இழந்ததை நினைவுபடுத்தும் சத்குரு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
The Guru -The one who reminds you of The lost paradise
அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திருக்கலாம்.
ஏனென்றால், கடைசியில் அனுமன்தான் அத்தனையும் செய்தார்.
ராமாயணத்தைப் பார்த்தீர்கள் என்றால், கடைசியில் அனுமன்தான் அனைத்தையும் செய்தார்.
கடைசியில் சத்குரு கிருபையினால்தான் எல்லாமே நடந்திருக்கும்.
ஆனால், தம்மால்தான் இது எல்லாமே நடந்தது போல், எங்கேயுமே அனுமன் காட்டிக்கொள்ளவேயில்லை.
கடைசி வரையிலும் என்னவாகத்தான் இருந்தார்? ஓரமாக, ஒதுங்கி ஒரு பார்வையாளராக மூலையிலேயேதான் இருந்தார்.
அதனால் தான் ராமர் ஆலயங்களை விட, அனுமாரருக்கு ஆலயங்கள் அதிகம்.
ராமருக்கு இருக்கிற கோயில்களை விட, அனுமாருக்குக் கோயில்கள் அதிகம்.
இத்தனையும் செய்து விட்டு, அவர் ஒதுங்கித்தான் இருந்தார். அதுதான் ஞான ச த்குருவின் குணாதிசயம். குணங்களையும் கடந்து வாழும் குணாதிசயம்.
ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், கதையில் சில விஷயங்கள், ரொம்ப விளையாட்டாக இருக்கும். அதில் ஒன்று பாலம் கட்டியது. ராமரே இலங்கைக்குச் செல்வதற்குப் பாலம் கட்ட வேண்டியதாக இருந்தது.
ஆனால், அனுமன் என்ன செய்தார்? தாண்டிக் குதித்துவிட்டார்.
நினைத்திருந்தால் இவரே என்ன
செய்திருக்கலாம்? போய், உடனே சீதையை
அழைத்து வந்து இருக்கலாம்.
ஜீவனுடைய துக்கத்தைத் தீர்த்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால், அந்த ஜீவனுக்கென்று ஒரு தனிவழி இருக்கிறது.
> ஜீவான்மாவை விட்டு
> எப்பொழுது புத்தி
> ஒதுங்குகிறதோ அப்போதே
> அகங்காரம்
> என்ன செய்யும்?
> ஆனந்தத்தைத்
> தூக்கிக்கொண்டு போய்விடும்.
அந்த ஜீவனுடைய பல்வேறு அம்சங்களையும் ஒன்று திரட்டுகிறார். அதுதான், அந்தப் படை திரட்டுதல். உங்களுக்குள் இருக்கும் ஜீவன், உங்களுடைய புத்தியையே உங்களுடையது என்று உணர மறந்து விட்டது. உங்களுடைய அகங்காரத்தை, உங்களுடைய எதிரி என்று உணர்வதை அது மறந்துவிட்டது.
உங்களுடைய ஆனந்தத்தை உங்களுக்குச் சொந்தமான ஒன்று என்று நினைப்பதையும் அது மறந்துவிட்டது. இந்த இழந்துவிட்ட எல்லாத் தெளிவையும் ஜீவனுக்குள் ஒன்றாக்குபவர்தான் அனுமன்; ஞான சத்குருநாதர்.
முதலில் ராமரை, சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று காண்பிக்கிறார். சுக்ரீவன்தான் புத்தி.
புத்திக்கு என்ன ஆயிற்று?
தான் தோன்றித்தனமாக, ஜீவனை விட்டுத் தனியாக இருந்ததால், அது ஆனந்தத்தை இழந்து விட்டது. அதாவது சுக்ரீவன் மனைவியை இழந்துவிட்டது.
அகங்காரம், வாலி அந்த ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது.
ஜீவான்மாவை விட்டு, எப்பொழுது புத்தி ஒதுங்குகிறதோ, அப்போதே அகங்காரம் என்ன செய்யும்? ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய்விடும்.
இதுதான் வாலி மோட்சத்தில் சொல்லப்படும் முதல் முக்கியமான சத்யம்.
சுக்ரீவனுடைய மனைவிதான் ஆனந்தம்.
ஆனால், சுக்ரீவனின் மனைவியை யார் தூக்கிச் சென்றார்கள்? அகங்காரம், வாலி, தூக்கிக்கொண்டு போய்விட்டது!
இப்போது புத்திக்கு என்ன வேண்டும்?
ஆனந்தம் வேண்டும்.
ஜீவான்மாவுக்கு என்ன வேண்டும்?
ஞானம் வேண்டும்.
சுக்ரீவனுக்கு மனைவி வேண்டும்.
ராமருக்குச் சீதை வேண்டும்.
அப்போது, புத்தியும் ஜீவான்மாவும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், இருவருமே அடைய வேண்டிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அடையலாம்.
அதனால்தான் சுக்ரீவன் ராமருக்கு எந்த அளவுக்குத் தேவைப்பட்டானோ, அதே அளவுக்கு ராமரும் சுக்ரீவனுக்குத் தேவைப்பட்டார்.
பார்த்தவுடனேயே, இரண்டு பேருக்குமே புரிந்து விட்டது. ஏனென்றால், சரியான குரு, இரண்டுபேரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.
உங்களின் இழந்த பகுதிகளை உங்களுக்குப் புரியவைத்து, உங்களின் ஜீவனையும், புத்தியையும் உங்களுக்கு உதவ வைப்பதுதான் உபநிஷத், தியான முகாம், தீக்ஷை என்பதெல்லாம்.
'உபநிஷத்' என்றால் அதன் அர்த்தமே வேறொன்றுமில்லை... குருவின் அருகாமையில் அமர்ந்திருத்தல் என்றர்த்தம். அவ்வளவுதான்.
தியான முகாம் என்றால் உங்களின் வாலியையே வெல்வதற்கான வெவ்வேறு யுக்திகளைக் குருவின் துணையோடு நீங்களே உபயோகித்து பார்ப்பது.