உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Your Shradha, intensity is your power
உள்முகமாகத் திரும்பிய உடனேயே, சத்தியம் தெரியத் துவங்கி விட்டது.
வெளி உலகத்தை விட, உள்நோக்கிய தெளிவு உணரத் துவங்கி விட்டது. புரியத் துவங்கி விட்டது. உடனே நான் என்ன செய்தேன்...
"நீங்கள் சாப்பிடுகிற வரைக்கும் நானும் சாப்பிடப்போவதில்லை," என்று முடிவு செய்தேன். வீட்டுக்கு வெளியில் ஓரமாக, பின்பக்கமாக ஒரு சிறிய கொட்டகை மாதிரி அப்போதே அமைத்து வைத்திருந்தேன்.
நான் கட்டிய முதல் ஆசிரமம் அதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த வயதிலேயே நானே அமைத்துக் கொண்ட ஒரு சிறிய குடிசை மாதிரி இருக்கும். அதில்தான் பூஜை விக்கிரகங்கள் எல்லாம் வைத்து இருப்பேன்.
அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு. "நீங்கள் சாப்பிடுகிற வரைக்கும் நானும் சாப்பிடபோவதில்லை," என்று முடிவெடுத்தேன்.
வீட்டிலிருப்பவர்கள் எனக்குச் சரியாகச் சாப்பாடு கொடுத்து விடுவார்கள்.
அந்தச் சாப்பாடு கிடைத்ததும் பிள்ளையார் தட்டில் இருந்த உணவை அவர் சாப்பிட்டாரா என்று அவர் தட்டையே பார்த்துக்கொண்டே இருப்பேன்.
ஆனால், என் சாப்பாட்டைத் தொட மாட்டேன். ஒரு தட்டுச் சாப்பாட்டை விநாயகர் முன்பாக வைத்துவிட்டு, எனக்குக் கொடுத்ததைக் குப்பையிலோ, மூலையிலோ ஒரு ஓரமாகக் கொட்டிவிட்டு, அப்படியே உட்கார்ந்திருப்பேன். இப்படியே இரண்டரை நாட்கள் கழிந்தது. உணவில்லாமல் அவரோடு அங்கேயே இருந்தேன்.
பிள்ளையார் சாப்பிட்டபாடு இல்லை.
நானும் சாப்பிடவில்லை. இரண்டரை நாள் அப்படியே... சாப்பிடாமல் இருந்தேன்.
அப்போதே வைராக்கியம் ஜாஸ்தி. திடம் ஜாஸ்தி, Intensity!
இரண்டரை நாட்கள் கழிந்தது. மூன்றாவது நாள் அங்கே சென்று, அந்த இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்து உறுதியான குரலில் பேசி க்கொண்டிருந்தேன்.
உள்ளுக்குள்ளே பசி...
அடிவயிறு கலக்குகிறது.
ஆனாலும், வைராக்கியம் ஜாஸ்தி.
"எத்தனை நாளானாலும் சரி, விடுவதில்லை. நீங்கள்
> நீங்கள்
> சாப்பிடுகிற
> வரைக்கும் நானும்
> சாப்பிட
> போவதில்லை.
சாப்பிடும்வரை நானும் சாப்பிடமாட்டேன்," என்று திடமாக இருந்தேன்.
மனம் திடமாக இருந்தாலும் உடல் தாங்கவேண்டும் இல்லையா? உடல் தாங்கவில்லை. மனத்திலும் துக்கம் பொங்கி வருவதனால் எழுந்த அழுகை வேறு. இரண்டரை நாட்கள் ஆகியும் விநாயகர் சாப்பிடவில்லை.
"ஏன், என் பிள்ளையார் மட்டும் சாப்பிடவில்லை?" என்ற ஏக்கம் பொங்கியது.
> ஒருவருக்கு
> அனுபவம் நடந்து
> இருக்குமானால், அது
> நமக்குள்ளும் நடக்க
> முடியும் என்கிற அழுத்தம்,
> என்கிற ஆழமான ஏக்கம்.
ஆப்தப் பிரமாணம் அதாவது, நம்பியாண்டார் நம்பிக்குள் நடந்த அந்த அனுபவம் எனக்குள்ளும் நடக்க வேண்டும். என்னுள் ஆத்மப் பிரமாணமாக மாறியே தீர வேண்டும் என்கிற சிரத்தை தீவிரமானது..
ஒருவருக்கு அனுபவம் நடந்து இருக்குமானால், அது நமக்குள்ளும் நடக்க முடியும் என்கிற அழுத்தம், என்கிற ஆழமான ஏக்கம் தீவிரமானது.
பொங்கி வருகிற துக்கத்தால் அழுதேன்.
ஒருபக்கம் பசி.
இன்னொரு பக்கம் அழுததினால் ஏற்பட்ட மயக்கம்.
அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே என்னையுமறியாமல், அந்த இடத்திலேயே சாய்ந்துவிட்டேன்.
சாய்ந்து கிடந்தேன்...,
திடீரென்று ஒரு ஆனந்தமான, சுகந்தமான உணர்வு எழ மெல்ல கண்களைத் திறந்தேன்...
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். சிலருடைய பகுத்தறிவுக்கு எட்டலாம், சிலரது பகுத்தறிவுக்கு எட்டாது. உங்களின் பகுத்தறிவுக்கு எட்டினாலும் சரி, எட்டவில்லை என்றாலும் சரி, ஒரு விஷயம் உண்மை. சத்தியமாக நான் சொல்வது உண்மை. உண்மையை தவிர வேறொன்றுமில்லை. உண்மையிலேயே உணவு மறைந்திருந்தது. உணவு அங்கு இல்லை.
சிலபேர் மனதுக்கு விநாயகர் சாப்பிட்டிருப்பார் என்று தோன்றலாம். சில பேர் மனதுக்கு, இல்லை, எலி சாப்பிட்டிருக்கும் என்று தோன்றலாம்.
'விநாயகர்தான் சாப்பிட்டாரா,
எலிதான் சாப்பிட்டதா?' என்பதை ஆராயவோ அல்லது 'விநாயகர்தான் சாப்பிட்டார் என்பதை நிரூபிக்கவோ நான் விரும்பவில்லை.
"விநாயகர் சாப்பிட்டாரா அல்லது விநாயகருடைய வாகனமான எலி சாப்பிட்டு விட்டதா?" என்று தெரியாது.
ஆனால், ஒரு விஷயம் உண்மை. அந்த நிகழ்ச்சியினாலே எனக்குள்ளே மிகப்பெரிய ஸ்திரத்தன்மையும், சிரத்தையும், பக்தியும், ஆன்மீக வாழ்க்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், பிடிப்பும் உண்டானது. அது போதும்.
"அவர்தான் சாப்பிட்டாரா?, இல்லையா?" என்றுகூட நான் கவலைப்படவில்லை. அவர் சாப்பிட்டிருந்தால், எனக்கு என்ன பிரசாதம் கொடுப்பாரோ, அதைக் கொடுத்துவிட்டார். அதனால் நான் நிம்மதியாகிவிட்டேன்.
அவர் சாப்பிட்டிருந்தால், எனக்கு என்ன வரம் கொடுப்பாரோ, அது கொடுக்கப் பட்டுவிட்டதனால், அவர்தான் உண்டார் என்பது தெரிந்து நிம்மதியாகி விட்டேன். திருப்தியாகி விட்டேன்.
நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாருக்கு உணவு படைத்தபோது அவர் அதை ஏற்றுக்கொண்டு நம்பியாண்டார் நம்பிக்கு என்ன பிரசாதத்தைத் திருப்பிக் கொடுத்தாரோ, அந்தப் பிரசாதம் எனக்குள்ளேயும் அனுபவமாக நடந்துவிட்டது!
அதனால், "அவர்தான் சாப்பிட்டாரா அல்லது மயங்கி விழுந்த பின்னர் எலி சாப்பிட்டதா?" என்று நான் கவலைப்படவில்லை.
அதுபோல் கவலைப்படுவது, முட்டாள்தனமாக குழப்பிக் கொண்டிருப்பது எல்லாம் பட்டறிவு, பகுத்தறிவுவாதிக்குப் பிடித்தது. அது நமக்கு வேண்டாம். அவர்களிடமே விட்டுவிடலாம். நம் வேலையை மட்டும் நாம் செய்வோம்.
நம் வேலை என்னவென்றால், நம்பியாண்டார் நம்பி கொடுத்த உணவை கணபதி உண்டதால் நம்பியாண்டார் நம்பிக்குள் என்ன மாற்றம் நடந்ததோ அதுதான் எனக்குள்ளும் நடந்தது.
அவருக்குள் மிகப்பெரிய பக்தியையும், சிரத்தையையும், ஆனந்தத்ததையும் மலர்த்தியது. அது எனக்குள்ளே அனுபவமாக மலர்ந்து விட்டது. முடிந்து போயிற்று.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு மிகப்பெரிய அனுபூதியை அளிக்கக்கூடிய கர்ப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.
அனுபவம் வரும்போதெல்லாம் விழிப்புணர்வுடன் பார்த்தீர்களானால், அது அனுபூதியை தந்துவிட்டுச் செல்லும். விழிப்புணர்வுடன் பார்ப்பதுதான் ஞானகர்ப்பத்தோடு கலத்தல். அப்போது அந்த நிகழ்ச்சி ஞானக் குழந்தையை அளித்துவிட்டு மறைந்து விடும்.
விழிப்புணர்வுடன்... உள்முகத் தன்மையான விழிப்புடன் பார்க்கவில்லை யென்றால், அனுபவம் அனுபூதி என்ற கர்ப்பத்தைத் தாங்கி வந்தாலும், அந்த அனுபவம் அனுபூதி அளிக்காமல், குறைப் பிரசவமாகி கலைந்து விடும்.
ஒவ்வொரு விநாடியும், பிரபஞ்ச சக்தி உங்களை நெருங்கும்பொழுது, அனுபூதி என்ற ஞானகர்ப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.
உள்முகமாக, தெளிவோடு நீங்கள் அந்த ஒவ்வொரு அனுபவத்தையும் தொடர்பு
கொள்ளும்பொழுது,
ஒவ்வொரு
அனுபவத்தோடு
கலக்கும்பொழுது,..உங்கள்
உள்முகத்தன்மையும், இந்த வாழ்க்கையும்
ஒன்று சேரும்பொழுது, உள்முகத்தன்மை எனும்
உயிர், வாழ்க்கை சுமந்து வருகிற அனுபூதி
என்ற கர்ப்பத்துடன் சென்று கலக்குமானால்
ஞானம் என்ற குழந்தை பிறக்கும்.
அந்த உயிர் என்கிற சக்தி, அனுபூதி என்ற கர்ப்பத்திற்குள் சென்று கலக்கவில்லை என்றால், தாமாகவே அந்தக் கர்ப்பம், குறைப் பிரசவத்தினால் கலைந்து போகும்.
> உங்கள் வாழ்க்கையில்
> நடக்கிற ஒவ்வொரு
> நிகழ்ச்சியும் ஒரு
> மிகப்பெரிய அனுபூதியை
> அளிக்கக்கூடிய கர்ப்பத்தைச்
> சுமந்துகொண்டுதான்
> உங்களை நோக்கி வருகிறது.
ஒவ்வொரு விநாடியும், உங்களை நோக்கி வருகிற சுவாசக் காற்றும்கூட உங்களுக்கு ஞானத்தை அளிக்கக்கூடிய தன்மையோடு, பக்குவத்தோடுதான் உங்களை நோக்கி வருகிறது. முழுபக்தியோடு வாழ்வை வரவேற்றுக் கொண்டாடுங்கள், ஜீவன் முக்த காற்று, தன்னுடைய ஞான அனுபூதியை உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும் ராச லீலையின் இசையாக வெளிப்படுத்தும்.