KAILASA Library/ஜீவன் முக்தி/திருடப்பட்ட ஆனந்தம் மீட்கப்பட வேண்டும்Sign in
ஜீவன் முக்தி

திருடப்பட்ட ஆனந்தம் மீட்கப்பட வேண்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The stolen bliss has to be restored

உங்கள் வாழ்க்கையிலும், அலைந்து கொண்டிருக்கிற ஜீவான்மாவுக்கு ஞானகுருநாதன் புத்தியை அறிமுகம் செய்து வைத்தால், அதனுடைய தேவையைத் தெரிந்துகொண்டு, அதன்வழி வாழ ஆரம்பிப்பீர்கள்.

பல்வேறு சத்யங்களின் மூலமாக உங்களின் புத்தியைப் பலமாக்குவதுதான் உங்களுக்குச் செய்யப்பட வேண்டிய முதல் உதவி.

ஞானகுருநாதனால் மட்டும்தான், ஜீவான்மாவிற்குப் புத்தியை அறிமுகப்படுத்த முடியும். இங்கு ஞானகுருநாதன் புத்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அப்படியென்றால், உங்களுக்குள் இருக்கிற தெளிவை உயிர்ப்பிக்கிறார். உங்களுக்குள் தெளிவு எப்போது உயிர்ப்பிக்கப்படுகிறதோ, அப்போதுதான் உங்களுக்கு முதன்முதலில் புரியும். "ஆஹா, நம்மிடம் இருந்த ஆனந்தத்தை, யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்களே," என்று!

சுக்ரீவனின் மனைவியான ஆனந்தம் களவாடப்பட்டிருக்கிறது. வாலி எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதேபோல தம்முடைய வாழ்க்கையின் சாரமான சீதையை மீட்கத்தான், பரமாத்மாவை மீட்கத்தான் ராமர் புறப்படுகிறார். ஜீவான்மா எப்பொழுது தம்முடைய பாகமான பரமாத்ம அனுபூதியை இழந்துவிட்டோம் என்று உணர்கிறதோ, அப்பொழுதுதான், தனியே அந்தக் காட்டிலே சிக்கித் தவிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறது. உடனே சத்குருவை, அனுமனை ஜீவான்மா தேடுகிறது.

நீங்களாக நேரில்
பார்த்தாலும்
முக்கியத்துவம் புரியாது
ஞானகுருநாதனால்
மட்டும்தான் புத்தியை
அறிமுகப்படுத்த
முடியும்.

சீதைதான் பரமாத்மா. எப்போது தம்முடைய,
பரமாத்ம ஸ்வரூபத்தோடு இருந்த தொடர்பை
இழந்துவிட்டதாக ஜீவாத்மா நினைக்கிறதோ,
அப்போதுதான் காட்டிலே அலைகிறது.

சத்குருவைத் தேடுகிறது. சத்குருவை நாடுகிறது.

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே பறந்து சென்று பரமாத்மாவைக்கொண்டு வந்து ஜீவாத்மாவோடு சேர்த்திருக்க முடியும். எப்படியானாலும் கடைசியில் அவர்தான் செய்தார். கடைசியில் பார்த்தால் அவரால்தான் மொத்தமுமே நடந்தது.

> ஜீவாத்மா சொல்கிறது: “நீ
> தொலைந்த ஆனந்தத்தை
> உனக்கு நான் மீட்டுக்
> கொடுக்கிறேன். நான்
> தொலைத்த பரமாத்மாவை
> மீட்டுக் கொள்வதற்கு,
> நீ எனக்கு உதவி செய்.”

ஆனால், உடனடியாகச் செய்யவில்லை. அனுமன் ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துகிறார். தயார்படுத்துகிறார்.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக இணைத்துத் தயார்படுத்துகிறார். புத்தியாகிய சு க்ரீவனை அறிமுகப்படுத்துகிறார்.

புத்திக்கு ஜீவான்மா தேவை என்பதையும்,

ஜீவான்மாவிற்கும் புத்தி தேவை என்பதையும்,

இருவருக்கும் உணர வைக்கிறார் சத்குரு அனுமன்.

அனுமன்தான், இரண்டுபேரும், ஒருவருக்கு ஒருவர் எப்படித் தேவைப் படுகிறார்கள் என்பதை உணர வைக்கிறார்.

உடனடியாகப், புத்தி - ஜீவான்மா சுக்ரீவன் - ராமன் இரண்டு பேருமே,

ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

புத்தி சொல்கிறது, “நான் தொலைத்த ஆனந்தத்தை எனக்கு மீட்டுக் கொடுங்கள்.”

ஜீவாத்மா சொல்கிறது: “நீ தொலைத்த ஆனந்தத்தை, உனக்கு நான் மீட்டுக் கொடுக்கி றேன். நான் தொலைத்த பரமாத்மாவை மீட்டுக் கொள்வதற்கு நீ எனக்கு உதவி செய்.”

இரண்டுபேருமே ஒப்புக் கொள்கிறார்கள். உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனந்தத்தைத் திருடிக்கொண்டு சென்றவன் யார்?

‘வாலி’, அகங்காரம்தான் அது!