பொறுப்பெடுப்பவர்களுக்கு எதனாலும் பாதிப்பில்லை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
The ones who take responsibility are not affected by anything!
மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுத்தல்:-
பொறுப்பெடுத்தல் என்பதுதான், நம் வளர்ச்சிக்கான ஒரே வழி. மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுத்தல் என்பது, ஞானமடைவதற்கான, ஒரு நுட்பம்.
இதைத்தான் பகவத்கீதை ‘கர்மயோகா’ என்று சொல்கிறது.
உண்மையில் நீங்கள், கர்மத்தைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தீர்கள் என்றால், அதாவது மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுக்க வேண்டுமென்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்.
உங்களுடைய கருணையினாலேயே, உங்களின் பொறுப்புணர்வை உணர்வதனாலேயே, நீங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்.
உங்களின் பொறுப்புணர்வை உணர்வதனாலேயே உங்களுடைய கருணையினாலேயே, நீங்கள் வேலை செய்யத் தொடங்கி விடுவீர்கள்.
சக்தி நிரம்பி வழிவதற்குத் தகுந்தாற்போல் வேலைச் செய்யத் தொடங்கி விடுவீர்கள். கருணையால் நிரம்பி வழிவீர்கள், பொறுப்புணர்வால் நிரம்பி வழிவீர்கள். பொறுப்புணர்வு பொங்கப் பொங்க பயத்தாலோ, பேராசையாலோ, பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
நாம் ஆன்மீக வாழ்க்கை என்று எதை அழைக்கிறோமோ, அதைப் போல் வாழத் துவங்கி விடுவோம்.