உங்களை உயர்த்தும் யுக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
(பொறுப்பெடுத்தல்)
சில வருடங்களுக்கு முன்னால், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில், எங்குப் பார்த்தாலும், தொற்றுநோயான காசநோய் (tuberculosis) பரவியிருந்தது.
ஒரு வழியாக, தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டு, அந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்டது.
உடனே, இதற்கான பொறுப்பில் இருந்த அதிகாரிகள், "இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்தியது, குணப்படுத்த உதவியது, நாங்கள்தான்," என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனால், உண்மையில் இந்த நோய் நகரங்களில் பரவியதற்கு நாங்கள்தான் பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டார்களா? இல்லையே!
அந்தத் தொற்றுநோயான காசநோய் பரவியதற்கு அவர்களும்தான் காரணம்.
எப்படி என்றால், அவர்கள் தொற்று நோய் பரவுவது தெரிந்த உடனேயே அதற்கான தடுப்பு வழிகளைப் பயன்படுத்தி நோய் பரவுவதை நிச்சயம் தடுத்திருக்கலாம், இதற்கு அவர்கள் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளாததுதான் காரணம்.
பொறுப்புணர்வு சக்தியைப் பொங்க வைக்கும்
Responsiblity awakensThe energy flow
"நான் பொறுப்புணர்வுடையவன்," என்ற மனோபாவத்தில் வாழ்க்கையை வாழத் தொடங்கினீர்கள் என்றால், உங்களின் மொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்.
நீங்கள் உட்கார்ந்து ஆழமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
உங்கள் வாழ்க்கையில், நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும், நீங்கள்தான் காரணம். நீ ங்களேதான் காரணம்.
பொதுவாக, நாம் என்ன செய்கிறோம்? மற்றவர்கள் மீது பொறுப்பைப் போட்டுவிட்டு, நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மற்றவர்கள்தான் காரணம் என்று குறை சொல்கிறோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உண்மையில், நம் வாழ்க்கையில் நாம்
மலரவேண்டுமென்றால், நம்மைச் சுற்றி
நடக்கும், அனைத்து சம்பவங்களுக்கும்
நாம்தான், நேரடியாகவோ,
மறைமுகமாகவோ பொறுப்பு என்பதை
உணர வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் மிக அழகாகச்
சொல்வார். “உங்கள் தோள்கள்,
வலிக்கும் அளவிற்குப் பொறுப்பை
எடுக்கும்போதுதான், உங்கள் எல்லையானது
மிகவும் விரிவடைகிறது,” என்று.
> ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்
> உண்மையில் நம்
> வாழ்க்கையில் நாம் மலரவே
> ண்டுமென்றால் நம்மைச்
> சுற்றி நடக்கும் அனைத்து
> சம்பவங்களுக்கும்
> நாம்தான் நேரடியாகவோ
> மறைமுகமாகவே பொறுப்பு
> என்பதை உணர வேண்டும்.
“விரிவடைதல் மட்டுமே வளர்ச்சிக்கான வழி. விரிவடைதல் நிகழாமல் இருந்தால் அப்படியே இருந்து, இறந்துவிடுவீர்கள்.’‘
அடைக்கப்பட்ட மூங்கிலில், காற்று புகமுடியுமா? முடியாது.
அடைக்கப்பட்ட மூங்கில், பிணத்தைக்கொண்டு செல்வதற்காகத்தான் உதவுகிறது.
ஆனால், அதே மூங்கில் துளை இட்ட பிறகு, புல்லாங்குழலாக மாறுகிறது. நீங்கள், சுயநலவாதியாக இருக்கும் வரையில் பிணத்தைச் சுமந்து செல்லும் அடைக்கப்பட்ட மூங்கிலாகவேதான் இருப்பீர்கள்.
நீங்கள் அகங்காரத்தை விட்டுப் பொறுப்புடன் எழுந்து நின்றீர்கள் என்றால், உங்களின் எல்லை விரிந்து, துளையிடப்பட்ட மூங்கிலான புல்லாங்குழலாக மாறிவிடுவீர்கள்.
பிறகு என்ன, காற்று நுழைந்ததும் மூங்கிலானது, இனிமையாக இசைக்கும் புல்லாங்குழலாக மாறிவிடுவதுபோல். உங்களுக்குள் பொறுப்புணர்வு எனும் காற்றானது நுழையும்போது, நீங்கள் சக்தியாகவே மாறிவிடுகிறீர்கள்.
எதையும் சாதிக்கும் சக்தி பிரவாகமாக உங்களை மாற்றும் சக்தி பொறுப்புணர்வுக்கு உண்டு.