நினைத்ததை அடைய உதவும் பிரார்த்தனை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
PrayerThat helps you fulfill your wishes
வள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்,
"தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்."
நீங்கள் யாரிடம் பிரார்த்தனை செய்கிறீர்களோ, அவர்கள் கொடுக்கிறார்கள், கொடுக்கவில்லை, அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், உங்கள் பிரார்த்தனைக்கே, நீங்கள் கேட்பவற்றை அளிக்கிற சக்தி உண்டு.
வேறு ஒன்றும் வேண்டாம். பெரிய கடவுளையோ, குருவையோ, தேடிப்போய் பிரார்த்தனை செய்ய வேண்டாம்.
ஒரு கல்லை நட்டு அதன் முன்னால் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும் நீங்கள் நினைத்தது எல்லாம் நிகழ!
"நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்," என்று சிவவாக்கியர் சொல்கிறார். "நட்ட கல்லும் பேசுமே, நாதன் உள் இருக்கிறார் என நம்பினால்...!"
கல்லாக இருந்தாலும், மண்ணாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உட்கார்ந்து ஆழ்ந்து பிரார்த்தியுங்கள்.
அந்தப் பிரார்த்தனை சக்தியே மிகத்தெளிவாக, அதுவே பலன் தந்து விடும்.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிரார்த்தனைக்கு ஒரு மிகப்பெரிய சக்தி உண்டு. பிரார்த்தனை என்பது என்னவென்றால், உங்களை உருக்கி, எதுவாக நீங்கள் மாற விரும்புகிறீர்களோ, அதுவாகவே உங்களை மாற்றுவதுதான் பிரார்த்தனை.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார்.
"உங்கள் பிரார்த்தனை, உங்களின் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்தப் பிரபஞ்ச த்தோடு உங்களை இணைத்து விடுவதனால், நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாகவே, தானாகவே நீங்கள் மாறி விடுகிறீர்கள்," என்று மிக அழகாகச் சொல்வார்.
எந்த விக்ரஹத்திற்கு முன்பு உட்கார்ந்து பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கவலைப் படாதீர்கள். இராமரிடம் கேட்கிறீர்களா, இராமகிருஷ்ணரிடம் கேட்கிறீர்களா, கிருஷ்ணரிடம் கேட்கிறீர்களா, சிவனிடம் கேட்கிறீர்களா என்று கவலையேபடாதீர்கள்.
பிரார்த்தனையின் முன் கல்லும் கரையும். ஒரு கல்லை எடுத்து நட்டு வைத்து, அதனிடம் கேட்டீர்கள் என்றால்கூட போதும்.
வேறு ஒன்றும் தேவையில்லை. ஆழ்ந்து உருகுங்கள்.
கல் கடவுளாக மாறும்.
பிரார்த்தனை என்பது நமக்குக் கற்றுக் கொடுத்தபடி பாமரர்கள் செய்யும் ஒன்றல்ல.
மிக எளிதாக தாம் நினைத்ததை அடைந்துவிட நினைக்கும் ஒவ்வொரு புத்திசாலிக்குமான சக்திவாய்ந்த யுக்தி பிரார்த்தனை.
இணைக்கும் யுக்தி-2