KAILASA Library/ஜீவன் முக்தி/மாயை எனும் ராவணனை அழிக்கும் யுக்திSign in
ஜீவன் முக்தி

மாயை எனும் ராவணனை அழிக்கும் யுக்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The understandingThat destroys Ravana - your illusion

அடுத்தது, இறுதியான கட்டம். ரஜோ குணமாயை. அதுதான் மாயையை நேரடியாக எதிர்கொள்ளுதல்.

ஏன் ராவணனுக்குப் பத்து தலை தெரியுமா? மாயை, பல தலைகளை, முகங் களை உங்களுக்குக் காட்டி, உங்களோடு விளையாடும்.

சில நேரத்தில், உங்களுக்கே அறியாமல் கருணை என்ற வடிவத்தில் வரும். உடனே நீ ங்கள் என்ன நினைப்பீர்கள்? “கருணையப்பா,” என்று கருணை என்ற பெயராலேயே பந்தத்திலே மாட்டிக் கொள்வீர்கள்.

கருணை என்ற பெயரிலும், பந்தம் என்ற பெயரிலும் சிக்கிக் கொள்வதைத்தான் பல நேரங்களில் பொறுப்பு, கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

யாருக்கு யார் பொறுப்பு?

நீங்கள் நினைத்து வேண்டியா பிள்ளை பிறந்தது? தவமிருந்தா பிள்ளை பெற்றீர்கள்?

எதையோ செய்யப் போக, என்னவோ நடந்து விட்டது! அப்போது, எப்படிக் குழந்தைக்கு மட்டும், பிள்ளைக்கு மட்டும் நீங்கள் பொறுப்பாக முடியும்?!

மாயை
பரமாத்மாவைத் திருடி
வைத்திருந்தாலும்கூட
பரமாத்மாவிடமிருந்து
மாயையால் சுகத்தை
அனுபவிக்க முடியாது.

யாரும், யாருக்கும் பொறுப்பில்லை. யாரும் யாருக்கும் கடன்பட்டவர்கள் அல்ல.

கடமை என்ற பெயரால் பந்தத்தில் மாட்டிக் கொள்வது, கருணை என்ற பெயரால் பந்தத்தில் மாட்டிக் கொள்வது, என இந்த மாதிரி பல்வேறு குணங்களைக் காட்டி பந்தத்திலே, உங்களைச் சிக்க வைக்கக் கூடிய சக்தி மாயைக்கு உண்டு.

அதனால் தான், பத்து தலையைக் காட்டுகிறது. ஒரு தலையில் பிடிபடவில்லை என்றால், மறுதலையால் பிடித்து விடும்.

இன்னொன்று, மாயைக்கு, மயக்குகிற பல்வேறு திறன்கள் தெரியும்.

அதனால்தான், ராவணன் மிகப்பெரிய இசைஞானி. சாம கானத்திலே மிகப்பெரிய வல்லுனர்.

அதனால்தான், பிரபஞ்சத்தின் பெரும் சக்தியான ஈசனையே சாம கானத்தினால் வழிபட்டு, வரம் வாங்கியவர்.

மாயைக்கு அந்தப் பலம் இருப்பதினால்தான், ஜீவாத்மாவோடு விளையாடுகிறது.

பல தலைகளோடும், பல கைகளோடும், தன்னுடைய மொத்த அகோர வடிவத்தோடும், மாயையானது வருகிறது.

இன்னொரு பெரிய கொடுமை என்னவென்றால், மாயை, பரமாத்மாவைத் திருடி வைத்திருந்தாலும்கூட, பரமாத்மாவிடமிருந்து, மாயையால் சுகத்தை அனுபவிக்க முடியாது.

சீதையை, ஜீவாத்மாவிடம் இருந்துகொண்டுபோய் வைத்திருந்தாலும், ராவணனால் அனுபவிக்க முடியாது.

ராவணன் அனுபவிக்கவில்லை. அனுபவிக்க முடியாது.

மாயைக்கு அனுபவிக்கிற சக்தி கிடையாது. பரமாத்மாவை ஜீவாத்மாவிட மிருந்து பிரிக்கலாம். அவ்வளவுதான்.

ராமர் இறுதியாக மாயையை எதிர்கொள்கிறார்.

ஜீவாத்மா, மாயையை எதிர்கொள்கிறது. முதலில் ஒவ்வொரு தலையாக வெட்டி, வெட்டிப் பார்த்தார். எத்தனை தலையை வெட்டினாலும், இன்னொரு தலையாக வருகிறது.

அதாவது மூலாதாரத்தில் காமமாக ஏற்படுகிற மாயையை அழித்தீர்கள் என்றால், ஸ்வாதிஷ்டானத்தில் அது பயமாக வெளிவரும்.

அதையும் அழித்தீர்கள் என்றால், மணிபூரகத்தில் கவலையாக வெளிவரும்.

அதையும் அழித்தீர்கள் என்றால், அனாஹதத்தில் கவனத் தேவையாக வெளியில் வரும்.

பல்வேறு விதத்திலே, பல்வேறு முகங்களைக் காட்டி மயக்கும்.

என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். அந்த மாயை மயங்கவில்லை, அடங்கவில்லை.

ஆனால், ஒன்றுமட்டும் நடந்து விடுகிறது. ஜீவான்மாவுடைய முழுமையான பலத்தாலே, மாயையினுடைய அஸ்திரங்கள் எல்லாம் பலம் இழந்து விடுகின்றன.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், எந்தச் சக்கரத்தில் இருந்து, எந்த எண்ணம் வந்தாலும், அதனால் அசைக்கப்படாத தெளிவோடு இருப்பது என்ற சூழ்நிலைக்கு ஜீவான்மா வந்துவிடுகிறது.

எந்தச் சக்கரத்தில் இருந்து, எந்த எண்ணம் வந்தாலும், அதனால் அசைக்கப்படாத தெளிவிற்கு, அந்த உயர்நிலைக்கு ராமன் வந்து விடுகிறான், அந்த உயர்ந்தநிலைக்கு ஜீவான்மா வந்துவிடுகிறது.

அந்த நேரத்தில்தான், ஆயுதங்கள் இல்லாமல், நிராயுதபாணியாக ராவணன் நிற்கிறான். அதாவது எந்த ஆயுதத்தை அவன் எடுத்தாலும், அது வேலை செய்யாது. குருபலத்தால், எந்த எண்ணம் தொடுத்தாலும், அது உங்களை

ஜீவான்மாவுடைய
முழுமையான
பலத்தாலே
மாயையினுடைய
அஸ்திரங்கள் எல்லாம்
பலம் இழந்து
போய்விடும்.

அசைக்க முடியாது.

ஆனாலும், என்ன? மாயை மட்டும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அதனால் வேலை மட்டும் செய்ய முடியவில்லை, எல்லா அஸ்திரங்களும் போய்விட்டன. அனைத்தையும் இழந்து விட்டான்.

ஆனால், மாயை உயிரோடு மட்டும் இருக்கிறது.

அந்தச் சூழலில்தான் ராமர் சொல்கிறார், "இன்று போய் நாளை வா," என்று சொல்கிறார்.

"அப்பா, உன் அஸ்திரம் எல்லாம் போயிற்று. எல்லா அஸ்திரமும் போயிற்று," என்று சொல்கிறார். இப்போது மாயையால் ஜீவாத்மா மேல் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால், இன்னும் உயிரோடு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலே, ஜீவான்மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

மாயையைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அப்போதுதான் மாயையிடம் "இன்று போய் நாளை வா," என்று சொல்லி விடுகிறார்.

இந்தச் சூழ்நிலையை, ஒருநாள் எல்லாச் சாதகர்களும் அடைந்தே தீருவார்கள். ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கும்.

எந்தவிதமான பந்தமும் இருக்காது. ஆனால், ஞானம் அடைந்திருக்க மாட்டார்கள். அதிலிருந்து வெளிவரதான் சத்குரு தரும் ஆனந்த கந்த தீக்ஷை.

அந்தக் கடைசி Push! Last Pushதான்!!.