KAILASA Library/ஜீவன் முக்தி/சோம்பேறித்தனமெனும் கும்பகர்ணனைSign in
ஜீவன் முக்தி

சோம்பேறித்தனமெனும் கும்பகர்ணனை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அழிக்கும் யுக்தி

The understandingThat destroys Kumbakarna - your laziness

அப்படியென்றால், என்ன அர்த்தம்?

மந்தத்தன்மை வரும். எதையும் செய்ய விருப்பம் இல்லாத தன்மை எழும்.

“விடப்பா,” என்ற சோம்பல்தனம்.

இந்த வாழ்க்கையிலே, ஆன்மீக வாழ்க்கையிலே, ஞானப் பாதையிலே, முன்னேறுவதற்கான உற்சாகமின்மைதான் கும்பகர்ணன். “விடப்பா, நாளைக்குத் தியானம் செய்து கொள்ளலாம். இப்போது செய்து என்ன செய்யப் போகிறோம்?

விடப்பா, இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்கலாம்,” எனச் சொல்லும் மந்தத் தன்மை வரும்.

உண்ணுதலும், உறங்குதலும் தவிர, வேறொன்றும் அறியேன் என்கிற மந்தத் தன்மை, தமோ குண மாயையான கும்பகர்ணன் அடுத்து வருவான்.

இந்தக் கும்பகர்ணனை எதிர் கொள்வதற்கான ஒரே வழி, ‘கண்டதும் அவனைக் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்.’

“அவனை யாராலும் முழுதாக எதிர்கொள்ள முடியாது. கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்,” என்று டிப்ஸ் தந்தார் சத்குருநாதர். அப்படியென்றால், அந்த சோம்பேறித் தனத்தை, ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து வெட்ட வேண்டும்.

மொத்தமாக சோம்பேறித்தனத்தை ஜெயித்துவிடலாம் என்று, நினைத்து முயற்சி செய்தால் முடியாது.

இப்போது சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், உங்கள் சோம்பல்தனத்தைக் கண்டதும் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்.

முழுதாக அதை அழிக்க முடியாது.

இன்றைக்கு சோம்பல்தனம் இல்லாமல் இருக்கலாம்.

இப்போது இந்தத் தியானத்தைச் செய்துவிடலாம்.

"சோம்பல்தனப்படாமல், இன்றைக்கு, இப்போது இந்த வேலையை செய்து முடித்து விடலாம்," என்று முடிவெடுங்கள்.

"அப்படியில்லாமல் இல்லை, இல்லை என்றைக்குமே சோம்பல்தனமே வரக்கூடாது. நிரந்தரமான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று நினைத்தீர்கள் என்றால் சத்தியமாக முடியாது.

யாராலும் முடியாது.

நிரந்தரமாகச் செய்ய வேண்டும் என்பவர்கள் எல்லாம், முயற்சி செய்து, செய்து, தோல்வி அடைந்து, அந்தத் தோல்வியினால், தன்னம்பிக்கை இழந்து, முயற்சி செய்வதையே நிறுத்தி விடுவார்கள். நீங்களும் அதையே செய்ய வேண்டாம்.

சோம்பல்தனத்தை, மந்தத் தன்மையை மட்டும் மொத்தமாக அழிப்பது பற்றி நினைக்கவே முடியாது,

மொத்தமாகச் சோம்பல்தனத்தை அழிக்கவே முடியாது.

இப்போது, இன்றைக்கு, சோம்பல்தனம் இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.

கண்டமாக, துண்டமாக மட்டும்தான் கும்பகர்ணனை வெட்ட முடியும்.

அவனை முழுதாக அழிக்க முடியாது. அதை மிக அருமையாக, ஞான சத்குரு அனுமான் சொல்கிறார்.

"ராமா, கைகளை மட்டும் வெட்டு, கால்களை மட்டும் வெட்டு, இடுப்பை மட்டும் வெட்டு, தலையை மட்டும் வெட்டு, தானாகவே அவன் கடலுக்குள் வீழ்ந்து அழிவான்."

> சோம்பல்தனப்படாமல்
> இன்றைக்கு இப்போது
> இந்த வேலையை செய்து
> முடித்துவிடலாம் என்று
> முடிவெடுங்கள்.

அனுமன் மிக அழகாகச் சொல்கிறார். ராமர், அதேமாதிரி கைகளை மட்டும் வெட்டுகிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? இன்றைக்கு நித்ய தியானம் செய்வது.

எல்லா நாளும் இனிமேல் நித்ய தியானம் செய்வேன் என்றால் அது நடக்காது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

கும்பகர்ணனை மொத்தமாக அழிக்க முயற்சி செய்கிறீர்கள். அது நடக்காது!

இரண்டுமுறை முயற்சி செய்து,
கும்பகர்ணனை அழிக்க முடியவில்லை
என்றால், சோம்பல்தனத்தை அழிக்க
முடியாமல் போயிற்று என்றால், ஒரு
ஆறுமாதம் முயற்சி செய்து, முயற்சி செய்து,
நான்குமுறை (தோற்று விட்டோம்) என்றால்,
உடனே என்னாகும்?.

> இப்போதிருக்கும் சோம்பல்
> தனத்தை பாகம், பாகமாக
> வெட்டும்போது திடீரென்று
> உங்களையே அறியாமல்
> அந்த சோம்பல்தனம்
> தானாகவே மனத்திற்குள்
> விழுந்து அழிந்து
> போய்விடும்.

நம்மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை காணாமல் போய்விடும். அதுதான் கும்பகர்ணனுக்குப் பலம்.

முதல்நாள் கும்பகர்ணன் போருக்கு வரும்பொழுது, இராத்திரி நேரத்தில் வருகிறான். இந்த பூதங்கள், ராத்திரி நேரத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கும். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

தமஸுக்கு, ராத்திரியில்தான் பலம் ஜாஸ்தி.

மந்தத் தன்மைக்கு ராத்திரியில் பலம் ஜாஸ்தி. அதனால்தான் கும்பகர்ணன் ராத்திரியில் வருகிறான்.

இந்தக் குரங்குகள் மொத்தமாக அவனை அழிக்கப் பார்க்கின்றன. முடியவில்லை.

துவம்சம் செய்துவிட்டுப் போய் விடுகிறான். அப்படியென்றால் என்ன அர்த்தம் ?ஜீவான்மா முயற்சி செய்து தோற்றுப் போய், தன்மீது தனக்கே இருக்கிற நம்பிக்கையை இழந்துபோய் சாய்ந்து விடுகிறது.

அப்போதுதான் சத்குரு வருகிறார். இவனை இப்படி, இப்படித்தான் அழிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த நுட்பத்தை அளிக்கிறார்! கும்பகர்ணனை முழுவதுமாக அழிக்க முடியாது. சோம்பல்தனத்தை, தமோ குண மாயையை முழுவதுமாக அழிக்க முடியாது. இன்றைக்கு மட்டும் என்ன முடியுமோ, அதைச் செய். இப்போது மட்டும் என்ன முடியுமோ அதைச் செய். கண்டம் துண்டமாக வெட்டு. பாகம், பாகமாக வெட்டு.

ராமரும் அதையே செய்கிறார். அதேபோல, பாகம் பாகமாகக் கும்பகர்ணனை வெட்டியதும், தானாகவே கும்பகர்ணன் கடலுக்குள் விழுந்து, அழிந்து போகிறான்.

இப்போதிருக்கும் சோம்பல்தனத்தை பாகம், பாகமாக வெட்டும்போது, திடீரென்று, உங்களையே அறியாமல், அந்த சோம்பல்தனம் தானாகவே மனத்திற்குள் விழுந்து, அழிந்து போய்விடும்.