KAILASA Library/ஜீவன் முக்தி/கவலையைக் காணாமல் செய்யும் குருவின் சக்தி தரிசனம்Sign in
ஜீவன் முக்தி

கவலையைக் காணாமல் செய்யும் குருவின் சக்தி தரிசனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Guru"s energy darshanThat makes our worries disappear

முதலில் எடுத்த உடனேயே, மாயையின் மகன்கள் வருகிறார்கள் இந்திரஜித்.

இந்திரனையே ஜெயித்த ஜாலக்காரன்.

நம்முடைய மனத்தில் காரணம் இல்லாமல் எழும்பிக்கொண்டு இருக்கிற எண்ணங்கள்தான் இந்திரஜித்.

காரணமில்லாமல் எழும்பிக்கொண்டு இருக்கிற விழிப்புணர்வற்ற எண்ணங்கள், அதுதான் இந்திரஜித்.

அவன் வந்து ஜீவான்மாவோடு விளையாடுகிறான்.

ஆனால், ஜீவான்மாவிடம், குருபக்தி என்கிற ஒரு பெரிய பலம் இருப்பதனாலேயே, இந்த இந்திரஜித்தோடு விளையாடுகிறது.

ஆனால் திடீரென்று, இந்திரஜித் அவனுடைய பிரம்மாஸ்திரத்தினாலே ஜீவான்மாவைக் கட்டிவிடுகிறான். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், காரணமில்லாமல் கொந்தளிக் கிற எண்ணங்களாகிய கவலைகளால், ஜீவான்மாவைப் பலவீனப்படுத்தி, உற்சாகத்தை இழக்கச் செய்து, துக்கத்திலே கட்டிவிட முடியும்.

அந்த மாதிரி பிரம்மாஸ்திரத்தனாலே ராமன் கட்டப்பட்டபொழுது, அவனை மீண்டும் தோளிலே தாங்கி, தூக்கி நிறுத்துகிறார் அனுமார்.

சத்குருநாதரன், ராமரைத் தம்முடைய தோளிலேயே தாங்குகிறார்.

அந்தக் கவலையிலிருந்து அந்த வலையிலிருந்து வெளியே எடுத்து வந்துவிடுகிறார் ச த்குருநாதர்.

இந்திரஜித்தை எதிர்த்துப் போரை நடத்த, தம்முடைய தோளிலே ஜீவான்மாவைத் தாங்கி, தூக்கி நிறுத்துகிறார்.

அதுதான் அன்பினாலே அணைத்துத் தூக்கி நிறுத்துதல். அதுதான் சக்தி தரிசனம். அதுதான் ஆனந்த தரிசனம்.

அனுமன், ராமரை தம் அன்பினால் தூக்கி நிறுத்துகிறார்.

ஆரத்தழுவி அன்பினால், தம்முடைய பயோ மெமரியை, தம்முடைய உணர்வையே ஜீவான்மாவிற்குள் புகுத்தித் தைரியத்தோடு எழுப்பி நிறுத்துகிறார்.

அதுதான் இந்திரஜித்தை எதிர்த்த கோலம். இந்திரஜித் வீழ்ந்தான்.

உடனே ராமனுக்குக் கவலை காணாமல் போய்விடுகிறது.

சத்குரு கொடுக்கிற ஸ்திரத் தன்மை, தைரியம் நம் உள்ளே வந்து விட்டது என்றால், கவலை காணாமல் போய்விடும். பிரம்மாஸ்திரம் அழிந்து விடும்.

பிரம்மாஸ்திரம் என்பது வேறு ஒன்றும் இல்லை, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படுகிற கவலைக்கட்டுதான், பிரம்மாஸ்திரம்.

நம்முடைய கவலைக்கட்டுதான் பிரம்மாஸ்திரம்.

குருவினுடைய பலம் வந்தால், அது இடுப்புக் கச்சை மாதிரி ஆகிவிடும்.

நம்மால் எப்போது வேண்டுமானாலும் அதைக் கழற்றிக் கொள்ளவும் முடியும், எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் முடியும்.

எப்போது வேண்டுமானாலும், கழற்றி, போட்டுக்கொள்ள முடிந்தால், அதற்குப் பெயர் கவலைக்கட்டு கிடையாது,

மனம், உங்களைக் கட்டினால், அது கவலைக்கட்டு.

நீங்கள், வேண்டும் என்று எண்ணும்போது கட்டிக் கொண்டால், அதன் பெயர் மனக்கட்டு. கவலை, மனமாக மாறிவிடும். Pshycological worrying, Chronological planning ஆக மாறிவிடும்.

Pshycological worrying-ஆக இருந்தால், மன ரீதியான கவலையாக இருந்தால் அது உங்களைக் கட்டுப்படுத்தும். அதுதான் இந்திரஜித்.

குருவினுடைய பலம் இருந்தால், அதுவே Chronological planning செயலாக்கத்தை, திட்டமிடுதலை வெளிப்படுத்தும் தன்மையாக அது மாறிவிடும். உங்களுடைய வாழ்க்கையை வழிநடத்துகிற சக்தியாக மாறிவிடும். அதுதான் இந்திரஜித்தை ஜெயித்தல்.

அதற்கடுத்து, கும்பகர்ணன் தமோ குண மாயை வரும்.