KAILASA Library/ஜீவன் முக்தி/பக்தி விதை தூவ, ஞானமரம் வளரும்Sign in
ஜீவன் முக்தி

பக்தி விதை தூவ, ஞானமரம் வளரும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

When seeds of devotion are sown, The tree of enlightenment grows

பிரார்த்தனை உணர்வு உங்களுக்குள்ளே மலர்ந்தது என்றால், இப்போது இந்தச் சூத்திரம், விதை மாதிரி உங்களுக்குள் விழும்.

விதையைச்சுடானமே மாத வெயிலிலோசித்திரைமாத வெயிலிலோ கொதித்துக்கொண்டு இருக்கிற வெயிலிலோ, பாறை மீதும் போடலாம். இல்லையென்றால் உழுது, நீ ர்வார்த்து, தயாராக இருக்கிற நிலத்தின் மேலேயும் போடலாம்.

உங்களுக்கே நன்றாகப் புரியும், "எந்த நிலத்திலே விதை விதைத்தால் விதை விளையும்," என்று. நெருப்பு போல் கொதித்துக் கொண்டிருக்கிற பாறை மேலே விழுந்த விதை வறுக்கப்பட்டு விடும். பொரியாக வேண்டுமானால் அது மாறலாம். ஆனால், உழுது, நீ ர்வார்த்து, உரமிட்டு, தயாராக இருக்கிற நிலத்திலே, விழுகிற விதை செழித்து வளரும்.

இந்தச் சூத்திரம் விதை மாதிரி.

"பிரார்த்தனை உணர்வோடு, உள்வாங்கும் தன்மை இருக்கிற மனத்திலே, இந்தச் சூத்திரம் விழுமானால், உடனடியாக அது அனுபூதியாக மாறும்.

அப்படி இல்லாமல், கரடுமுரடான துக்கமான, கொதித்துக் கொண்டிருக்கிற பாறையைப் போல் இருக்கிற, கல் நெஞ்சத்தின் மீது இந்த விதை விழுமானால், அது விதையையும் அழித்துவிடும். பாறைக்கும் உதவி இல்லை, இந்த விதைக்கும் உதவி இல்லை.

மிகப்பெரிய சித்து ஆடுவது எதுவென்றால், சித்தங்களுக்குள் ஆடுதல். சித்தங்களை ஆளுதல். சித்தங்களுக்குள் ஆடுதல். சித்தங்களை ஆளும் சக்தி மலரவேண்டும் என்றால், உங்களின் சித்தம், பிரார்த்தனை உணர்வால் நிரம்பியதாக இருக்க வேண்டும்.

பிரார்த்தனை உணர்வால் நிரம்பும் பொழுது, இந்தச் சத்தியங்கள் அந்த வினாடியே, உங்களுக்குள் வெளிப்படும்.

அந்த உணர்வு ரீதியான தேவைகளை ஏற்படுத்தாமல், இந்தச் சூத்திரங்களை எல்லாம் கேட்டாலும் உபயோகம் இல்லை. கல்லின் மீது எறியப்பட்ட பந்துமாதிரிதான் அது திரும்பி வரும். உபயோகம் இருக்காது.

ஆனால், அந்த ஆழமான பிரார்த்தனை உணர்வு ஏற்பட்டு, எப்போதும் நம் உணர்விற்குள்ளே, நம்மைத் தாண்டிய தாக்கத்தை உருவாக்கவல்ல பிரபஞ்ச சக்தி ஒன்று உண்டு.

அதோடு அந்தச் சக்தி நம்மை இணைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து கண்கள் கரைந்து, உணர்வு நிறைந்து இருப்பது ஞானத்தை வளர வைக்கும். ஆழ்ந்த பிரார்த்தனையிலேயே உங்களுக்குள் பக்தி எனும் விதையை பிரார்த்தனை தூவ தூவ ஞானமரம் வளர ஆரம்பிக்கும்.