தப்பிய வேகத்தில் குருவைச் சந்தித்தால்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
If you meetThe Guru after a great escape...
"ஆனவி மனைவி மக்கள் அட்டவீ டணைகண் மூன்றும்
கானவர் வலையிற் பட்டுக் கைத்தப்பி யோடும் மான்போல்
போனவன் வெறுங் கையோடே போகாத வண்ணஞ் சென்று
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே."
எத்தனைத் தரம் சொன்னாலும், இந்தப் பாடலுடைய சத்தியம் அவ்வளவு ஆழமானது.
"வேட்டுவனுடைய வலையிலே சிக்கிய மான், ஒருவேளை அந்த வலையிலிருந்து தப்பிவிட்டால், அந்தப் பொறியிலிருந்து தப்பி விட்டால், என்ன ஓட்டம் ஓடுமோ, அந்த வேகத்தில் சத்குருவைக் கண்டு வணங்கி நின்றான்,'' என்று சொல்கிறது.
இந்த வேட்டுவர்கள், மானுக்கு எப்படி வலை விரிப்பார்கள் என்றால், ஒரு நான்கைந்து கயிறுகளில் சுருக்குமுடி போட்டு, அந்தக் கயிற்றை, நாலாபுறத்திலும் இழுத்துக் கட்டிவிட்டு, கீழே பள்ளம் தோண்டிவிட்டு, அதன்மீது இலைகளையும், தழைகளையும் போட்டுவிடுவார்கள்.
இந்த மான் அதைக் கடந்து நடந்து போகும் பொழுது, அந்த இலை, தழையைப் பார்த்து அதைத் தரை என்று நினைத்து, அதன்மீது காலை வைத்தவுடனே, அதன் கீழே பள்ளம் இருப்பதாலே, அந்த மானின் எடையால் இயற்கையாகவே அது கீழே போகும்.
மானினுடைய எடையினாலே, தானாகவே இந்தக் கயிறு சுருக்குப் போட்டுக் கொள்ளும். அதன் கால்கள் அந்தச் சுருக்குக் கயிற்றிலே சிக்கிக் கொள்ளும்.
இதுதான் வேடர்கள் வலை. ஒருவேளை அந்தமாதிரி மாட்டிய மான் எப்படியாவது தம்முடைய புத்திசாலித்தனத்தினாலே தப்பித்து விட்டால் என்ன செய்யும்? பின்னங்கால் பிடரியilபட தப்பித்து ஓடும்.
வேடர்களின் வலையில் சிக்கிய மான் நினைத்தால் அதனால் தப்பித்து விட முடியும்.
ஒன்றுமில்லை, அதனுடைய மொத்த எடையையும், அந்த வலை மேல் அழுத்தாமல், மற்ற இரண்டு, மூன்று கால்களாலே தரையை அழுத்திக்கொண்டு, ஒரு காலை மேலே தூக்கியது என்றால், அந்தச் சுருக்குத் தானாகவே கழலும். தப்பித்துப் போய்விடலாம்.
இப்படித்தான் நம் வாழ்வில் சந்திக்கும் எல்லா வலைகளும்.
எல்லா வலையுமே நாம் ஒத்துழைத்தால் மட்டும்தான், நம்மைப் பந்தப்படுத்தும்.
அது பாச வலையாக இருந்தாலும் சரி, மோச வலையாக இருந்தாலும் சரி. நாம் ஒத்துழைக்காதவரை, எந்த ஒரு வலையுமே நம்மைப் பந்தப்படுத்தாது.
நான் பார்த்திருக்கிறேன். திருவண்ணாமலையில் மலையிலிருந்து நிறையக் குரங்குகள் இறங்கிக் கீழே கோயிலுக்குள் வந்துவிடும்.
கோயிலுக்குள்ளும், ஊருக்குள்ளும் வந்துவிடும். மிகவும் அட்டகாசம் செய்யும். இந்தக் குரங்குகளைப் பிடிப்பதற்கு, ஒரு வித்தியாசமான வலை வைப்பார்கள்.
அதற்காகப் பெரிய கூண்டெல்லாம் செய்ய மாட்டார்கள்.
ஒரு சின்ன, சாதாரண டம்ளர் எடுத்து, அதனுடைய கீழ்ப் பகுதியை உடைத்துவிட்டு, அந்த டம்ளரைத் தரையில் வைத்துவிட்டு, டம்ளருக்கு இன்னொரு பக்கத்தில் ஸ்வீட்டை வைத்துவிடுவார்கள். அந்த டம்ளரை அருகேயிருக்கும் கல்லிலோ, மரத்திலோ கட்டிவிடுவார்கள்.
இந்தக் குரங்கு, டம்ளர் வழியாகக் கையைவிட்டு, டம்ளருக்கு அடுத்த பக்கம் இருக்கும் அந்த ஸ்வீட்டைப் பிடித்து
'ஜீவாத்மா'
சத்குருவைப்
பணிவதில்லை ஒரு
நட்புதான்
துவங்கியது.
எடுத்துக்கொள்ள முயற்சிக்கும். ஸ்வீட்டைப்
பிடித்த உடனே, அந்த ஸ்வீட்டைக் கையில்
மறைத்துக்கொண்டு, டம்ளர் வழியாகவே
கையைத் திரும்ப எடுக்க, முயற்சி செய்யும்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனால் எடுக்க முடியாது.
காரணம் அந்த டம்ளரைக் கயிற்றில் கட்டி
வைத்திருப்பார்கள். அவ்வளவுதான் அந்தக்
குரங்கால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.
பாவம் அந்தப் பைத்தியக்காரக் குரங்குக்குத் தெரியாது ...
அந்த ஸ்வீட்டை விட்டால் போதும், அந்த விநாடியே, கையை எடுத்து விடலாம் என்று!
ஆனால், அது அந்த ஸ்வீட்டைவிடவும் விடாது; தப்பிக்கவும் தப்பிக்காது.
இந்த ஸ்வீட்டையும் குரங்கு விடாது. கையையும் அதனால் எடுக்க முடியாது. அப்படியே நான்கு மணிநேரம் போராடிக் கொண்டிருக்கும். மெதுவாக அந்த வேடர்கள் வந்து, அழகாக அந்தக் குரங்கை பிடித்துக் கூண்டில் வைத்துக்கொண்டு போய்விடுவார்கள்.
ஸ்வீட்டை எடுக்க டம்ளருக்குள் கையை விடும்போது எளிதாக கை நுழைந்து விடும்.
ஆனால், ஸ்வீட்டை பிடித்துக் கொண்டபிறகு குரங்கால் கையை வெளியில் எடுக்க முடியாது. கை வெளியே வராது. சிக்கிக் கொள்ளும்.
குரங்கால் ஸ்வீட்டை சாப்பிடவும் முடியாது. தப்பிக்கவும் முடியாது. ஏனென்றால், கை சிக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்வீட்டை சாப்பிடவும் முடியாமல், தப்பித்துப் போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்.
'அப்பா, இந்த விநாடி ஆசை, அச்சத்தை விட்டோமானால் போதும், ஸ்வீட் எனும் அந்த ஆசையை விட்டால் போச்சு, சுதந்திரமாகி விடலாம்,' என்று அந்த அப்பாவி குரங்குக்குத் தெரியாது. அந்தக் கையில் பிடித்து இருக்கும் ஸ்வீட்டை விட்டால் போதும். கை எவ்வளவு எளிதாக உள்ளே சென்றதோ, அதே மாதிரி அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடும்.
ஆனால், குரங்குக்கு அந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் இல்லை.
நாம் எல்லோரும் அப்படித்தான் ஆசை அச்சத்திடம் சிக்கி இருக்கிறோம்.
எங்கெங்கே,
யார், யார் கையைக் காலை விட்டு விட்டு மாட்டிக்கொண்டு இருக்கிறீர்களோ, எல்லோரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்... நீங்கள் எல்லோரும் கையை இறுக்கமாக மடக்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். தப்பிப்பதற்குப் பதிலாக
மேலும், மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வதைபடுகிறீர்கள்.
‘என்ன செய்து கொண்டிருக்கிறோம்?’ என்பதை ஆராய்ந்து பாருங்கள். கையை இறுக்கமாக மடக்கிப் பிடித்திருப்பதைப் போல எதை எதையோ இறுக்கிப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
கையை மட்டும் அல்ல, காலையும்கூட இதே மாதிரிதான் சிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆழ்ந்து சிந்தித்ததால் அதைத்தான் பெரியவர்கள் கால்கட்டு என்று சொன்னார்களோ!? என்ற தெளிவு பிறக்கும்.
சிலநேரத்தில் கையைக் கண்ட இடத்தில் விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது தொழில் ரீதியான சிக்கல்
சிலநேரத்தில் காலைக் கண்ட இடத்தில் விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது வாழ்க்கை ரீதியான சிக்கல். சில நேரத்தில் தலையை எங்காவது விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது, மன ரீதியானச் சிக்கல்.
எல்லோருமே எங்கேயாவது, எதையாவது இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு இருப்போம். எதிலாவது மாட்டிக்கொண்டு இருப்போம்.
ஒருவேளை அந்த மாட்டிய மான், தப்பித்தால் என்ன வேகத்தில் ஓடுமோ, அந்த வேகத்தில், ஞான சத்குருவிடம் வருகிறவர்களுக்குத்தான் சத்தியம் புரிபடும் என்று அந்தப் பாடலில் சொல்கிறார்.
டம்ளரிலிருந்து குரங்கு தப்பித்தாலோ, வேடர்களிடமிருந்து மான் தப்பித்தாலோ எப்படி அது பின்னங்கால் பிடரியில் பட ஓடுமோ, அதுபோல் வாழ்க்கையில் எக்குத்தப்பாகக் கையைக் காலை விட்டுவிட்டுச் சிக்கி, தவித்துக் கொண்டிருக்கும் மனிதன், ச த்குருவைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் பின்னங்கால் பிடரியில் படும் வேகத்தில் அல்ல, முன்னங்கால் நெற்றியில் படும் வேகத்தில் ஓடிவருவான். இளைப்பாறுவான், சாந்தமடைவான்.
இராமர் அப்படித்தான் வாழ்க்கை என்கிற துக்கத்தில் மாட்டி, அதிலிருந்து தப்பித்து அனுமனிடம் வருகிறார்.
அனுமன் மெதுவாகக் கருணையோடு எல்லாவற்றையும் புரிய வைத்தார்.