நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Time has come for your awakening
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒருவர் ஜீவன் முக்தராக வாழ ஆரம்பித்தீர்கள் என்றால், உங்களைச் சுற்றி இருக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு ஜீவன் முக்தர்களாக வாழ்வதற்கான உற்சாகத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.
சுயமாகவே, சுபாவமாகவே, தானாகவே ஜீவன் முக்த தீக்ஷை நடந்துகொண்டே இருக்கும். உங்களுடைய ஒரு வார்த்தை போதும்.
உங்களை ஒருவர் பார்த்தால் போதும், அதெல்லாம்கூட தேவையில்லை.
உங்களுடைய சுவாசம் போதும், உங்களுடைய இருப்பு போதும்.
பல்லாயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான மக்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.
உத்வேகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.
பிரபஞ்சம், அடுத்த ஒரு உயர் நிலைக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
| பரமஹம்ஸத்தின் | | நிழல் பூமியின் | | மீது படும்பொழுது | | "மனிதக் குலமே | | விழித்துக்கொள்ளுங்கள் | | என்று மனிதக் குலத்திற்கு | | ஞான அறைகூவல் | | விடுகிறேன். |
எப்படிக் கல்லால் ஏற்படும் அலை, குளத்தையே உள்வாங்கிக்கொண்டு, குளம் முழுவதும் பரவுகிறதோ, அது போலவே ஒரு அவதார புருஷனால் ஏற்படுகிற அந்த ஜீவன் முக்தி அலை, உலகம் முழுவதும் பரவி, உலகத்தையே உள்வாங்கிக்கொண்டு, உலகத்தையே அது ஜீவன் முக்தர்களாக்கும்.
குரங்கு என்கிற நிலையில் இருந்து, மனிதன் என்கிற நிலைக்கு, ஒரு நேரத்திலே எப்படி அந்த உணர்வு செல்வது நடந்ததோ, அதேபோல் இப்பொழுது மனிதன் என்கிற உணர்வு நிலையில் இருந்து, தெய்வம் என்கிற உணர்வு நிலைக்குள் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
‘மனிதக் குலமே விழித்துக்கொள்’!
‘மனித இனமே விழித்துக்கொள்’.
தெய்வ நிகழ்ச்சிக்குள், தெய்வ உணர்விற்குள் மனித உணர்வில் இருந்து தெய்வ உணர்விற்குள் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
இதைச் சொல்வதற்காக வருபவர் களைத்தான் ‘அவதார புருஷர்கள்’ என்று சொல்லுகிறாம்.
பரமஹம்ஸத்தின் நிழல், பூமியின் மீது படும்பொழுதே, "மனிதக் குலமே விழித்துக்கொள்," என்று மனிதக் குலத்திற்கு ஞான அறைகூவல் விடுகிறேன்.
ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்.
ஜீவன் முக்தர்களாக வாழ்வதன் மூலமாகவே, உலகத்தையே உங்களைச் சுற்றி லட்சக்கணக்கான மக்களையே ஜீவன் முக்தர்களாக வாழ உற்சாகப்படுத்துவீர்கள், உத்வேகப்படுத்துவீர்கள்.
அவர்களையும் ஜீவன் முக்தர்களாக மாற்றுவீர்கள். இதுதான் நீங்கள் உங்களுக்கும் உலகத்திற்கும் செய்கிற மிகப்பெரிய சேவை, மிகப்பெரிய நன்மை.
நீங்கள் விழித்துக்கொள்வதற்கான அலாரம் இது.
உலகமே விழித்துக்கொள்!
இந்த வருடத்தின் சாரம் இதுதான். ஜீவன் முக்தர்களாக வாழுங்கள். ஜீவன் முக்தத் தன்மையை உலகெங்கும் பரப்புங்கள்.
ஒரு ஜீவன் முக்தன் இந்தப் பூமியில்
நடமாடும்போது, பூமியே புனிதம்
அடைகிறது.
கிருஷ்ணருடைய அவதார நோக்கம்
என்னவென்றால், பூமியின் பாரத்தைக்
குறைப்பது.
காரணம் அப்போது பூமியின் மேலே மக்கள் தொகை அதிகமாகி விட்டது.
> நீங்கள் ஒருவர் ஜீவன்
> முக்தராக வாழ ஆரம்பித்தீர்கள்
> என்றால், உங்களைச் சுற்றி
> இருக்கிற லட்சக்கணக்கான
> மக்களையும் நீங்கள்
> உற்சாகப்படுத்திக்கொண்டே
> இருப்பீர்கள்.
மக்கள் தொகை அதிகமான உடனேயே இயற்கை வளத்தை மனிதன் சுரண்ட ஆரம்பித்ததான், இயற்கை தன் சமநிலையை இழந்தது.
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையில் இருந்த அந்தச் சமச்சீர் நிலை அழிந்து விட்டது.
அதனால்தான் பூமி பாரத்தைக் குறைக்க வேண்டியிருந்தது கிருஷ்ணர், வந்து என்ன செய்தார், மிகப் பெரிய மகாபாரத யுத்தத்தின் மூலமாக உடல் ரீதியாக மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்.
ஆனால், இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், உணர்வு ரீதியாகச் சாதாரண மனிதர்களாக வாழ்கிறவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
உடல் ரீதியாகக் குறைக்க வேண்டியது இல்லை. உணர்வு ரீதியாகச் சாதாரண மனிதர்களாக வாழுகிற நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
அதுதான் நாம் இப்பொழுது செய்ய வேண்டிய வேலை.
நம்முடைய அவதாரத்தின் நோக்கம் பூமியின் பாரத்தைக் குறைப்பது.
ஜீவன் முக்தர்களாக பூமியில் வாழுங்கள். பூமியில் நடமாடுங்கள். பூமிக்குப் பாரம் இருக்காது. பூமிக்கு நீங்கள் பளுவாக இருக்க மாட்டீர்கள். பலமாக இருப்பீர்கள்.
அதனால், பூமியின் பாரத்தைக் குறைக்கிற இந்தச் செயலில், ஜீவன் முக்தர்களை உருவாக்குகிற இந்தச் செயலில் முன்னோடிகளாக நின்று, எனது சேனையின் தளபதிகளாக நின்று, உங்களைச் செயலாற்றுமாறு வேண்டுகிறேன்.
இந்த ஞான சேனை, இந்த ஆனந்த சேனை தனக்குள்ளும் ஜீவன் முக்தியை வாழ்ந்து, உலகமெங்கும் ஜீவன்முக்தியைப் பரப்பட்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்.