KAILASA Library/ஜீவன் முக்தி/கொடுக்கப்பட்டவை நிரந்தரம் அல்ல; அடையப்பட்டவையே நிரந்தரம்Sign in
ஜீவன் முக்தி

கொடுக்கப்பட்டவை நிரந்தரம் அல்ல; அடையப்பட்டவையே நிரந்தரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

What has been given is not eternal, what has been achieved is eternal

ஞான சத்குரு நினைத்தால், அந்த விநாடியே, சீடனைப் பார்த்த அந்த விநாடியே, ஞானத்தைக் கொடுத்துவிட முடியும்.

சத்குருவால் நொடிப்பொழுதில் ஜீவன் முக்தியைத் தந்துவிட முடியும்.

மனிதனின் மனத்தை ஒரே ஒரு நொடியில் மென்று விழுங்கிவிடலாம்.

அனுமரால் வனத்திலிருந்து சீதையைத் தூக்கிக்கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அது ராமனின் வல்லமைக்கு அழகு அல்ல. ராமனின் பெருமைக்கு அது அழகு அல்ல.

ஜீவாத்மாவின் தகுதிக்கு அது அழகு அல்ல.

அதாவது கொடுக்கப்பட்ட ஞானம் எப்போதுமே நிரந்தரமாயிருப்பதில்லை.

எப்போதுமே பார்த்தீர்கள் என்றால், கொடுக்கப்பட்ட ஞானம் அனுபவிக்கப்படுவதே இல்லை.

அடையப்பட்ட ஞானம்தான், எப்போதும் அனுபவிக்கப்படுகிறது.

அதனால்தான் ஞான சத்குரு, எப்போதுமே தம்முடைய சீடன் வந்த உடனே, "உடனே ஞானம் கொடுக்கிறேன்," என்று சொல்ல மாட்டாராம்.

"சரி, நல்லதப்பா. சாதனை செய். மற்றவரின் உதவியெல்லாம் சேர்த்து வெற்றி கொள்ளலாம்," என்றுதான் சொல்வார்.

இப்படி உத்சாகமளித்து, ஜீவாத்மாவைப் புத்தியிடம் அழைத்துச் சென்று, ஜீவாத்மாவுக்கு உதவி செய்யக்கூடிய ஞானபலத்தை அளிப்பதுதான் ஞான சத்குருவின் கருணை செய்யும் பணி. அனுமான், ராமரை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்வது.

சுக்ரீவன், புத்தி.

உன்னுடைய புத்தியினுடைய ஆற்றலைச் சேர்த்துக்கொண்டு, சாதனையில் நுழையலாம் வா என்றுதான் ஜீவன் முக்த வாழ்வை வாழ்வதற்கான உற்சாகத்தைத் தந்து ஆனந்த வாழ்வை ஆரம்பிப்பார் ஞான சத்குருநாதர்.

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனிதச் சுதந்திரம் இருக்கிறது. உங்களின் அனுமதி இல்லாமல், உங்களின் விருப்பம் இல்லாமல்,

ஜீவன் முக்தி என்பது உங்களின் உயிரையே தொடும் ஆழமான அன்புப் பரிமாற்றம். தனிநபரின் முழு புரிந்து கொள்ளுதலும் விருப்பமும் இல்லாமல் முக்திக்கான யுக்தியை தர முடியாது.

உங்களின் கன்னத்தைப் பிடித்து ஒருவரால் கிள்ள முடியுமா? கொஞ்ச முடியுமா? முடியாது.

அவர் மீறினால், அவரின் அன்புகூட உங்களுக்கு அத்துமீறி நுழையும் அம்பாகத்தான் தெரியும்.

எரிச்சல்தான் மிஞ்சும்.

நீங்கள் தயாரித்தவரை உங்களின் கன்னத்தைக்கூட ஒருவரால் தொட முடியாது.

சத்குரு நினைத்தால்
அந்த விநாடியே
சீடனைப் பார்த்த
அந்த விநாடியே
ஞானத்தைக்
கொடுத்துவிட
முடியும்.

மனத்தை அழிக்க குரு செய்யும் உதவிகளைக்கூட, 'தம்மையே அழிப்பதற்காக குரு செய்கிறாரோ, அவரின் சுயலாபத்திற்காகச் செய்கிறாரோ' எனச் சந்தேகப்படும் மனத்தோடு தவிக்கும் சீடனைத் தயார்படுத்த, தாயாரின் பொறுமையையும் தாண்டிய கருணை சத்குருநாதருக்கு வேண்டும்.

சில முட்டாள் சீடர்கள், குருவின் அன்பைக்கூட அம்பாய் பார்த்துவிடுவர்.

குருவை இழந்து விடுவார்கள்.

ஜீவன் முக்தி என்பது, உங்களின் உயிரையே தொடும் அளவிற்குப் பாயும் ஆழமான அன்புப் பரிமாற்றம்.

தனிநபரின் முழுப் புரிந்துகொள்ளுதலும், விருப்பமும் இல்லாமல் முக்திக்கான யுக்தியைத் தர முடியாது.

மீறித் தந்தாலும் அது நிலைக்காது. எனவேதான் ஒவ்வொரு சீடனையும் ஞானத்துக்கு தயார் படுத்துவதே ஒவ்வொரு குருவுக்கும், ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும்.