பிரார்த்திக்கும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
AllThe moments of prayer are moments of energy darshan
உங்களின் உணர்வு பழுக்காதபோது, என்ன மாதிரி குரு தேவை?
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். அங்கம் பழுத்து விட்டால் வேறு யாரும் தேவையில்லை. தானாகவே இறை சக்தியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
உணர்வு பழுக்காதபோது, உள்ளே பழுக்காத போதுதான், ஒரு குருவின் தொடர்பு தேவைப்படும்.
நிதர்சனமாகக் காட்டக் கூடிய ஒரு குருவின் துணையும், உதவியும் தேவைப்படும்.
குரு என்பவர் யார்?
உங்களுக்குப் புரிகிற மொழியில், உங்களுக்குப் புரிகிறவிதத்தில், "பார் அப்பனே, நீ பிரார்த்தனை செய்தால் இது நடக்கிறது. தியானம் செய்தால் நீ கேட்பது எல்லாம் கிடைக்கிறது,'' என்று உங்களுக்கே நிரூபிக்கக் கூடிய ஒரு விஞ்ஞானியைத்தான் குரு என்று சொல்கிறோம்.
ஆனால், நம் உணர்வு ஆழ்ந்து பழுத்து விட்டால், விஞ்ஞானி இல்லாமலேயே, நிரூபணம் இல்லாமலேயே, நம்மால் இறைசக்தியை அடைய முடியும்.
(சுவிட்சைப் போட்டால் பல்ப் எரியும்
என்பதை, எலக்ட்ரீசியன் ஒரு முறை செய்து
காண்பித்தால் போதும் அல்லவா!) தினமும்
நமக்குப் போட்டுப் போட்டுக் காண்பிக்க
வேண்டுமா? தேவையில்லை அல்லவா?
நீங்களே போட்டுக் கொள்வீர்கள் அல்லவா? அது மாதிரி, ஒரு தரம் போட்டுக் காண்பிக்கிற வேலையை, ஒரு தரம் உங்களைப் பிரார்த்தனை செய்ய வைத்து, “நடப்பதைப் பார்,” எனப் புரிய வைப்பதுதான் ஞான சத்குருவின் வேலை. அதற்குப் பிறகு தானாகவே என்ன செய்வீர்கள், இந்தப் பக்தியும், பழக்கமும் உங்களுக்குள் மலர ஆரம்பித்து விடும்.
ஒரே ஒரு முறை பிரார்த்தனையின் வலிமையை உணருமளவிற்குப் பிரார்த்தித்து விட்டால், வேண்டும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனத்தைப் பெறுவதற்கான சூட்சுமத்தை அறிந்து கொள்வீர்கள்.
‘நட்ட கல் பேசும், நாதன் உள் இருக்கையில்’ என்ற ஆழமானதொரு பிரார்த்தனை நடக்கிற ஒவ்வொரு வினாடியும், உங்களுக்குள் திரும்பி பார்த்தீர்களானால், சக்தி தரிச னத்தை நீங்கள் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பது தெளிவாய்த் தெரிய வரும்.
எலி, புலியாக மாற வேண்டுமென்றால், மூன்று செயல்கள் நடக்க வேண்டும்.
அந்த எலி, முதலில் அதன் மூலப்பொருளாக மாறியாக வேண்டும். அதாவது களி மண்ணாக மாற வேண்டும். இரண்டாவது, அந்தப் புலி என்கிற அச்சுக்குள்ளே அது போயாக வேண்டும். மூன்றாவது, இந்த அச்சில் தன்னை அது நிலைநிறுத்த வேண்டும். அதிலேயே நிறுத்தப்பட வேண்டும். அப்படியே ஸ்திரமாகி விடவேண்டும்.
இந்த மூன்றையுமே, பிரார்த்தனை உங்களுக்குள்ளே நடத்தும்.
முதலில், குறைகளை உணர்கிற அகங்காரமான ‘நான்’ அழிந்து மூலப் பொருளுக்குள்ளே கரையும்.
இரண்டாவது, அது எதுவாக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, நீங்கள் எந்தப் பிரார்த்தனையை நம்புகிறீர்களோ, இப்போது இருக்கிற நிலையைவிட எந்த மேல்நிலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த நிலைக்கு வடிவம் உருவாக்கி, அந்த வடிவத்திற்குள் உங்களுடைய சக்தி முழுவதும் நிரப்பப்படும்.
மூன்றாவது, அந்தப் புது மனிதராகவே நீங்கள் மலர்ந்து வெளிப்படுவீர்கள்.
இந்த மூன்று விதத்தில்தான், பிரார்த்தனை எனும் சக்தி வெளிப்படுகிறது.
நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனை சக்திக்கு, அவ்வளவு பெரிய பலம் உண்டு.நம் உடலையே உருக்கி, வேறு ஒரு உடலாக மாற்றக்கூடிய சக்தியும், நம்முடைய உணர்வையே உருக்கி வேறு ஒரு உணர்வாக மாற்றக்கூடிய சக்தியும் நம்முடைய வாழ்க்கையையே உருக்கி வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக்கூடிய சக்தியும் பிரார்த்தனைக்கு உண்டு. துணியை அடித்துத் துவைத்து வெளுக்க வைப்பதைப் போல, நம்முடைய உணர்வை அடித்துத் துவைத்து அதை வெண்மை ஆக்குகிற, ஜொலிஜொலிக்க வைக்கிற சக்தி பிரார்த்தனைக்கு உண்டு.
பிரார்த்தனை உணர்வோடு நாம் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் சக்தி தரிசனம் பெற்றுக் கொண்டேதான் இருக்கிறோம்.
பிரார்த்தனை உணர்வோடு வாழ்வதற்கு மட்டும், இடம்... நேரம்... காலம் தேவையில்லை.
செலவு இல்லாத ஆன்மீக சாதனை பிரார்த்தனை.
காரில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும், நடந்து போனாலும், அந்த உணர்வுடனே இருந்துகொண்டே இருத்தல் என்பது, நம்மை முழுமையான பக்திக்குள் மலர்த்தி விடும்.
அந்த உணர்விலேயே நம்மை எப்போதும் வைத்திருப்பதே குருவின் வேலை.
ஏனென்றால் பிரார்த்திக்கும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனம் பொங்கிக்கொண்டே இருக்கும்
இணைக்கும் யுக்தி-4