KAILASA Library/ஜீவன் முக்தி/எடுத்துரைப்பதா? இல்லை இடித்துரைப்பதா?Sign in
ஜீவன் முக்தி

எடுத்துரைப்பதா? இல்லை இடித்துரைப்பதா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Advise and teach? Or tease and teach?

இப்போது, அடுத்து என்ன ஆகிறது?

சுக்ரீவன் தன் ஆனந்தத்தைப் பார்த்தவுடனேயே, ராமனுக்குத்தான் செய்து கொடுத்த ச த்தியத்தை மறந்து விடுகிறான்.

“பரமாத்மாவைக் கொண்டுவந்து உன்னோடு நான் சேர்ப்பேன். ஞானம் அடைய வைப்பேன்,” என்ற சத்தியத்தை மறந்து, என்ன செய்கிறான்? நன்றாக ஜாலியாக, சோமரசம், சோமபானம் எல்லாவற்றையும் குடித்துவிட்டு, ஆனந்தத்தோடு இனிமையாக வாழ ஆரம்பித்துவிடுகிறான்.

ஞான சத்குருவை வாழ்வில் சந்தித்தப் பின் பல சீடர்களின் வாழ்வில் நிகழும் சம்பவம் இது. ஞான மடைவதற்காக சத்குரு கொடுத்த சத்யங்களை வைத்து தற்காலிகமாக அழிந்துவிடக்கூடிய வாழ்வின் சின்ன சின்ன அம்சங்களில் கிடைக்கும் இனிமைகளில் இலக்கை மறந்து வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

கதையில் ஆறுமாதம் கழிந்தது. ஒரு ஆண்டும் கழிந்தது. சுக்ரீவன் தன் இலக்கு நோக்கி திரும்புவதாகவே தெரியவில்லை.

ராமர் பார்த்தார், ‘என்னடா இது ? சரி, அதிக நாள் மனைவியோடு இல்லாமல் இருந்தான். இப்போதுதான் சேர்ந்து வாழ்கிறான். கொஞ்சநாள் வாழட்டும், பரவாயில்லை என்று சும்மாயிருந்தால், நமக்கு இவன் அளித்த சத்தியத்தையே மறந்துவிட்டானே! என்ன செய்வது ?’ என்று யோசித்தார்.

நீங்களும் உங்களின் வாழ்வில் பார்த்திருப்பீர்கள், உடல் நலமும், மன நலமும் வந்து விட்டால் போதும், அதன் பிறகு ஜாஸ்தி தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றாது. அப்படியே நம்முடைய ஆன்மீகப் பாதையில் பெருத்த மந்தத் தன்மை வந்துவிடும்.

‘எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது’ என்று தினமும் தியானம் செய்வதைக்கூட பல சுக்ரீவர்கள் நிறுத்தி விடுகிறார்கள்.

சில நேரத்தில், ஆஸ்ரமத்திற்குள் வந்து பிரம்மச்சரியம் எடுத்தவுடனே, சிலருக்கு இந்த மந்தத்தன்மை வரும். எல்லாமே முடிந்து விட்டது மாதிரி தோன்றும்.’’

ஏனென்றால், வாலி வதம் முடிந்து விட்டது.

இதற்குமேல், உடனடியாக ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம்

ஜீவாத்மாவை
பரமாத்மாவிடம்
கொண்டு சேர்க்க
வேண்டும் அதுதான்
ஒப்பந்தம்.

இல்லை.

அதாவது, உடனடியாக தீர்த்தாக வேண்டிய பிரச்சினை இருந்தால் மட்டும்தான்... தலை பற்றிக்கொண்டு எரிந்தால் மட்டும்தான், ஞானம் அடைய வேண்டும் என்கிற எண்ணமேகூட வரும்.

தலை அணைந்து போய்விட்டதென்றால், "சரி, பரவாயில்லை. இரண்டா வது முறை நெருப்புப் பிடிக்கிறவரை சும்மாயிருக்கலாம்," என்று தோன்றும். பலர் இப்படித்தான் ஒருசில தியான முகாம்களுக்கு வந்து உடலும் மனமும் ஓரளவு தேறிவிட்டாலே போதும். தியானம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை சு க்ரீவனுக்கு வந்துவிட்டது.

ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர வேண்டும் என்கிற எண்ணம் மறந்து, புத்தி அந்தச் சுகத்திலேயே இருக்கத் துவங்கி விட்டது. அந்தச் சுகத்திலேயே புத்தி லயிக்கத் துவங்கிவிட்டது. இங்குதான் மந்தத்தன்மை ஆரம்பமாகிறது.

ஆரம்பத்தில் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய ஆன்மீகத் தேடுதல், உடல்நலம் இல்லாமல், மன நலம் இல்லாமல், அந்த அடிப்படையான சுகம்கூட இல்லாததினால்தான் ஆரம்பிக்கும்.

அந்த அடிப்படை சுகமான ஒரு ஆனந்தம் வந்து... அதாவது வாலி வதம் நடந்து, ஆனந்தம் என்ற மனைவி திரும்பி வந்தவுடனே, என்ன ஆவோம் நாம்? அப்படியே தேடுதலை நிறுத்தி விடுகிறோம்.

அதற்குமேல் ஞானத்திற்குள் போவது இல்லை. அப்புறம் ஜீவன் முக்திக்கு உழைப்பதில்லை.

இந்த வாலி வதத்தோடு முடிந்த ராமாயணங்கள், பல ராமாயணங்கள்!

பல ராமர்கள் வாலி வதத்தோடு முடிந்துவிடுகிறார்கள். காரணம், சுக்ரீவன் தனது மனைவியை அடைந்ததும், அதன் பிறகு அவன் ஒத்துழைப்பது இல்லை. ஆனந்தத்தை அடைந்ததும் புத்தி ஞானத்தை அடைவதற்காக ஒத்துழைப்பதில்லை.

இப்போது சுக்ரீவன் ஒத்துழைத்தால்தான், அதற்கடுத்து, பயணம் துவங்கும்.

அதற்காக, இப்போது சத்குருவான அனுமன் தூது செல்கிறார்.

கதையைப் பார்த்தீர்கள் என்றால், அனுமார் சுக்ரீவனிடம் தூது போகிறார்.

சுக்ரீவனிடம் சொல்கிறார், "அப்பா, நீ செய்வது தப்பு. செய்வது பெரும் தவறு. உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்ததே, நீ உன் சக்தி மொத்தத்தையும் ஒன்றுதிரட்டி ராமருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒப்பந்தத்தின் ஒரு பாகம் இது. உன்னுடைய பங்குக்கு நீ என்ன செய்ய வேண்டும்? ச க்தியை எல்லாம் திரட்டி, அவருக்குச் சீதையை மீட்டுத்தர வேண்டும் என்று சுக்ரீவனிடம் அவனுடைய பொறுப்பை உணர்த்துகிறார்

அப்படியென்றால், என்ன அர்த்தம் என்றால், உடலுக்கும், மனதுக்கும் ஒரு அளவிற்குச் சக்தியைக் கொடுத்துத் தயார் செய்தவுடனே, அந்த உடம்பும், மனதும், தன் சக்தியை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, ஜீவாத்மாவை பரமாத்மாவிடம்கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் ஒப்பந்தம்.

ஆனால், இந்த உடம்பும் மனதும், புத்திக்கு ஓரளவு ஆனந்தமும் சுகமும் வந்தபிறகு என்ன செய்யும்? “அட, இதற்கப்புறம் என்னப்பா செய்யப் போகிறாய்? சும்மா விடப்பா. ஏன், நமக்கு தலைக்கு மீறின வேலையையெல்லாம் எடுப்பானேன், விடப்பா,” என்று விட்டு விடும்.

அப்போதுதான், ‘இடித்து உரைத்தல்’, அல்லது ‘எடுத்துரைத்தல்’, இந்த இரண்டு வேலையையும்தான் சத்குருநாதர் செய்வார். சிலபேருக்கு ‘எடுத்துரைப்பார்’ சிலபேருக்கு ‘இடித்துரைப்பார்.’

இங்கே சுக்ரீவனுக்கு எடுத்தும், இடித்தும் அனுமன் உரைக்கிறார். உரைத்தவுடனே திடீரென்று சுக்ரீவனுக்கு ஓரளவுக்குத் தெளிவு வருகிறது. இருந்தாலும் ஒருபக்கம் மனம், “என்ன செய்யப் போகிறோம்? நமக்குத்தான் நடக்க வேண்டியது நடந்து விட்டதே!”

அப்போது அனுமன் சொல்கிறார், “நீ இப்போது உதவி செய்யவில்லை என்றால், ராமர் உன்னைச் சும்மாவிட மாட்டார்!”

கொஞ்சம் பயத்தைக் காட்டிய உடனே, புத்தி என்ன செய்கிறது?

விழித்துக் கொள்கிறது. “நாம் ஜீவாத்மாவோடு, பரமாத்மாவைச் சேர்க்கிற, வேலையை, ஞானம் அடைகிற வேலையைச் செய்யாவிட்டால், நாம் இப்போது அடைந்திருக்கிற ‘ஆனந்தம்’ என்ற மனைவி இதே போல் தொடர்ந்து நம்மோடு தங்காது. நிரந்தரமாக இதேமாதிரி இருக்காது,” என்ற பயம் வந்தால் மட்டும்தான், புத்திக்கு அதைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் வரும்.

ஆர்வம், அவசரமாக மாறும்.