உழைக்காமல் பெறுவது ஜீவனுக்கு அழகாகாது.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Attaining without working for it is no credit forThe soul
இப்போது அடுத்து என்ன செய்வது?
அதற்கும் சத்குருவே வழி சொல்கிறார்.
நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அருமையான கதை.
நினைத்திருந்தால் நேரடியாக அனுமானே சீதையைத் தூக்கி ராமனிடம் சேர்த்திருக்க முடியும்.
பரமாத்மாவைத் தூக்கி வந்து, ஜீவாத்மாவிடம் சேர்த்திருக்க முடியும்.
ஆனால், பரமாத்மாவைத் தூக்கி வந்து ஜீவாத்மாவிடம் வைத்தாலும், ஜீவாத்மா தன்னுடைய மாயையைக் கொல்லாமல் அந்தப் பரமாத்மாவை, ஆன்ம அனுபவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
மாயையை அழிக்கிற அளவுக்கு ஜீவாத்மா வளர்ந்தாக வேண்டும். ராவணனை அழிக்கிற அளவுக்கு ராமன் வளர்ந்தாக வேண்டும்.
அப்போதுதான் சீதையை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
என்னதான் சத்குருவே நினைத்து ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைத்து விட்டாலும், மாயை அழியாதவரை, அது நிரந்தரம் கிடையாது.
எப்போது வேண்டுமானாலும் மாயை திரும்பவும் பரமாத்மாவைத் தூக்கிச் சென்றுவிட முடியும்.
ராவணன் எப்போது வேண்டுமானாலும் சீதையைத் தூக்கிச் சென்றுவிட முடியும்.
அதனால் சத்குருவின் வேலை என்ன வென்றால், பரமாத்மாவை மாயையிடம் இருந்து எடுத்து வந்து ஜீவாத்மாவிடம் ஒப்படைப்பது அல்ல.
ஜீவாத்மாவை உற்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி, மாயையை அழிக்கச் செய்வதுதான்.
சத்குருவினுடைய வேலையே உங்களை உற்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி ஞானத்தை அடையச் செய்வதே தவிர, எடுத்து வந்து ரெடிமேடு கேக் போல் உங்கள் வாயில் வைத்து விடுவது அல்ல.
அப்படியே அதை எடுத்து வந்து வைத்தாலும், உங்களால் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் அதை இழந்துவிட முடியும்.
உழைக்காமல், தேவைப்படாமல், தேவையை நோக்கி உங்கள் உணர்வு முழுவதும்
இயங்காமல், அடையப்படுவது எல்லாமே
இழக்கப்படும். அது எதுவாக இருந்தாலும்,
ஞானமாகவே இருந்தாலும் அது
இழக்கப்பட்டு விடும்.
உத்வேகத்தை ஏற்படுத்தி, உற்சாகத்தை
ஏற்படுத்தி, அதற்காக உங்கள் உணர்வு
முழுவதையும் ஒன்றுதிரட்டி, நீங்கள்
அடைகிற ஒன்றுமட்டும்தான் உங்களுக்கு
நிரந்தரம்.
[ உத்வேத்தை ஏற்படுத்தி
உற்சாகத்தை ஏற்படுத்தி
அதற்காக உங்கள் உணர்வு
முழுவதையும் ஒன்று
திரட்டி நீங்கள் அடைகிற
ஒன்றுமட்டும்தான்
உங்களுக்கு நிரந்தரம். ]
அது தெரிந்ததனால்தான் அனுமன் இதைச் செய்கிறார். தேவையில்லாத வேலையைப் போல் தோன்றினாலும்கூட, மொத்த நிகழ்ச்சியையும் அருமையாக நடத்தி, ராமரைப் பாலம் கட்ட உத்சாகப் படுத்துகிறார்.
உடல் ரீதியான விஷயத்தைத் தாண்டி, உணர்வு ரீதியான விஷயங்களுக்குள் நுழைவதற்கான, அருமையான தியான நுட்பங்களை வகுத்துத் தருகிறார் அனுமனாகிய சத்குரு, இந்தத் தியான நுட்பங்களை வகுத்துத் தருகிறார்.
“அப்பா, இந்த உடல் வரைக்கும் வந்துவிட்டீர்கள். இனி உடலைத் தாண்டிச் செல்ல வேண்டும்,” என்று உத்வேகப் படுத்துகிறார்.
மனம் என்ற உணர்வுக்குள் போவதற்குள், தடுமாறி, சோம்பல் வந்து, மந்தத்தன்மை வந்து, துக்கம் வந்து தடுமாறுகிற நேரத்தில்தான், முதலில் அந்த ஆன்மீக அனுபவத்தைக் (Spiritual Experience) கொடுக்கிறார். முதல் ஆன்ம அனுபவத்தை அளிக்கிறார்.
அந்த அனுபவம் அடைந்த உடனே உற்சாகம் பொங்குகிறது, உத்வேகம் பொங்குகிறது.
அடுத்து என்ன செய்வது?
பரபரவென்று யோசிக்கிறார்கள்.