உங்களோடு கடவுள் பேசுகிறார்; கவனியுங்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Listen! God is talking to you
நன்கு புரிந்துகொள்ளுங்கள்! நம்முடைய ஆஸ்ரமத்தில் உள்ள ஆனந்தேஸ்வரர் ஆலயம், நாம் வந்த பிறகு செய்து வைத்தது என்று நினைக்காதீர்கள்.
மூர்த்தி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபடும் மூர்த்தி அது.
இங்கு இருக்கிற பல கிராமத்து மக்கள், பாவாடை புருஷன் என்றும், சித்தபுருஷன், உலவும் ஞானி என்றும் அவரைச் சொல்கிறார்கள்.
நானே பார்த்து இருக்கிறேன். அந்த மரத்தோடு பேசுவார்கள். இவர்களுடைய கதையையும் சொல்வார்கள்.
பல தடவை இதைப் பார்த்து இருக்கிறேன். வயதான பாட்டிகள் வருவார்கள். வந்து ஆலமரம் முன்பு நின்று பேசுவார்கள்.
"என் மாடு தொலைந்து போய் விட்டது," என்பார்கள், பின்பு சிறிது நேரம் கழித்து "ஓ! தெற்கு திசையில் நான்காவது வீட்டில் இருக்கிறதா? நான் போய் ஓட்டிக்கலாமா? சரி, நான் போய் அதை ஓட்டிச்செல்கிறேன்," என்று சொல்லி விட்டுப் போவார்கள்.
நான், சில நேரத்தில் யோசிப்பதுண்டு. 'என்னடா இது பைத்தியங்கள், இவர்கள் பிரார்த்தனை செய்தால் சரி. ஆனால் அங்கிருந்து பதில் வருகிற மாதிரி, இவர்களே பேசுகிறார்களே!'
சில நேரத்தில் cell phone-ல் , "என்னப்பா, சாமான் காணாமல்
உங்களை உருக்கி
எதுவாக நீங்கள் மாற
விரும்புகிறீர்களா,
அதுவாகவே
மாற்றுகிறதுதான்
பிரார்த்தனை
போய் விட்டது... ஓ! தெற்குப் பக்கமாக இருக்கிறதா? சரி, எடுத்துக் கொள்கிறேன். எடுத்திட்டு வந்து உன்னை பார்க்கிறேன்,'' என்று பேசுகிறீர்கள் அல்லவா அது போலவே பேசுவார்கள்.
உண்மையிலேயே, அவர்கள் சொன்ன அந்த வீட்டிற்குச் சென்று மாட்டை ஓட்டிக்கொண்டு மூன்று நாட்களுக்குள் வருவார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு தரம் அல்ல, இரண்டு தரம் அல்ல. ஆயிரக்கணக்கான முறை பார்த்து இருக்கிறேன்.
எந்த விதமான இடைத்தரகர்களும் இல்லாமல், நேரடியாக அவர்களே, இறை சக்தியிடம் தொடர்பு கொள்வார்கள்.
இப்படி கடவுள் சக்தியோடு பேசுவது என்பது எங்கோ இதிகாசத்தில் மட்டுமே நிகழக்கூடிய அற்புதம் அல்ல. நீங்கள் வாழும் இதே மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம். இதை அதிசயம் என்றுகூட சொல்ல முடியாது. இந்த மண்ணில் கடவுளோடு பேசுவது என்பது சகஜம். கடவுள் உங்களோடு பேசுகிறார். நீங்கள்தான் கவனிக்க வேண்டும். கவனித்தாலே போதும். கண்டுகொள்வீர்கள்
இணைக்கும் யுக்தி-3