KAILASA Library/ஜீவன் முக்தி/உங்களைப் பிரபஞ்சத்தோடுSign in
ஜீவன் முக்தி

உங்களைப் பிரபஞ்சத்தோடு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இணைக்கும் யுக்தி

(பிரார்த்தனை)

இரண்டுவிதமாக சக்தி தரிசனத்தை நீங்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். ஒன்று ஏற்கெனவே பிரார்த்தனையின் வடிவமாகவே இருக்கும் சத்குரு நாதரிடமிருந்து சக்தி தரிசனத்தைப் பெறலாம் அல்லது ஆழ்ந்த பிரார்த்தனையால் உங்களுக்குள்ளேயே ச த்குருவின் சாரமாகப் பொங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம சக்தியைத் தரிசிக்கலாம்.

சக்தி தரிசனம் என்கிற பெரும் சக்தி பொங்கும் பொழுது, இரண்டுவிதமான நிகழ்ச்சி கள் நிகழலாம்.

அடித்துச் செல்லப்படுவது ஒன்று, அதனோடு இருந்து, அதில் குதித்து, அதனுள் மூழ்கி, ஆனந்தத்திலேயே நிறைவது, மற்றொன்று.

இப்போது இந்த ஆனந்தத்தில் நிறைவதற்கான வழி என்ன என்பதைக் காண்போம்.

ஆழ்ந்த பிரார்த்தனையோடும், உருகிய மனநிலையோடும் இருப்பதே நம்மை ஆனந்தமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் வழி. இறை சக்தியோடு இணைக்கும் யுக்தி.

மிக அருமையாக இராமகிருஷ்ணர் பிரார்த்தனையின் மகத்துவத்தைப் பற்றி சொல்வார்.

அவருடைய முதல் உபதேசம் இதுதான்.

“பிரார்த்தனைக்கே வரம் தரும் சக்தி உண்டு.”

எலி புலியாவதுதான் பிரார்த்தனை.

இராமகிருஷ்ணர், அமுதமொழியில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முறையாவது அவர் சொல்கிற உபதேசம் இதுதான், “சிறுபிள்ளையைப்போல, ஆழ்ந்த, தீவிரமான ஏக்கத்தோடு, உருகிய மனநிலையோடு இறைவனை நோக்கிப் பிரார்த்தியுங்கள்.”

> “சிறுபிள்ளையைப்போல
> ஆழ்ந்த தீவிரமான
> ஏக்கத்தோடு உருகிய
> மனநிலையோடு
> இறைவனை நோக்கிப்
> பிரார்த்தியுங்கள்.”

ஏதோ ஒரு காரணத்தினால், சமூகமானது,
பிரார்த்தனை நமக்கு அளிக்கிற பலத்தை
நம்மிடமிருந்து அழித்து விட்டது.
பிரார்த்தனை என்றால் என்னவென்று ஆழ்ந்து
புரிந்துகொள்ளுங்கள்.

இப்போது, உதாரணத்திற்கு, நீங்கள் களிமண்ணால் செய்த ஒரு எலியாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த எலி, எலியாக இருக்க விரும்பவில்லை! புலியாக மாற விரும்புகிறது.

அப்போது இந்த எலி என்ன செய்ய வேண்டும்? திரும்பவும் அது உடைந்து, மூலப்பொருளாக, களிமண்ணாக மாற வேண்டும்.

அந்தக் களிமண்ணுக்கு புலியாக வடிவம் கொடுக்கப்படவேண்டும்.

எலியாக இருக்கிற சிலை நொறுக்கப்பட்டு, களிமண்ணாக மாறி, புலி என்கிற வடிவத்திற்குள்ளே, புலியாக எலி வெளிப்படுவது நிகழ வேண்டும்.

இந்த மாற்றத்தைத்தான், இந்த நிகழ்ச்சியைத்தான் பிரார்த்தனை என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு, நீங்கள் இப்போது ஒரு சாதாரண மனிதனாக இருக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு மேம்பட்ட நிலையுடைய மனிதராக மாறவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

நன்கு இதைப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு வீடு வேண்டும், கார் வேண்டும் என்ற ஒரு தீவிர ஈடுபாடு உங்களிடம் உள்ளது என்றாலே நீங்கள் இன்னொரு மனிதராக மாற வேண்டுமென விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள்.

ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கேட்கிறீர்கள் என்றாலே என்ன அர்த்தம்? இப்போது இருக்கிற உங்களின் நிலையை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆழமாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவ்வளவுதான். அதுதான் பிரார்த்தனை.

இப்போது இருக்கிற நிலையில் இருப்பதை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்லவேண்டும் என்று நினைப்பதே, உங்களை புதுமனிதராக மாற்ற ஆரம்பிக்கும் உத்வேகம்தான். இப்போது இருக்கிற உங்களுடைய பர்சனாலிட்டியை மாற்றி, நீங்கள் விரும்புகிற புது பர்சனாலிட்டியை உருவாக்கி, அதுவாகவே உங்களை மாற்றுகிற பிரார்த்தனை என்ற ஆழ்ந்த தியானத்திற்குள் நுழையும் போதே நீ ங்கள் அதற்கான அஸ்திவாரம் இட்டு, அந்த வேலையைத் துவக்கி விட்டீர்கள்.

People engaged in an activity during a gathering or meditation session