ஜீவன் முக்தி தீக்ஷை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Jeevan mukthi deeksha
ஏழு ஜரா மரங்களைத் தாண்டி இருக்கும் வாலியை அழிக்கும் அம்பு, மிக ஆழமான மெய்ஞ்ஞான விஞ்ஞான உண்மை. ஆராயப்படவேண்டிய ஆழமான சத்தியம் இது.
ஏழு ஜரா மரங்கள் - ஏழு சக்கரங்கள்
வாலி - அகங்காரம்
அம்பு - ஜீவன் முக்தி தீக்ஷை
படத்தில் உள்ளது போல், மனிதர்களின் ஏழு உடல்களும் சம்ஸ்காரங்களால் நிரம்பியிருக்கிறது.
அதிலும் முக்கியமாக ஏழு சக்கரங்களில்தான் மனிதர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

ஏழு உடல்கள் குறுக்கு வெட்டுத் தோற்றம் Cross sectional view of 7 bodies
இந்த 7 சக்கரங்களிலும், 7 உடல்களிலும் இருக்கும் சம்ஸ்காரங்களை சத்குருவின் உதவியோடு மட்டும்தான் எளிதில் எரிக்க முடியும்.
ஏழு சக்கரங்களின் வேர்களும் நான்காவது சரீரமான சூட்சும சரீரத்தில்தான் ஆழ்ந்திருக்கிறது.
உங்களுடைய வாழ்விற்குத் தேவையான சத்தியங்களை, ஞானக் கருத்துக்களைச் ச த்குரு தருவதின் மூலமாக, உங்களின் ராமனுக்கு (ஜீவனுக்கு), சுக்ரீவனை (புத்தியை) அறிமுகம் செய்து வைக்கிறார்.
உங்களின் புத்தியை, அகங்காரத்தை சந்திக்கும் அளவிற்குத் தயார்செய்து விட்டு, உங்களின் ஜீவனுக்கு ஞான சத்குரு சுதந்திரம் தருவதுதான் ஜீவன் முக்தி தீக்ஷை.