பொறுப்பெடுப்பதே உங்கள் வளர்ச்சியின் அளவுகோல்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Taking responsibility isThe scale of your growth!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஞானமடைதல் என்பது மிகப்பெரிய பொறுப்பை எடுக்கும் போதுதான் நடைபெறுகிறது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அபரிமிதமான கருணையால் அந்த ஞான அனுபூதி உங்களுக்குள் மலரும்.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நீங்கள் எந்த அளவுக்குப் பொறுப்பு எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்குள் சக்தியானது அபரிமிதமாகப் பொங்க ஆரம்பிக்கும்.
உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்று எப்போது உணர ஆரம்பித்து விடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் தலைவராகி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையை உருமாற்றம் செய்வீர்கள். மற்றவர்கள் வாழ்க்கையிலும் உருமாற்றம் நிகழச் செய்வீர்கள்.
பொறுப்பு எடுத்தல் என்பது, நீங்கள் விழிப்புணர்வுடன் வளர்வதற்கான ஒரு வழி.
அதற்கு, நீங்கள் இரண்டு விஷயங்கள்தான் செய்ய வேண்டும்.
‘வாழ்வில் நிகழ்வது எல்லாம் நன்மையே’ என்று நம்பிக்கை கொள்ளுதல், மற்றும் உருமாற்றம் நிகழும்வரை பொறுமையாக இருத்தல்.
எந்த அளவுக்குப் பொறுப்பு உணர்வை அதிகரிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு விரிவடைவீர்கள்.இன்னொரு முக்கியமான விஷயம், பொறுப்புணர்வானது விரிவடையும்போது, வெறுமனே பற்றிக்கொள்ளுங்கள். அடுத்து என்ன நிகழப் போகிறது என்று எதிர்பார்க்க வேண்டாம்.
உங்களுக்குள் உருமாற்றம் நிகழும்வரை பொறுமையாக இருங்கள்.
உருமாற்றம் நிகழும் காலத்தைத்தான், நாம் ‘தபஸ்’ என்று அழைக்கிறோம்.
சீரடி சாய்பாபாவின், அருமையான போதனைகளில் ஒன்று. ‘ச்ரத்தா சபு’ அதாவது “பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்.” இதுதான் வாழ்க்கையின் சாரம். உங்களால் விரிவடைய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் பிறகு, எல்லாப் பொறுப்புகளுக்கும் விரிவடைந்து விடுவீர்கள்.
என்ன என்ன உடன்பாடு கொள்கிறீர்களோ, அதற்கும் விரிவடைந்துவிடுவீர்கள். உருமாற்றமோ, அல்லது உங்கள் எல்லை விரிவடையும் போதோ பொறுமையாக இருங்கள்.
அவ்வளவுதான், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.
வேறு ஒன்றுமில்லை இந்த ஒரே ஒரு யுக்தியை மட்டும் உபயோகித்துப் பாருங்கள். ஒரு இருபத்து நான்கு மணி நேரத்திற்கு, நீங்கள் பொறுப்பு எடுத்து எழுந்து நின்றீர்கள் என்றாலே போதும்... எந்தக் காரியம் எல்லாம் முடிக்கப்படாமல் குறையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ, அந்த அனைத்துக் காரியங்களும் அந்த ஒரே நாளில் முடித்துவிடும் சக்தி பொங்க ஆரம்பித்துவிடும்.
உங்கள் மொத்த வாழ்க்கையுமே மாறி புதுவிதமான மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் மலரத் துவங்கிவிடும். புதுவிதமான பரவசநிலை உங்களைச் சூழ்ந்துகொள்ளும். உங்களின் இயல்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள். நீங்கள் இயற்கையான தலைவராகி விடுவீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டமாக மாறிவிடும்.