KAILASA Library/ஜீவன் முக்தி/உங்களின் ராமாயணம்Sign in
ஜீவன் முக்தி

உங்களின் ராமாயணம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வால்மீகி என்ன நினைத்து இந்த ராமாயணத்தை எழுதினாரோ,

அதை அப்படியே உங்களுக்குச் சொல்கிறேன்.

அவர் உங்களை நினைத்துத்தான் இதை எழுதினார்.

"அப்படியா!" என்று நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் ஆச்சரியப்படாவிட்டாலும் அவர் எழுதியது, உங்கள் ஒவ்வொருவரின் ராமாயணத்தை மாற்றி எழுதுவதற்குத்தான். உங்களுக்கு ஞான பட்டாபிஷேகம் செய்வதற்குத்தான்.

ராமாயணத்தில் வரும் ஒரு இனிமையான பகுதி.

ராமபிரான் சொல்கிறார், "மறைந்திருந்து சண்டையிடுங்கள்."

இதைப்பற்றி நம்முடைய புராணங்களில் மிக அருமையாக, ஒருகதை மூலமாக விளக்கியிருக்கிறார்கள்.

வாலி வதம்.

அருமையான ஒரு கதை.

வாலி வதம்கூட சரியான வார்த்தையாக எனக்குப் படவில்லை. "வாலி மோட்சம்," என்றுதான் சொல்லலாம்.

வாலி மோட்சம் - அகங்காரத்தின் முடிவு

Vali moksha -The end ofThe ego

இது ஒரு அருமையான கதை.

வாலி மோட்சம் என்பது இராமபிரான் ஞானம் அடைந்த கதை. நாம் நினைப்பது போல் வாலி வேறு, சுக்ரீவன் வேறு, ராமன் வேறு அல்ல. இவர்கள் அனைவரும் உங்களுக்குள் இருக்கும் பாகங்கள். இந்தக் கதையை ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

சுக்ரீவன், "என்னுடைய மனைவியை வாலி கடத்திக்கொண்டு போய்விட்டான்," என்று இராமபிரானிடம் சரணடைகிறான்.

இராமபிரான் சுக்ரீவனிடம் சொல்கிறார் "வாலியும், நீயும் சண்டையிடுங்கள். அந்த நேரத்தில் மறைந்திருந்து வாலியை நான் அழித்து விடுகிறேன்."

காரணம் என்னவென்றால், வாலிக்கு ஒரு பெரிய சக்தி உண்டு. யார் அவனுக்கு எதிர் வந்து நின்றாலும், அவர்களுடைய பாதிசக்தி வாலிக்கு வந்துவிடும். அதனால்தான் "நான் மறைந்து இருந்து சண்டையிடுகிறேன், நீங்கள் இருவரும் ச ண்டையிடும் பொழுது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி அழித்து விடுகிறேன்," என்று சொல்கிறார்.

அருமையான கதை.

ஏழு ஜரா மரங்களைத் தாண்டி, ராமருடைய அம்பு சென்று, வாலியின் மீது பாய்ந்து வாலியைத் துளைத்து அழித்து விட்டதாம்.

இந்தக் கதை, ஒரு மிகப்பெரிய சத்தியத்தின் வெளிப்பாடு. ஆழ்ந்து கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கதை இது.

ராமன், 'ஜீவாத்மா.'

ராமனைச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்த அனுமன், 'ஞான சத்குரு.'

சுக்ரீவன், 'புத்தி.'

வாலி, 'அகங்காரம்.'

ஏழு ஜரா மரங்கள் என்பவை நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்கள்;

7 சக்கரங்கள்.