நம்மைக் காக்கும் குருபக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Guru bhakti - Devotion toThe Guru -That protects us
அடுத்து ஜீவான்மாவை அழைத்து வருகிறார். ஜீவாத்மாவை அழைத்து வந்து, அந்த மாயையினுடைய கோட்டை முன்பு நிறுத்துகிறார். நிறுத்திக் காண்பிக்கிறார்.
"இதுதான் மாயையின் கோட்டை என்று பரமாத்மா சிறைப்படுத்தப்பட்டிருக்கும் கோட்டையை ஜீவாத்மாவிற்குக் காண்பிக்கிறார்.
அப்போது, இந்த மொத்த நிகழ்ச்சிக்கு நடுவில், ஒரு திருப்பம்.
மாயைக்குள்ளேயே வித்யா மாயை என்று ஒன்று உண்டு.
ராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார்: "எல்லாப் பற்றும், எல்லாப் பந்தமும், நம்மைக் கட்டுப்படுத்தும்.
பந்தத்துக்குள்ளாக்கும். துக்கத்திற்குள் ஆழ்த்தும்.
ஆனால், குருமீது ஏற்படுகிற பற்று மட்டும், நம்மைச் சுதந்திரம் ஆக்கும்.''
அந்தக் குருமீது ஏற்படுகிற பற்று, ஒரு மாயையேயானாலும் அது நம்மைச் சு தந்திரத்திற்கு அழைத்துச் செல்கிற மாயை.
அந்த மாதிரி சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்கிற மாயையைதான் வித்யா மாயை என்று சொல்வார்கள்.
அந்த வித்யா மாயைதான் ராவணனின் கோட்டையிலிருக்கும் விபீஷணன்.
ராக்ஷஸனாக இருந்தாலும், மாயையின் பாகமாக இருந்தாலும், இராவணனின் தம்பியாக இருந்தாலும் அவன் பரமாத்மாவும், ஜீவாத்மாவும், ஒன்று சேர்வதற்காக உதவி செய்பவனாக மாறுகிறான்.
பந்தமாக இருந்தாலும், குருவின் திருமேனிமீது வைக்கப்பட்ட பாசம், வைக்கப்பட்ட பந்தம், சுதந்திரத்திற்குத்தான் வழிகாட்டும்.
வேறு எந்த மேனிமீது வைத்தாலும், அந்தப் பந்தம் என்ன செய்யும்? பந்தத்திலே துக்கத்திலே ஆழ்த்தும்.
பந்தமாக இருந்தாலும்
குருவின் திருமேனிமீது
வைக்கப்பட்ட பாசம்
வைக்கப்பட்ட பந்தம்
சுதந்திரத்திற்குத்தான்
வழிகாட்டும்.
இது பந்தம் போன்றே தோன்றினாலும், குருவின் திருமேனி மீது வைக்கப் பட்டால், குரு பக்தியாக இருந்தால், அது சு தந்திரத்திற்கு வழிகாட்டும்.
அதைத்தான் வித்யா மாயை என்று சொல்வோம்.
விபீஷணன்தான் வித்யா மாயை.
மாயையில், மூன்று வகை உண்டு.
ரஜோ மாயை,
தமோ மாயை,
சத்வ மாயை.
சத்வ மாயை, மாயையிலிருந்து வெளிவருவதற்கான வழியைக்காட்டும். அதுதான் விபீஷணன்.
தமோ மாயை, கும்பகர்ணன். எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பவன்.
ரஜோ குண மாயைதான் ராவணன்.
ரஜோகுண மாயை - ராவணன்; தமோகுண மாயை - கும்பகர்ணன்; சத்துவகுண மாயை
- விபீஷணன்.
வால்மீகி என்ன நினைத்து என்ன உணர்வில் இந்த ராமாயணத்தை எழுதினாரோ, அதை அப்படியே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
என்ன நினைத்து ராமாயணம் எழுதப்பட்டதோ, அதை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.
சத்குரு, சத்வகுண மாயையை ஜீவான்மாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வேலையில் இறங்க வேண்டும்.
விபீஷணனை அழைத்து வந்து, ஜீவான்மாவாகிய ராமனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
அனுமன், “இவர்தான் சீதைக்கு, பரமாத்மாவுக்குக் காவலாக இருக்கிறார். இவருடைய உதவியோடு, மற்ற மாயைகளை எல்லாம் வெல்லலாம்,’’ என்று அறிமுகப்படுத்துகிறார்.
ஜீவான்மாவிற்குப் பக்தியைப் புகட்டுகிறார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், முதலில் செய்ய வேண்டியது புத்தி, மனம், செயல் அனைத்தையும் ஒன்றாக்குவது.
கிஷ்கிந்தையிலே நடந்தது, உடலால் செய்த யோகம். (Physical Yoga).
அதற்கடுத்து, கடல் மேல் நடந்தது, தியானம். மனத்தின் மேல் அமைக்கிற நுட்பம், பாவனையும் (Visualization); வாய்மொழியும் (Verbalization),
அதற்கடுத்த மூன்றாம் நிலை. உணர்வைப் பழுக்க வைக்கிறார்.
முதலில் ஸ்தூல சரீரமும், ப்ராண சரீரமும் ஒருங்கிணைய நுட்பம் கொடுத்தார்.
அதுதான் யோகம். ராமேஸ்வரம் வரையிலும் நடந்தது அதுதான்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையினுடைய எல்லைவரை கடல் மேல் நடந்த சாதனை மனசரீரம், சூட்சும சரீரம் சம்பந்தப்பட்டது.
அதுதான் தியானம்.
அதற்கடுத்து, காரண சரீரம், ஆன்ம
சரீரத்துக்கு உரிய சாதனைகளை
அளிக்கிறார்.
அதுதான் பக்தி.
பக்தியில் மட்டும்தான், காரண சரீரமும், ஆன்ம சரீரமும் கரைய முடியும்.
ஜீவான்மாவிற்கு குரு பக்தியை அளிக்கிறார். குருபக்தியை அதிகப்படுத்தி, வித்யா மாயையை அறிமுகப்படுத்துகிறார் அனுமன்.
வித்யா மாயையை அறிமுகப்படுத்தியதும், மிகப்பெரிய பலம் ஜீவான்மாவுக்கு வந்துவிடுகிறது.
வித்யா மாயைக்குரிய குணம் என்ன வென்றால், மாயையினுடைய எல்லாக் குணங்களையும், ஜீவான்மாவிற்கு அது காட்டிக் கொடுத்து விடும்.
"இதோ பார், நான் இப்படி எல்லாம்தான் உன்னைக் கட்டுகிறேன், இப்படி எல்லாம்தான் உன்னைத் துக்கத்திற்குள் ஆட்படுத்துகிறேன், இப்படி எல்லாம்தான் உன்னை மோகத்தில் மாய்க்கிறேன், இப்படி எல்லாம்தான் உன்னைச் சாய்க்கிறேன்," என்று தன்னுடைய எல்லாக் குணங்களையும் வெளிப்படுத்திக் காட்டிவிடும் சக்தி, வித்யா மாயைக்கு உண்டு.
விபீஷணன், மிகத் தெளிவாக, மாயையின் எல்லா ரகசியங்களையும் ஜீவாத்மாவுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறார்.
எத்தனை கோட்டை இருக்கிறது, எத்தனை கொத்தளம் இருக்கிறது, எந்த அரண்மனையில் ராவணன் படுத்துக் கிடக்கிறான், எந்த அரண்மனையில் சீதை சிறைபட்டுக் கிடக்கிறாள், எங்கு, என்ன இருக்கிறது என்பதை வித்யா மாயை மிகத்தெளிவாக ஜீவான்மாவுக்கு உரைத்து விடுகிறது.
ஜீவான்மாவிற்கு, ஒரே வேலை என்னவென்றால், ராவணன் எனும் மாயையை, வித்யா மாயை அளித்த தகவல்களை வைத்து எதிர்கொள்வது. அவ்வளவுதான்.
வேறு ஒன்றுமே இல்லை. எதிர்கொள்கிற வேலை மட்டும்தான்.
குரு பக்திக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. எப்படி எல்லாம் நாம், மற்ற பந்த, பாசங்களிலே கட்டுப்பட்டுக் கிடக்கிறோமோ. மாயையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகிற சக்தி, குருபக்திக்கு உண்டு.
மற்ற எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்தி குருபக்திக்கு உண்டு.
விபீஷணனால் வருவது குரு பக்தி, குரு மீது ஏற்படுகிற ஆழ்ந்த ஈர்ப்பான, குருபக்தி. அதாவது, விபீஷணனின் வருகை நிகழ்ந்தது. ஜீவான்மாவுடன் குருபக்தி சேர்ந்த உடனேயே வெற்றி நிச்சயம் என்று உறுதியாகிவிட்டது.
அதற்குப் பிறகு உருவாகிற போர்தான், இறுதியான ஞான அனுபவம். குரு பக்திக்குப் பெரிய சக்தி உண்டு. எப்படி எல்லாம் நாம், மற்ற பந்த பாசங்களிலே கட்டுப்பட்டுக் கிடக்கிறோமோ மாயையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாவற்றையும் நமக்கு காட்டுகிற சக்தி, குருபக்திக்கு உண்டு. மற்ற எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்தி குருபக்திக்கு உண்டு.
> குரு பக்திக்குப் பெரிய சக்தி உண்டு
> எப்படி எல்லாம் நாம் மற்ற பந்த
> பாசங்களிலே கட்டுப்பட்டுக்
> கிடக்கிறோம் மாயையின் பிடியிலே
> மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று
> நமக்குக் காட்டுகிற சக்தி. மற்ற
> எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும்
> நம்மை விடுபடுத்திவிடும் சக்தி
> குருபக்திக்கு உண்டு.