புத்தி கண்ட ஆனந்தம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
The IntelligenceThat found Bliss
இருவரும் வாலியை அழிப்பதற்கு, அவையில் உட்கார்ந்து திட்டம் தீட்டுகிறார்கள்.
இந்த அகங்காரத்துக்கு மட்டும் எப்போதுமே பெரிய சக்தி உண்டு.
நேரடியாக அதை எதிர் கொண்டீர்கள் என்றால், அது இன்னமும் அதிகமாக வளர்ந்துகொண்டே போகுமே தவிர, அழியாது.
அதை மறைமுகமாகத்தான் அழிக்க முடியும். அதைத்தான் தியான நுட்பம் என்று சொல்வது.
"நேரடியாக அகங்காரத்தை அழிக்க முடியாது. மறைந்து நின்றுதான் நீங்கள் அழித்தாக வேண்டும்," என்று பலத்தையும், பலவீனத்தையும் ஞான சத்குருநாதர் விளக்குகிறார். அதாவது நுட்பத்தை தீக்ஷையாகக் கொடுக்கிறார்.
தீக்ஷை நடைபெறுகிறது. இங்கு ஞான சத்குருதான் ஜீவாத்மாவிற்கு தீக்ஷை அளிக்கிறார்.
அப்போது சொல்கிறார், "புத்தியையும், அகங்காரத்தையும் மோதவிடு."
பட்டறிவையும், அகங்காரத்தையும் மோதவிடுவது.
பல நேரத்தில் பக்தர்களிடம் சொல்வ துண்டு. "நான் உங்களிடம் பேசுவதற்குக் காரணமே, நீங்கள் உங்களுக்குள் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்."
வேறு ஒன்றும் இல்லை.
நான் சும்மா இருந்தால், நீங்கள் உள்ளே பேசிக்கொண்டே இருப்பீர்கள்.
நான் பேசும்பொழுது, அந்த வார்த்தைகளைப் பார்த்து, உங்களுடைய மனம், இந்த வார்த்தைகளோடு சண்டை அடித்துக் கொண்டிருக்கும்.
அப்போது நான் என்ன செய்வேன், என்னுடைய வேலையை, உங்கள் உள்ளுக்குள் கவனித்து விடுவேன். நான் உங்களுக்குள் செய்ய வேண்டியதை செய்து விடுவேன்.
இங்கும் அதுதான் நடக்கிறது. பட்டறிவாகிய சுக்ரீவனை அனுப்பி, அகங்காரமான வாலியை மோத விடுகிறார்.
இரண்டுபேரும் அவர்களுடைய வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இரண்டுபேரும் மோதிக்கொண்டு இருக்கிற நேரத்திலே, ராமர் ஜீவாத்மா அமைதியாகத் தம்முடைய வேலையை முடித்து விடுகிறார். சத்குருவின் வழிகாட்டுதலில் இனிமையாக நடக்க வேண்டியது நடந்தேறுகிறது.
அதாவது நேரடியாக அகங்காரத்தோடு
மோத முடியாது. வாலியும், சு
க்ரீவனும் எதிரெதிராகப் போரிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒரு முக்கியமான பிரச்சி
னை, முக்கியமான ஒரு விஷயம்
என்னவென்றால் புத்தியும்,
அகங்காரமும் பார்ப்பதற்கு
பெரும்பாலும் ஒரே மாதிரிதான்
இருக்கும்.
> நான் பேசும்பொழுது இந்த
> வார்த்தைகளைப் பார்த்து மனம்
> இந்த வார்த்தைகளோடு சண்டை
> அடித்துக் கொண்டிருக்கும்
> அப்போது என்னுடைய வேலையை
> உங்கள் உள்ளுக்குள் கவனித்து
> விடுவேன்
வாலியும், சுக்ரீவனும், ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள். இப்போது 'வாலிக்கு துணை செய்வதா? சுக்ரீவனுக்கு துணை செய்வதா?' என்று ஜீவாத்மா தடுமாறிப் போய் விடுகிறது.
முதல்நாள் போரில், கதைப்படி, ராமாயணத்தின்படி ராமர் யார்மீது அம்பு விடுப்பது என்று தெரியாமல் அம்பெய்வதை விட்டு விடுகிறார். நிறுத்தி விடுகிறார்.
சுக்ரீவன், வாலியிடம் சரியான உதை வாங்கிக்கொண்டு திரும்பி விடுகிறான்.
வந்து ராமர் காலில் விழுந்து, "என்ன அய்யா! 'நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி அனுப்பினீர்கள். பின்னால் வருவீர்கள், நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்றுதானே நிம்மதியாய், தைரியமாய்ப் போனேன்.
என்னை அனுப்பி விட்டு என்ன செய்து கொண்டிருந்தீர்கள். நான் உதை வாங்கியதைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தீர்களா?" என்று கேட்கிறார்.
ராமர் சொல்கிறார், "நான் என்னப்பா செய்வது? உனக்கும், அவனுக்கும் வித்தியாசமே எனக்குத் தெரியவில்லை.''
ஒரு மிகப்பெரிய உண்மை என்ன வென்றால் புத்திக்கும், அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.
இப்படி புத்திக்கும், அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஜீவான்மா தடுமாறுவதைத்தான் குழப்பம் என்று நாம் சொல்கிறோம், அதாவது மனக்குழப்பம்.
அப்போது உடனே ராமர், அனுமனை நோக்கித் திரும்புகிறார் தீர்வுக்காக!
அங்கு சத்குரு வருகிறார். சத்குரு வந்து அதற்கு ஒரு அருமையான தீர்வு கொடுக்கிறார், "புத்திக்கு ஒரு மாலை அணிவித்து அனுப்புங்கள்.
அப்படியென்றால்தான் இருவரும் சண்டை போடும்பொழுது சுக்ரீவன் யார் என்று தெரிந்து கொள்ளலாம். மாலை இல்லாத ஆளை நாம் நேரில் கவனித்துக் கொள்ளலாம்," என்று சொல்கிறார்.
அதனால் தான் சக்திக் காப்பையும் மாலையையும் தியானம் செய்பவர்கள் அணிந்துகொண்டே இருக்கிறார்கள். இவர் நம்மவர், இவர்கள் சுக்ரீவன்கள். இவர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள். இவர்கள் ஜீவன் முக்தியை வேண்டியவர்கள் என்பதை உணர்த்தத்தான் 24 மணி நேரமும் கழுத்தில் மாலை அணிந்து இருக்கிறார்கள்.
புத்தி உள்ளவர்கள் என்று அவர்களுக்கே சொல்லிக்கொள்வதற்காகத்தான் மாலை போட்டுக்கொண்டே சமுதாயத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்.
[ निर्वाण சரீரத்திலே
ஒளிந்துகொண்டு,
ஏழுசரீரங்களையும்
துளைத்துச் செல்லும்
ஞானசக்தியை ஜீவான்மா
வெளிப்படுத்துகிறது ]
மாலை போன்ற ஒன்று இல்லா விட்டால் சமூகப் பிராணியான மனிதனால் தம்மைத்தானே விழிப்புணர்வோடு தற்காத்துக் கொள்வது இயலாது.
இப்படி ஏதோ ஒரு வகையில், "நான் தியானம் செய்கிறவர்," என்ற நினைவூட்டுதல் நமக்கே இல்லாவிட்டால், நம் ஜீவன் குழம்பிவிடும். அதற்கு மாயையும், நிஜத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது.
இப்படி, 'யார் மேல் அம்பு பாய வேண்டும், யாரைக் காக்க வேண்டும்' என்று தெரியாமல் போய்விடுவதனால்தான், அனுமன் சத்குருநாதன், மாலை அணிவித்து அனுப்புகிறார்.
அப்போதிலிருந்துதான் தீக்ஷை பெற்ற சீடர்களுக்கு மாலை போடுவது ஆரம்பித்தது போல!
சுக்ரீவனுக்கு மாலையை அணிவித்து இரண்டாவது நாள் போருக்கு அனுப்பு கிறார்கள். இரண்டாவது நாள் போரில்,
இன்னொரு அருமையான கருத்து; மறைந்து நின்று, ஏழு ஜரா மரங்களைத் துளைத்துச் செல்லுமாறு அம்பைச் செலுத்துகிறார் ராமன்.
நிர்வாண சரீரத்திலே ஒளிந்துகொண்டு, ஏழு சரீரங்களையும் துளைத்துச் செல்லும் ஞானசக்தியை ஜீவான்மா வெளிப்படுத்துகிறது.
சத்குருநாதன் கொடுத்த தியான நுட்பத்தை உபயோகம் செய்து, அனுமன் கொடுத்த ஆலோசனையின் பேரிலே, ஏழு மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, அந்த அனுமன் கொடுத்த தீக்ஷையாகிய கருத்துகளை உள்வாங்கி, தம்முடைய சங்கல்பமாகிய அம்பை ராமர் எய்கிறார்.
அந்த அம்பு சென்று அகங்காரமான வாலியை அழித்து விடுகிறது. வாலி மோக்ஷம் நிகழ்கிறது.
நிர்வாண சரீரத்தில் இருந்து, உங்களின் சங்கல்பம் என்ற அம்பு வெளிப்பட்டால் மட்டும்தான், அகங்காரம் என்ற வாலியை அழிக்க முடியும்.
நீங்கள் வேறு எந்தச் சரீரத்தில் இருந்தீர்கள் என்றாலும், அகங்காரத்தை எதிர்கொண்டவுடன், உங்களின் பாதி சக்தி அகங்காரத்திற்குப் போய்விடும். அகங்காரத்தை ஒன்றும் செய்ய முடியாது.
வேறு ஒன்றுமில்லை, "இந்தத் தியானம் செய்யுங்கள்," என்று, நான் உங்களுக்குச் சொன்னவுடனேயே, உங்களின் அகங்காரம் என்ன செய்யும்?
உங்கள் அகங்காரம் செய்யும் முதல் வேலை, தியானம் செய்வதற்காக உங்களுக்குள் எழும் உற்சாகத்தில் பாதியை எடுத்து விடுவதுதான்.
அகங்காரம் பேசும். "எத்தனையோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். அதெல்லாம் ஒன்றும் முடியவில்லை," என்று காரணம் சொல்லும். அப்படியென்றால், என்ன அர்த்தம்? முயற்சிக்கு முன்பாகவே உங்களுடைய சக்தியில் பாதி அகங்காரத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகிறது.
வாலி என்றால் என்னவென்றால், நீங்கள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, "இதைச் செய்தாலும் உருப்படாது," என்று ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடுகிறீர்கள் இல்லையா? அதுதான் வாலி.
"நான் தொட்டு ஏதாவது உருப்பட்டு இருக்கிறதா? நான் எல்லாம் போய் இதைச் சாதிக்க முடியுமா?" என்று உங்களின் மனம், ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சலித்துக் கொள்கிறது, பார்த்தீர்களா, 'அதுதான் வாலி.' அதுதான் அகங்காரம்.
அந்த வாலியை நேரடியாக எதிர் கொள்ள முடியாது. அதனால் ஏழு சரீரங்களுக்குப் பின்னால் நிர்வாண சரீரத்திலே ஒளிந்துகொண்டு அந்த ஆன்ம ஞானநிலையிலே இருந்து, ஜீவான்மா வானது சங்கல்பம் என்ற சக்தியான அம்பை எய்கிறது.
சத்குருவின் தீக்ஷையின்படி, இந்தச் சங்கல்ப அம்பு எய்யப்பட்டது என்றால், நேராக அடித்து அகங்காரம் அழிகிறது. ஆனந்தம் மீண்டும் புத்திக்கு அளிக்கப்பட்டு விடுகிறது.
அதுதான் வாலி மோட்சம்.
அகங்காரம் அழிந்த விநாடியே ஆனந்தம் புத்தியை அடைகிறது.
ராமன் அனுமனைப் பார்த்தது, சுக்ரீவனை நண்பனாக்கிக்கொண்டு வாலியை அழித்தது என்பதுவரை ஆரோக்கியப் பயணம்.
அதற்குப் பிறகு ஆரம்பிப்பதுதான் ஆன்மீகப் பயணம்.