KAILASA Library/ஜீவன் முக்தி/இறுதி இலக்கு ஆனந்த கந்த தீக்ஷைSign in
ஜீவன் முக்தி

இறுதி இலக்கு ஆனந்த கந்த தீக்ஷை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The last step - Ananda gandha deeksha

கடைசிச் செயலை சத்குருதான் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் வருகிறார், அனுமன்.

"அப்பா, எந்தத் தலையை நீ வெட்டினாலும், அதிலே இந்த ராவணனைச் சாகடிக்க முடியாது. அனாகதத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கிற இந்த அமிர்தகலச த்தின்மீது அம்பைச் செலுத்து," என்று சொல்கிறார்.

எந்தச் சக்கரத்தை எதிர்த்தாலும், அந்தச் சக்கரத்தினால், உங்கள்மீது எந்த வேலையும் செய்யாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, ஞானம் அடைய வேண்டும் என்றால், ஆனந்த கந்த தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.

ஆனந்த கந்தத்தின்மீது, அனாகதத்துக்குக்
கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கும்,
அந்த அமிர்தகலசத்தின் மீது அம்பைச்
செலுத்த வேண்டும்.

இங்கு ஆனந்த கந்த தீக்ஷை, ராமனுக்கு
அளிக்கப்படுகிறது. ஜீவாத்மாவுக்கு
அந்த ஆனந்த கந்த தீக்ஷை நடக்கிறது.

> எந்தச் சக்கரத்திலே எதிர்த்தாலும்
> அந்தச் சக்கரத்தினால் உங்கள்
> மீது எந்த வேலையும் செய்யாமல்
> உங்களைக் காப்பாற்றிக் கொள்ள
> முடியுமே தவிர ஞானம் அடைய
> வேண்டும் என்றால் ஆனந்த கந்த
> தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.

அதாவது, முதலில் தண்டகாரண்யத்திலிருந்து ராமேஸ்வரம் வரைக்கும், நடந்தது நித்ய யோகா. ராமேஸ்வரத்தில் நடந்தது விக்கிரக வழிபாடு, ஸ்தூல வழிபாடு.

அதற்குப்பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கை வரைக்கும் நடந்தது, தியானமும் ஜெபமும். ஒரு வடிவத்தை வழிபடுதல், ஒரு நாமத்தைச் சொல்லுதல், தியானமும் - ஜெபமும்.

அதற்குப்பிறகு, இலங்கையினுடைய எல்லைக்கு வந்த பின்னர் நடந்தது. காரண ச ரீரத்திற்கான தியானம். காரண சரீரத்திற்கான தியானம் என்ன? கண்ட துண்டமாகக் கும்பகர்ணனை வெட்டுதல்.

அடுத்து ஆன்மசரீரம், நிர்வாண சரீரத்துக்கான தியானம். ஆனந்தகந்த தீக்ஷை. இந்த ஆனந்தகந்த தீக்ஷை ராமருக்கு இங்குதான் அளிக்கப்படுகிறது.

அப்போது, ஆனந்தகந்த தீக்ஷைவரை, ஆன்ம சரீரம் வரைக்கும் வந்து விட்டோம் என்றால், எந்தச் சக்கரமும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அது அழிந்து போயிருக்காது. அப்படியே உயிரோடு இருக்கும்.

ராமனுடைய எந்த ஆயுதமும், ராவணனை அழிக்க முடியாது.

நிராயுதபாணியாக ஆகிவிட்டான் ராவணன்.

ஆனால், ராவணன் அழியவில்லை. மாயை உங்களைக் கட்டுப்படுத்தாது. ஆனாலும், மாயை அழியவில்லை.

அழியாமல் விட்டு வைத்தோமானால், என்றைக்காவது ஒருநாள் ஆயுதம் எடுத்து வந்தாலும் வந்துவிடலாம். அதனால் அழிக்காமல் விடமுடியாது. அதனால் அனுமன், ஆனந்தகந்த தீக்ஷை அளிக்கிறார்.

இந்த ஆனந்த கந்த தீக்ஷை அளித்தவுடன், மிகத் தெளிவாக, மறுநாள் ஜீவான்மா, மாயையை எதிர் கொள்கிறது.

எதிர்கொண்டவுடனே, வேறு எந்தத் தலையையும் வெட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

முதல்நாள் எத்தனையோ தலையை வெட்டி, வெட்டிப் பார்த்தார். திரும்பத் திரும்ப தலை வந்துவிட்டது. இப்போது ஜீவான்மா ராமன், ராவணனின் எந்தத் தலையையுமே வெட்டவில்லை.

நேரடியாக அனாஹதத்திற்குக் கீழே, மணிபூரகத்திற்கு மேலே, இருக்கிற அமிர்த கலசமாகிய ஆனந்த கந்தத்திற்குள் அம்பை எய்கிறார். ஆனந்த கந்தத்திற்குள் மூழ்குகிறார்.

எய்யப்பட்ட அம்பு, தீக்ஷா பலத்தாலும், குரு பலத்தாலும், மாயையை நோக்கிச் செல்கிறது. குருவே தோள் மேல் சுமந்து கொண்டிருக்கிறார்.

அனுமனே, ராமரைத் தோள்மீது சுமந்து கொண்டிருக்கிறாராம்.

அப்படி என்றால், குருவின் சாந்நித்தியத்திலேயே இந்த ஆனந்த கந்த தீக்ஷை அளிக்கப்பட்டு, அந்தத் தியானத்திற்குள் மூழ்குகிறார்.

ராமனின் பலம், ஞான சத்குருவினுடைய சாந்நித்யம்.

அனுமன் கொடுத்த அந்த வழிமுறைகள், என்ன, என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்ன அந்த வழிமுறைகளும் தீக்ஷைகளும்தான் பலமே. அதுதான் ஆனந்த கந்த தீக்ஷை.

இதில் இன்னொரு நிகழ்ச்சி நடுவில். இதை இங்கு விளக்கினால் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.

பிரம்மாஸ்திரத்தின் மூலமாக, ராமன் கட்டப்பட்டு விடுகிறான். கவலை என்கிற அந்தப் பிரம்மாஸ்திரத்தின் மூலமாகக் கட்டப்பட்டு விடுகிறான்.

இப்போது உடனடியாக சத்குரு நாதர், சஞ்ஜீவி மலையை, ஜீவாத்மாவிற்காகக் கொண்டுவர வேண்டும்.

அனுமான் சஞ்ஜீவி மலையை எடுத்துக்கொண்டுவந்து, வைத்தியம் செய்கிறார். அது என்னவென்றால், சில நேரத்தில், கவலை என்கிற கட்டு, உடலில் கட்டப்படும்போது, மனம் மட்டும் அல்ல ; உடலும் சோர்வு ஆகிவிடும். அந்த நேரத்தில் சஞ்ஜீவி மூலிகை எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பதுதான் ஹீலிங் தியான சிகிச்சை.

> குருவின் சாந்நித்தியத்தில்
> ஜீவான்மா மாயையை
> அழித்து விடுகிறது. ஆனந்த
> கந்தத்திற்குள் மலர்ந்தது.
> மாயை அழிந்த அந்த
> விநாடியே பரமாத்மாவாகிய
> சீதை ஜீவான்மாவை
> அடைந்தது.

ஆன்மீக வாழ்க்கையிலே, தடை வரும்பொழுது
எல்லாம், துக்கம் வரும் பொழுது எல்லாம்,
உடலையும், மனத்தையும், உணர்வையும் சரி
செய்வதுதான் ஹீலிங்.

குருநாதன், அனுமன் அதையும் செய்து விடுகிறார். சஞ்ஜீவியைக் கொடுத்து, அதையும் செய்துவிடுகிறார். எழுப்பிக் குணமளித்து ஜீவாத்மாவை நிறுத்தி விடுகிறார்.

யுத்த களத்திலே சத்குருவின் சாந்நித்யமாகிய,

அனுமன் தோள்மேல், ஜீவான்மாவாகிய ராமன் அமர்ந்துகொண்டு, அனாஹத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கிற அமிர்தக் கலசத்தின்மீது, அனுமான் கொடுத்த ஆலோசனையின்படி, இந்த தீக்ஷையின்படி, ஆனந்த கந்த தியானம் என்கிற அம்பை எய்ய, குரு சாந்நித்யத்திலே, ஜீவான்மா மாயையை அழித்து விடுகிறது.

ஆனந்த கந்தத்திற்குள் நுழைந்தது.

ஆனந்த கந்தத்திற்குள் மலர்ந்தது.

மாயை அழிந்த அந்த விநாடியே பரமாத்மாவாகிய சீதையை, ஜீவான்மா அடைந்தது.

இருவரும், பரமாத்மாவும் ஜீவான்மாவும் வேறு வேறு அல்ல, ஒரே உணர்வுதான் என்கிற நிலையில் கலந்தது.

பூரணமான பட்டாபிஷேகம் நடந்தது. ஜீவான்மாவும், பரமாத்மாவும் கலந்ததால், பிரபஞ்சத்தையே ஆளுகிற ஞானப் பட்டாபிஷேகம் நடந்தது.

ஜகத்குருவாக, பிரபஞ்ச சக்தியாக, முழுமையான பட்டாபிஷேகம் அவர்களுக்குள்ளே நடந்தது.

ராமாயணத்தின் சாரம் இதுதான்.

ஜீவான்மா, பரமாத்மாவோடு கலந்து, பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாறுவது.

இவை அத்தனையும் நடத்திவிட்டு, பொறுமையாக ஓரமாக அமர்ந்திருந்தார், ஆனந்த குருநாதர் அனுமான். அத்தனையும் நடத்திவிட்டு, அமைதியாக, ஒரு ஓரமாக இருப்பதே அந்த அனுமனுடைய திருப்பணி.

ஒவ்வொரு சூழலிலும், சத்தியத்தை உணர வைத்து, அதனுடைய நுட்பத்தைக் காட்டி, அதற்குள்ளே கொண்டுசெல்வது. அதுதான் குருவினுடைய வேலை. அதுதான் குருவினுடைய திருப்பணி, குருவினுடைய கடமை.

குரு தம்முடைய கடமையை எப்போதும் செய்துகொண்டே இருக்கிறார்.

சீடன் ஏற்றுக் கொள்வதற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு அருமையான வாசகம் ஒன்று இப்படிச் சொல்கிறது,

“உண்மையான குருமார்களுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சமில்லை.

உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலத்திலும் பஞ்சம்.”

நீங்கள் ராமன் ஆகுங்கள்.

உங்களின் சீதையைத் தேடிப் புறப்படுங்கள்.

ஆனந்த அனுமன், உங்களுக்காக எப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்!!!