ஞானத்தின் ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
• யார் வேண்டுமானாலும் ஞானம் அடைய முடியுமா? நிச்சயமாக முடியும்!.
• ஞானம் பெற எது அடிப்படை தேவை? உங்கள் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதா?. இந்த கேள்விக்கு உங்களால், 'ம்' எனப் பதில் சொல்ல முடிந்தால் போதும்!. நீங்கள் ஞானமடைய தகுதி பெற்றவரே.
• பாமரனால்கூட முடியுமா? மாடு மேய்த்த சிறுவன் கண்ணன், கிருஷ்ணனாகவில்லையா? ஆடுகளோடு வாழ்ந்த சிறுவன் இயேசு, கிறிஸ்துவாகவில்லையா? விக்கிரங்களோடு விளையாடிய சிறுவன் கதாதரன், இராமகிருஷ்ணராகவில்லையா?
• நான் ஏன் இன்னும் ஞானமடையவில்லை? அது இன்னும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. முதலில், கேள்வி வேள்வியாகட்டும்... பின் குழந்தையைக் காணத்துடிக்கும் தாயின் தவமாக அது மாறட்டும்... அது நடந்தால் ஞானக்குழந்தைக் கருத்தரிக்கும். நீங்கள் ஞானியாவீர்கள்.
• யார் ஞானி? யார் மனிதன்?
செத்தும் பிழைத்தவர் - ஞானி
பிழைத்தும் சாகிறவர் - மனிதன்