KAILASA Library/ஜீவன் முக்தி/நித்ய யுக்திSign in
ஜீவன் முக்தி

நித்ய யுக்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களை உயர்த்தும் யுக்தி!

உங்களைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் யுக்தி!

உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி!

இந்த மூன்றையும் தொடர்ந்து உங்களது வாழ்க்கையில் எடுத்து வரும்போது அதன் பாகமாகவே மாறி விடுவீர்கள்.

எனது வாழ்வில் எப்போதும் இந்த மூன்று சத்தியங்களையும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த மூன்று யுக்திகளையும் எப்போதும் வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முன்னாலும் அப்படித்தான்,

இப்போதும் அப்படித்தான்,

இனி எப்போதும் இப்படித்தான்.

இம்மூன்று யுக்திகளையும் பயன்படுத்த, பயன்படுத்ததான் அவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது புரியவரும்.

தோண்டத் தோண்டதான் ஊறும். பயன்படுத்த பயன்படுத்த உயர்வீர்கள். என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணமும் இந்த மூன்று யுக்திகள்தான்.

அவற்றைதான்...

என்னை உயர்த்திய யுக்தி.

என்னை பிரபஞ்சத்தோடு இணைத்த யுக்தி.

என்னை பிரபஞ்சத்தின் பாகமாக்கிய யுக்தி என்கிறேன்.

இதை ஆழமாக உங்கள் வாழ்விலும் உள்வாங்குங்கள்.

என்னுடைய வெற்றியின் ரகசியங்களை உங்களோடு இங்குப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதைப் பற்றி விளக்கமாக இனி வரும் பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.