கோர்க்கும் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்த கண்களையும் உடையவர்கள் கொடுத்து வைத்தவர்கள், புண்ணிய சாலிகள், சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள்.

இவருக்கு, இதற்கு மேலே இந்தப் பூமியில், தனியாக வேறு ஒன்றும் தேவை இல்லை.

இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார், “கடவுளுடைய பெயரையோ, குருவுடைய பெயரையோ, நினைத்த மாத்திரத்திலேயே, யாருடைய கண்களில் நீர் கோர்க்கிறதோ, அவருக்கு இதுதான் கடைசி ஜென்மம்,” என்று சொல்கிறார்.

‘இதுதான் கடைசி பிறவி’ என்று சொல்கிறார். ‘இன்னொரு பிறவி இல்லை’ என்று சொல்கிறார். எப்போது, கடவுளுடைய பெயரையோ, குருவுடைய பெயரையோ, சொன்னமாத்திரத்திலேயே, கேட்ட மாத்திரத்திலேயே, கண்கள் பனிக்கின்றனவோ, கண்கள் கரைகின்றனவோ, உணர்வு உருகுகிறதோ, அப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள், இதுதான் உங்களின் கடைசிப் பிறவி.

இதைத் தாண்டி செய்வதற்கு வேறு ஒன்றும்
இல்லை. அதே உணர்வோடு வாழ்வதுதான்
‘ஜீவன் முக்தி’ என்று சொல்கிறோம்.
பிரார்த்தனைக்கு, உங்களை ஜீவன் முக்தியில்
வாழ வைக்கிற பலம் உண்டு. ஆழ்ந்த அந்த
உணர்வுக்குள் சென்று, இந்தச் சூத்திரத்தை
உள் வாங்குங்கள்...

பிரார்த்தனையில் உருகுங்கள்., சொர்க்கத்திலேயே வாழ்வீர்கள்.

> “கடவுளுடைய பெயரையோ.
> குருவுடைய பெயரையோ
> நினைத்த மாத்திரத்திலேயே.
> யாருடைய கண்களில் நீர்
> கோர்க்கின்றதோ. அவருக்கு
> இது தான் கடைசி ஜென்மம்”