KAILASA Library/ஜீவன் முக்தி/கைபிடித்துக் கரையேற்றும் சத்குருநாதர்Sign in
ஜீவன் முக்தி

கைபிடித்துக் கரையேற்றும் சத்குருநாதர்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The Guru who holds your hand and takes you ashore

அந்த மாயையை எதிர்கொள்வதற்கான தியானமுறையைக் கற்றுக் கொடுக்கிறார்.

மாயையைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய உடல், மனம், சூட்சும சரீரம் எல்லாம் தாண்டி இருக்கிறது.

மாயை ஒளிந்து கொண்டிருக்கிறது, பரமாத்மாவை தன் கோட்டைக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கிறது.

அனுமன், "பாலம் அமையுங்கள்," என்று சொல்கிறார்.

உடனே, ராமருடைய சேனை முழுவதும், ஜீவான்மாவினுடைய மொத்த பலமும், மொத்த சக்தியும், மொத்த உத்வேகமும், மொத்த உற்சாகமும், பாலம் அமைக்கத் தயாராகி, பாலம் அமைக்கத் துவங்குகிறது.

அதாவது, அடுத்த நிலை தியானங்களிலே ஆழ்ந்து ஈடுபடுகிறார்கள்.

இந்த ஜீவான்மா அடுத்த நிலை தியான நுட்பங்களிலே ஆழ்ந்து ஈடுபடுகிறது.

உடலால் செய்வது போல், மனதாலே செய்யத் துவங்குகிறார்கள். அதாவது நிலத்தின் மேல் பயணம் செய்வதுபோய், நீரின் மேல் பயணம் செய்வது, தாவி, அந்தப் பக்கம் வந்து விடுகிறார். சத்குருவுக்குப் பாலம் தேவையில்லை. அதனால், ஜீவான்மாவைப் பாலத்தின் வழியே வரச் சொல்லிவிட்டு, இவர் என்ன செய்கிறார்? ஒரே தாவாகத் தாவி, அந்தப்பக்கம் போய்விடுகிறார்.

ஏற்கெனவே சென்று, அந்த முதல் அனுபவத்தை, ஜீவாத்மாவுக்குக் கொடுத்த போதே, மாயையைக்கு அடிவயிறு கலங்க வைத்துவிட்டார் சத்குரு நாதர்.

அங்கே சென்று பரமாத்மாவைப் பார்த்துவிட்டு, ஜீவாத்மாவுக்குச் செய்தி கொடுப்பதற்கு முன்பே, இங்கே என்ன ரகளை செய்து விடுகிறார்? மாயைக்கு என்ன கலக்கத்தைச் செய்து விடுகிறார்?

"உனக்கு நேரம் வந்துவிட்டது," என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

ராவணனுக்கு மணி அடித்து விட்டு வந்துவிடுகிறார். "ராவணா! உனக்கு நேரம் வந்துவிட்டது," என்று எச்சரித்துவிட்டு வந்துவிட்டார்.

ராவணனின் கோட்டைக்குள்ளேயே சென்று திரும்பவல்ல சத்குருநாதரால்தான், உங்களைக் கைபிடித்து கரையேற்ற முடியும். இந்தக் கரையில் இருப்பவர்களை அந்தக் கரைக்கு அழைத்துச் செல்வதும் லேசுபட்ட காரியம் அல்ல. இக்கரையில் இருப்பவர்களை அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு சத்குருவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்.