அனுமன், ராமன் சந்திப்பு - குருசிஷ்யன் சந்திப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Meeting of Hanuman and Rama - a meeting of Guru and disciple
நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் விளக்குகிறோம்...
ராமன், உங்களின் ஜீவாத்மா, ராமனைச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்த அனுமன், உங்களின் ஞான சத்குருநாதர்.
சுக்ரீவன், உங்களின் புத்தி. வாலி, உங்களின் அகங்காரம். வாலி அபகரித்துச் சென்ற சுக்ரீவனுடைய மனைவிதான், உங்களின் ஆனந்தம்.
| 'ஜீவாத்மா' சத்குருவைப் பணிவதில்லை ஒரு நட்புதான் துவங்கியது. | இப்போது இழந்த ஆனந்தத்தை நீங்கள் மீண்டும் பெற வேண்டும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த இடத்தில் உங்களின் பூவுலக வாழ்வு, ஞான சஞ்சாரக் கோணத்தில் விளக்கப்படுகிறது. ஜீவாத்மா, ஏதோ ஒரு காரணத்தினாலே, தன்னிலை தடுமாறி வாழ்க்கை எனும் காட்டிலே திரிந்துகொண்டு இருக்கிறது. |
இந்தப் பிரபஞ்சமான அடர்ந்த, இருண்ட சாஸ்த்ரஜால, மஹாரண்யக் காட்டிலே, திரிந்து கொண்டிருக்கும் பொழுது...
தெரிந்தோ, தெரியாமலோ, ஜீவாத்மா திடீரென்று சத்குருவைச் சந்திக்கிறது. ராமன், அனுமனைச் சந்திக்கிறார்.
முதல்முறை பார்க்கும்போது ஜீவாத்மா, சத்குருவைப் பணிவதில்லை. சரணடைவதில்லை.
பார்த்த உடனே ராமனுக்கும், அனுமனுக்கும் ஒரு நட்புதான் துவங்கியது.

எந்த ஒரு சிஷ்யனும் முதலில் தன் குருவை, குருவாய்ப் பார்ப்பதில்லை.
நட்பில்தான் அவர்களின் உறவு ஆரம்பமாகும்.
நாளாக நாளாகத்தான் தன் வாழ்வில்
சத்குருவின் லீலைகள் செய்த இனிய
மாற்றங்களைப் பார்த்து நன்றி
பொங்கும். பணிவு வரும்.
அனுமன் அதுபற்றிக்கூட
கவலைப்படவில்லை. சத்குரு முதலில்
நண்பனாகத்தான் தோன்றுவார்.
ஆழமான ஒரு நட்புத்தன்மையைத்தான்
வெளிப்படுத்துவார்.
நேராகச் சென்று ராமனிடம் அனுமன்
பேசுகிறார். "எங்கிருந்து வருகிறீர்கள்?
என்ன வேண்டும்?"
இப்போது ராமர் அனுமாரிடம் உதவி கேட்கிறார். "என்னுடைய மனைவி சீதை காணாமல் போய்விட்டாள். நான் அவளைத் தேடி அடைய வேண்டும். அதனால்தான் இந்தப் பக்கமாக, இந்தப் புறமாக அலைந்து கொண்டிருக்கிறேன்."
ராமர் உதவி கேட்கிறார். ஆனால், அனுமார் அதை அகங்காரத்தோடு எதிர் கொள்ளவில்லை.
"ஓ, என்னிடம் உதவி கேட்கிறாய் இல்லையா, என் கீழே உட்கார்," என்று சொல்லவில்லை.
ஆழ்ந்த அன்போடும், நட்போடும், "வாருங்கள்! நிச்சயமாக, உங்களுக்கு எங்களால் உதவ முடியும். என்னுடைய அரசனை வந்து பாருங்கள்," என்று நம்பிக்கையூட்டுகிறார்.
அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே நேராகப் பறந்து போய், அசோக வனத்தில் இருந்த சீதையைக்கொண்டு வந்து ராமனிடம் சேர்த்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. காரணம், ராமன், ஜீவாத்மாவானது தான் இழந்ததை தவம் செய்துதான் அடைய வேண்டும். ஞான சத்குருவும் அதற்கு உதவி செய்வார்.