பயம்கூட நம்மைப் பலப்படுத்தும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Even fear will strengthen us
தேடுதல், வாழ்க்கையாக மாற வேண்டும்.
வாழ்க்கையில் தேடுதல் இருக்ககூடாது. தேடுதலே வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு பயம் பக்கத்தில் இருந்து துரத்தினால் மட்டும்தான், அது ஞானத்தை நோக்கிய தேடுதல் வேட்கையாக மாறிக்கொண்டே இருக்கும்.
அதனால் தான் பிரபஞ்ச சக்தி, பயத்தை உள்ளே வைப்பதன் மூலமாகக்கூட நம்மைப் பக்குவமாக்குகிறது.
ஒரே சக்திதான், உத்வேகம் (inspiration) மேலே பொங்கி வரும்போது, அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நமக்குப் புத்திசாலித்தனம் (intelligence) இருந்தால், அது உத்வேகமாக வெளிப்படும்.
ஏதாவது ஒரு பயம்
பக்கத்தில் இருந்து
துரத்தினால் மட்டும்தான்
அது ஞானத்தை
நோக்கிய தேடுதல்
வேட்டையாக மாறிக்
கொண்டே இருக்கும்.
உத்வேகம் (inspiration) மேலே வரும்போது, அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாம் சக்தி இல்லாமல், மந்தமாக இருந்தால், அதுவே பயமாக வெளிப்படும், அவ்வளவுதான்.
கங்கோத்ரியில் இருக்கும் கங்கையும், கொல்கத்தாவில் இருக்கும் கங்கையும் ஒன்றுதான்.
ஆனால், கங்கோத்ரியில் பொங்கும் கங்கை தூய்மையாக இருக்கும். கொல்கத்தாவில் அதே கங்கை அழுக்காக இருக்கும். கங்கையை எங்கு நீங்கள் பிடித்து வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். எங்கு நீங்கள் அதை அள்ளிக் குடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
கங்கோத்ரியில் இருக்கும் கங்கை உற்சாகம். கொல்கத்தாவில் உள்ள கங்கை பயம்.
ஒரே சக்திதான். கங்கோத்ரியிலேயே அதாவது உற்சாகம் பொங்கும்போதே அதை எடுத்துக் குடிக்கும் அளவுக்கு, உணர்வு இருந்து அங்கேயே உங்களின் உணர்வு உயர்ந்து சென்றுவிட்டால், உங்களை உற்சாகத்தின் மூலமாகவே பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.
உற்சாகம் பொங்கும்போது, கோட்டை விட்டுவிடுவோமானால், பயத்தின் மூலமாகத்தான் பக்குவமாவோம். கொல்கத்தாவிற்கு சென்று அங்குள்ள அழுக்கு நீரைத்தான் பருக வேண்டியிருக்கும்.
ஆனந்தத்தைப் பெற்றதால், அந்த உத்வேகத்தாலேயே வேகவேகமாக அடுத்த கணமே அது பரமாத்மாவை தேடத் துவங்கி இருந்தால், பயம் தேவைப் பட்டிருக்காது.
அதைச் செய்யாததினாலே சத்குரு நாதன் பயத்தைக்கொண்டு வருகிறார். அனுமன் பயத்தைக்கொண்டு வருகிறார்.
பயத்தைக்கொண்டு வந்தவுடனேயே, சுக்ரீவன் விழித்துக் கொள்கிறான். சுக்ரீவன் தன்னுடைய குரங்குப் படைகள் மொத்தத்தையும் திரட்டுகிறான்.
அப்படி என்றால், என்ன பொருள் தெரியுமா?
புத்தி, சுக்ரீவன் தம்முடைய செயல், சொல், சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி "ஞானத்தை அடைவதே குறிக்கோள்," என்று ஜீவான்மாவுக்குத் துணையாக நிற்கிறது.
அதுதான் கிஷ்கிந்தை.
மொத்தத்தையும் திரட்டி, சுக்ரீவன் பரமாத்மாவைத் தேடுவதற்குத் தெற்குத் திசை நோக்கிச் செல்கிறான்.
நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு குரங்கு.
ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வானரத்திற்குச் சமம்.
கண், தனியாக ஒரு வானரம் போல் பறக்கிறது. காது, தனியாக இன்னொரு வானரம் போல் பறக்கிறது.
நாக்கு, தனியாக இன்னொரு வானரம் மாதிரி பறக்கிறது.
ஒவ்வொரு உறுப்பும், மனத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வானரத்தைப் போலப் பறக்கிறது.
விவேகானந்தர் மனத்தைப் பற்றி மிக அழகாகச் சொல்கிறார், "மனம் என்பது, சாதாரணக் குரங்கு இல்லை. கள் குடித்த, தேள் கொட்டிய, அதுகூடப் போதாமல், பேய் பிடித்த குரங்குக்குச் சமம்."
சாதாரணக் குரங்கே போதும்...! அது அடிக்கிற லூட்டியே தாங்க முடியாது.
அது, கள் வேறு குடித்துவிட்டது என்றால் என்னாகும்? அது போதாதென்று தேள் வேறு கொட்டிவிட்டதாம். அப்போது எப்படிக்குதித்துக் கொண்டிருக்கும்?
அது போதாமல் அந்தக் குரங்கைப் பேய் பிடித்து விட்டதாம்.
அப்போது அது எப்படிக் குதித்திருக்கும்? அதுவும் போதாமல் சுற்றிலும் தேனீக்கள் உட்கார்ந்து, அந்தக் குரங்கைக் கொட்டிக் கொண்டிருந்ததாம்.
அப்போது அந்தக் குரங்கு என்ன கதியில் இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
அதுதான் நம்முடைய மனம் என்று விவேகானந்தர் சொல்லுகிறார்.
அதேமாதிரிதான் நம்முடைய ஒவ்வொரு புலனும், ஒவ்வொரு குரங்கு !
இந்தக் குரங்குகளெல்லாவற்றையும், இந்தப் புத்தியால் மட்டும்தான் ஒன்று திரட்ட முடியும். சுக்ரீவனால்தான் ஒன்று திரட்ட முடியும்.
குரங்குகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, புத்தியான சுக்ரீவன், ஜீவான்மாவான ராமனுக்குத் துணையாக, பரமாத்மாவைத் தேடுகிற பயணத்திலே நிற்கிறான். புத்தி, ஞானத் தேடுதலிலே பலமாக நிற்கிறது.
உடனே சத்குருவான அனுமன் எந்தத் திசை வழியாகப் போக வேண்டும், எப்படி அடைய வேண்டும் என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்து, அந்தப் பாதையை விளக்குகிறார்.
தெற்குத் திசை நோக்கிக் கிளம்புகிறார்கள்.
பரமாத்மாவினுடைய சாயல் எந்தத் திசையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் திசையை நோக்கிக் கிளம்புகிறார்கள்.
எந்த வழியாக இழந்தோமோ, அந்த வழியாகவே செல்கிறார்கள். அதை நோக்கிக் கிளம்புகிறார்கள்.
ஜடாயு என்ற கழுகு, இராமாயணத் தில், சீதை கவர்ந்து செல்லப்படும்பொழுது, தடுத்து நிறுத்தி, சண்டையிட முயற்சி செய்கிறது. ஆனால் மாயையாகிய ராவணன், ஜடாயுவை தாக்கியதால் அது கீழே விழுந்து மரணமடைகிறது.
இந்த ஜடாயு என்ற கழுகுதான், நம்முடைய வாழ்க்கையில் சில நேரத்தில், எதிர்பாராமல் வந்து நமக்கு அறிவுரை சொல்கிற மூத்தோர்கள், முன்னோர்கள், முதியோர்கள், தார்மீகவான்கள்.
பரமாத்மாவோடு நமக்கு இருக்கிற தொடர்பு அறுபடும்பொழுது, அதைப் பல்வேறு குணங்கள் கொண்ட பேரரக்கனான, மாயையான ராவணன் கவர்ந்து செல்லும் பொழுது, இடையில் வந்து தடுத்து நிறுத்தி, எதிர்த்து நிற்கிற ஜடாயுதான், நம் வாழ்க்கையில் வருகிற தர்மவான்கள், நம்முடைய முன்னோர்கள்.
சில நேரத்தில் குரு இல்லாதபோது, சில தர்மவான்கள் தாங்களாகவே முன்வந்து, அந்த அனுபவத்திலிருந்து நாம் பிரிந்து விடாமல் இருக்க முயற்சி செய்வார்கள்.
உதவி செய்ய வருவார்கள். ஆனால், மாயை அவர்களைத் தாண்டி, அவர்கள் மீதே பழி சுமத்துகிறாற்போல், ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
யார் நமக்கு உதவ வந்தார்களோ, அவர்கள் மீதே பழி சுமத்துகிறாற்போல், நம் மனத்தை மாற்றிவிடும், அந்த மாதிரி ஜடாயுதான் அந்தத் தர்மவான்கள்.
சீதை, தான் செல்கிற வழியெல்லாம் தன்னுடைய
சில அணிகலன்களைக் கழற்றிப் போட்டு
விட்டுப் போகிறாள்.
ஜீவான்மாவிற்கு வழி
சொல்வதற்காக, பரமாத்மா
கழற்றிப் போட்டுவிட்டுப்
போகிற ஆபரணங்கள்தான்
ஆன்மீக அனுபவங்கள்.