KAILASA Library/ஜீவன் முக்தி/நேரடியாகக் கடவுளோடு பேசலாம்Sign in
ஜீவன் முக்தி

நேரடியாகக் கடவுளோடு பேசலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

You can talk to God directly

ஒருநாள், கோவிலில் சமயப்பிரசங்கம் நடந்தது. திருவண்ணாமலை கோவிலில் தொடர்ந்து விழா நடந்துகொண்டே இருக்கும்.

அந்தச் சமயப் பிரசங்கத்துக்குப் போயிருந்தேன். அப்போது பிரசங்கம் செய்த சொற்பொழிவாளர், நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு பெரிய ஞானியின் கதையைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நம்பியாண்டார் நம்பியும் அவரது தந்தையாரும்

நம்பியாண்டார் நம்பி ஒரு பெரிய பக்தர். வாழ்க்கையில் ஒரு பகுதியை விளக்கிக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் ஒரு கோவிலிலே பூஜாச்சாரியாக, சிவாச்சாரியாராக இருந்தார். தினந்தோறும் விநாயகருக்குப் பூஜை செய்து, நைவேத்யம் படைப்பார்.

அவருக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் போனது. பூஜையைச் செய்வதற்கும், நைவேத்யம் படைக்கச் செல்வதற்கும் மாற்று வழியின்றித் தவித்தார்.

அப்போது அவர் வீட்டிலேயே இருந்த தம் மகனிடம், "அப்பா! நீ இந்தப் பாத்திரத்தில் இருக்கும் நைவேத்யத்தை எடுத்துச் சென்று பூஜை செய்து விட்டு வா," என்று சொல்லி அனுப்புகிறார்.

மகன் சிறு பிள்ளை. பத்து வயது பாலகன்.
பூஜைக்காக அப்பா கொடுத்தனுப்பிய ஒரு
முடியிட்ட நைவேத்யத்தை எடுத்துக்கொண்டு
போகிறார்.

விநாயகருக்குப் பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார்.

பூஜை செய்தார். அபிஷேகம் செய்தார், அலங்காரம் செய்தார். இந்த நைவேத்யத்தை வைத்து விட்டு, "அப்பா சாப்பிடு," என்று சொல்லி விட்டு அருகிலேயே நின்று கொண்டார்.

விநாயகர் சாப்பிடாமல் சும்மாவே இருந்தார். இவருக்குச் சந்தேகம், "இவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிடவே இல்லையே!," என்று விநாயகரையே உற்றுப் பார்க்கிறார். ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம் ஆயிற்று, பிள்ளையார் சாப்பிடவேயில்லை.

"நான் உள்ளேயே நின்றுகொண்டு இருக்கிறேன் என்று சாப்பிடமாட்டேன் என்கிறாயா? நான் வெளியில் சென்று விடுகிறேன். யாரும் நீ சாப்பிடுவதை பார்க்கமுடியாதபடி திரைச்சீலையால் மூடி விட்டு உட்கார்ந்து கொள்கிறேன்," என்று சொல்லி வெளியில் வந்து உட்கார்ந்து விடுகிறார்.

மேலும் இரண்டு மணி நேரம் கழித்து திரைச் சீலையை நகர்த்திப் பார்த்தாலும் சாப்பாடு அப்படியே இருந்தது. நம்பி யாண்டார் நம்பிக்கு வேக வேகமாக நெஞ்சு படபடrandom ஆரம்பித்தது.

விநாயகரைப் பார்த்துக் கேட்கிறார், "அப்பா, நான் வகுப்புக்குப் போக வேண்டும். தாமதமாகிறது. சீக்கிரமாகச் சாப்பிடு," என்று வேண்டுகோள் வைத்தார்.

''ம் ஹூம்...'' அப்போதும் அவர் சாப்பிடவில்லை. இவருக்குப் பயம் வந்துவிட்டது. 'ஏதோ தவறு செய்துவிட்டேன். அதனால்தான் விநாயகர் கோபித்துக்கொண்டு, சாப்பிட மாட்டேன்கிறார்' என்று நினைத்தார்.

சின்ன பிள்ளைகளுக்குக் கோபம் வந்தால், அவர்களால் அந்தக் கோபத்தை சாப்பாட்டில் மட்டும்தான் காட்டத் தெரியும். வயதான பின் இதுபோல் கோபத்தைக் காட்டினால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

"அப்படியா? சாப்பிடவில்லை என்றால் போ! நல்லதாயிற்று, மிச்சம்,'' என்று விட்டுவிடுவார்கள்! பெரியவர்கள் தங்கள் கோபத்தை உணவில் காண்பிப்பதில்லை.

ஆனால், சின்னப் பிள்ளைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களுக்கு வாழ்க்கையே உணவுதான். அதனால்தான் ஆனந்தமாக இருந்தால் நிறையச் சாப்பிடுவார்கள். ஆனந்தமாக இல்லை என்றால் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். அவ்வளவுதான். அதனால் அதே மனஅமைப்போடுதான் அவர் விநாயகரையும் பார்க்கிறார்.

A young boy crying inside the shrine

விநாயகரைப் பார்த்து, ஒரு வேளை நாம்
ஏதாவது தப்புச் செய்து விட்டோமோ, அதுதான்
சாப்பிடவில்லையோ என்று 'ஓ!' என்று அழ
ஆரம்பித்து விட்டார்.

அப்போதும் சாப்பிடவில்லை.

உடனே இவர் சொல்கிறார், "அப்பா என்னைச்
சும்மா விடமாட்டார்,'' என பயத்தோடு
சொன்னார்.

அந்தப் பையனுக்குத் தெரியாது, தினந்தோறும் அப்பா விநாயகருக்கு உணவைக் காண்பித்துவிட்டு, அதே வாளியை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் சாப்பாடாகப் போடுகிறார் என்று. "நீ சாப்பிடாமல் போனால், நான் வீட்டுக்குச் சென்றால், அப்பா என்னை விடமாட்டார்,'' என்று 'ஓ' என்று தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தார்.

விநாயகர் அப்போதும் சாப்பிடவில்லை.

உடனே அவர் சொல்கிறார், "நான் என்னவோ தப்புச் செய்துவிட்டேன். அதனால்தான் நீ சாப்பிடவில்லை. ஆனால் அந்தத் தப்புக்குப் பரிகாரம் தேடி, நீ சாப்பிடும்வரை உன்னை விடுவதில்லை. நீ சாப்பிடவில்லை என்றால் இங்கேயே, இந்தப் படியிலேயே தவம் கிடந்து, நானும் பட்டினி கிடந்து சாவேன்,'' என்று அங்கேயே உட்கார்ந்து விடுகிறார்.

அவ்வளவு உறுதியாகச் சொன்ன பின்னும் பிள்ளையார் சாப்பிடவில்லை.

முதல் black mail ஆரம்பித்து விட்டது!

அடுத்த செயல் என்ன? தற்கொலை மிரட்டல்தான். Suicidal Threat!

"தற்கொலை செய்து கொள்வேன்" என்று சொல்லி பிள்ளையாரை மிரட்டுகிறார். முதலில் உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். நடக்கவில்லை. அடுத்து, நம்பியாண்டார் நம்பி சத்யாகிரகம் செய்து பார்த்தார், நடக்கவில்லை. அதற்குப் பிறகு தற்கொலை மிரட்டல் விடுகிறார்.

தலையைக் கருங்கல் படியிலே இடித்துக்கொண்டு, "இப்பொழுதே இங்கேயே சாவேன்," என்று சொல்லித் தற்கொலை மிரட்டல் விடுகிறார். தற்கொலையைத் துவங்கிவிடுகிறார். தலையை இடித்துக் கொள்கிறார்.

Nambi Andar Nambi banging head

இடிக்க ஆரம்பித்த உடனே விநாயகர் தோன்றி, "அப்பா! வேண்டாம், வேண்டாம், விட்டுவிடு, விட்டுவிடு. சாப்பிட்டு விடுகிறேன்," என்று உணவை சாப்பிட்டு விடுகிறார். நம்பியாண்டார் நம்பிக்கு மாளாத ஆனந்தம்.

அந்த ஆனந்தத்துடன், காலியான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். வந்தால் அப்பாவோ, "எங்கே அப்பா சாப்பாடு? ஏன் இவ்வளவு தாமதம்?" என்று

Boy standing

கேட்கிறார். "மீதம் ஒன்றும் இல்லை. விநாயகர் சாப்பிட்டுவிட்டார். அவர் சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தாமதமாயிற்று. அதனால்தான் தாமதமாக வந்தேன்," என்று சொல்கிறார்.

அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய்,
திருட்டுத்தனமாக எங்காவது சாப்பிட்டு
விட்டு வந்து, பொய் சொல்கிறாயா? இல்லை,
விநாயகர்தான் சாப்பிட்டாரா?." என்று
உண்மையை விளக்கச் சொல்லிக் கேட்டார்.

சிறிது இடைவெளிக்குப் பின் அப்பா திரும்பக் கேட்கிறார், "ஒழுங்காக, உண்மையாகச் சொல்."

மகன் சொல்கிறார், "உன் மீது சத்தியம். என்
மீது சத்தியம். விநாயகர் மேல் சத்தியம்.
அவர்தான் சாப்பிட்டார்," என்று கபடமின்றி
சத்தியம் செய்கிறார். இப்படிச் சொன்னவுடனே
அப்பாவுக்குப் புரிந்துவிடுகிறது.

கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் ஓட, தம்மை மறந்து மகன் என்றும் நினைக்காமல், மகனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.

"நானெல்லாம் நூலகத்தைப் பாதுகாப்பாய்க் கண்காணித்து வைக்கும் ஒரு காப்பாளன் போன்றவன். வருடக்கணக்காக இந்த மந்திரத்தை வைத்திருந்தேன். நீ வாழ்க்கையில் அதை அனுபவமாகப் பார்த்து விட்டாய்," என்று காலில் விழுந்து கதறி அழுதார்.

> விநாயகரைப் பார்த்து
> கேட்கிறார்,
> "அப்பா, நான் வகுப்புக்குப்
> போக வேண்டும்.
> தாமதமாகிறது. சீக்கிரமாகச்
> சாப்பிடு," என்று
> வேண்டுகோள் வைத்தார்.

நம்பியாண்டார் நம்பிக்குப் பிறகுதான் புரிந்தது, "நாம் கொடுத்துத்தான் விநாயகர் சாப்பிட்டிருக்கிறார். இதுவரை அப்பா கொடுத்ததை விநாயகர் சாப்பிட்டதில்லை," என்று.

முயற்சி செய்யும் மனப்பழக்கம் ஒரு மிகப்பெரும் கொடுப்பினை

Effort itself, a gift

இந்தக் கதையை சத்சங்கத்தில் கேட்ட உடனே எனக்குள் ஒரே உற்சாகம், ஒரே வேகம். "ஆஹா! இன்றைக்கு நம்முடைய விநாயகரும் சாப்பிட்டாக வேண்டும்." என்று உடனே வேக வேகமாக வீட்டுக்கு வந்தேன்.

சாப்பாட்டை எடுத்து வைத்தேன். பிள்ளையாரிடம் ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிப் பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை

விநாயகர் அப்படியே உட்கார்ந்திருக்கிறார். சாப்பாடும் அப்படியே இருந்தது.

வீட்டில் எந்தச் சூழ்நிலையில் நாம் வளருகிறோமோ, அதுதானே நம்மிடமிருந்தும் வரும். அப்போது வீட்டில் ஒரு வயதான பாட்டி இருந்தார். இருக்கும் வீட்டில், சிறுவயது பிள்ளைகள் எப்பொழுதாவது அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் யாராவது சாப்பிடவில்லை என்றால், உடனே பாட்டி "உன்னைக் கிணற்றில் போட்டுவிடுவேன், கிணற்றில் போட்டுவிடுவேன்," என்று அவர்களைப் பயமுறுத்துவார்.

வீட்டில் நிறைய சின்ன பிள்ளைகள் இருப்போம். இந்தப் பாட்டி, நாங்கள் யாராவது சாப்பிடவில்லை என்றால், "ஏய்!, சரியாகச் சாப்பிடாமல் அடம்பிடித்தால் உன்னை

Statue of Ganesha

கிணற்றில் போட்டுவிடுவேன்,'' என்று பயமுறுத்துவார்.

இதைப் பார்த்தால் அதே மன அமைப்புதானே நமக்கும் வரும்.

நானும் உடனே என்ன செய்தேன், "விநாயகரே! இப்போது நீ சாப்பிடவில்லை என்றால், உன்னை எடுத்து கிணற்றில் போட்டுவிடுவேன்,'' என்று மிரட்டினேன். அப்போதும் அவர் அசையவில்லை.

"சரி, இனி போட்டுவிடுவது,'' என்றே முடிவு செய்தேன். முடிவு செய்து பிள்ளையாரை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகில் சென்றுவிட்டேன்.

அதற்குப்பின் என்ன செய்தேன், "ஒருவேளை, திடீரென்று விநாயகர் சாப்பிட ஆரம்பித்துவிட்டார் என்றால் என்ன செய்வது? அதனால் முதலில் மிரட்டிப் பார்க்கலாம் என்று முடிவுசெய்தேன்.

ஒருவேளை, அவர் நினைத்துக் கொண்டிருப்பார், "நான் கிணற்றில் நிச்சயம் போட்டுவிட மாட்டேன்,'' என்று.

"போட்டுவிடவும் வேண்டாம்.போட மாட்டேன் என்று காட்டிக்கொள்ளவும் வேண்டாம். மிரட்டிப் பார்க்கலாம்,'' என்று தண்ணீர் சேந்துகிற தோண்டியில்... பிள்ளையாரை வைத்துவிட்டேன்.

கிராமங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பாத்திரத்தில் கயிறு கட்டி தண்ணீர் சேந்துவார்கள், ராட்டினம் போட்டு அந்தத் தோண்டியில் விநாயகரை வைத்து, தண்ணீர் மட்டம்வரை விட்டுவிட்டு, "இப்போது சாப்பிட்டுவிடு. இப்போது சாப்பிட்டுவிட்டால்கூட உன்னை வெளியில் எடுத்துவிடுகிறேன். ஆனால், நீ இப்போதும் சாப்பிடாமல் இருந்தால் தண்ணீருக்குள் போட்டு விடுவேன்,'' என்று மிரட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் திடீரென்று நினைவுக்கு வந்தது, "அடடா!, தோண்டியில் விநாயகரை மட்டும்தானே வைத்தேன். சாப்பாடு இங்கே இருக்கிறதே! எப்படியடா சாப்பிடுவார்,'' என்று அந்தத் தோண்டியை வெளியில் எடுத்து, அந்தச் சாப்பாட்டையும் தோண்டிக்குள்ளேயே வைத்து, அந்தத் தண்ணீர் மட்டத்திலேயே வைத்து வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தேன்.

அந்தத் தண்ணீரில் அப்படியே, தண்ணீரைத்
தொடுவது, அப்படியே மேலே எடுத்துவிடுவது,
தண்ணீரைத் தொடுவது, மேலே எடுத்துவிடுவது

> "விநாயகரே! இப்போது
> நீ சாப்பிடவில்லை என்றால்,
> உன்னை எடுத்துக் கிணற்றில்
> போட்டுவிடுவேன்,'' என்று
> மிரட்டினேன். அப்போதும்
> அவர் அசையவில்லை.

என்று ஒரு அரைமணி நேரம் அப்படியே செய்து கொண்டிருந்தேன்.

ஒருவேளை சாப்பிட்டிருப்பாரோ என்று தோண்டியை மேலிழுத்துப் பார்த்தால் சாப்பிடவில்லை. சாப்பாடு அப்படியே இருந்தது.

கடைசியில் மனம் கேட்கவில்லை. கிணற்றுக்குள் போடவும் மனம் வரவில்லை. "சரி, இன்று உன்னை அப்படியே விட்டு விடுகிறேன். நாளை பார்த்துக் கொள்கிறேன்." என்று சொன்னேன்.

தினந்தோறும் கோயிலில்
எடுத்துச் சென்று
வைக்கப்படும் சாப்பாட்டை
அந்தத் தெய்வம் சாப்பிட்டு
விடுகிறது என்றுதான்
நினைத்துக்கொண்டு
இருந்தேன்.

ஏனென்றால் எனக்குப் பசி எடுக்கிறது என்று பூஜை அறைக்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டு, நான் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டு நாள் கழித்துத் இதேபோன்று தோண்டியில் எடுத்துவைத்து இன்னொருமுறை மிரட்டிப் பார்த்தேன். அப்போதும் சாப்பிடவில்லை.

மூன்றாவது முறை என்ன செய்தேன், நம் வீட்டில் சமைக்கிற சாப்பாடு சரியாக இல்லாததினால்தான் பிள்ளையார் சாப்பிடவில்லை, கோயிலில் இருந்து நைவேத்தியம் வாங்கிக்கொண்டு வரலாம் என்று கோவிலில் இருந்தே நைவேத்யம் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அண்ணாமலை கோயிலில் பிரமாதமாகப் பிரசாதம் செய்வார்கள், அதை பிள்ளையாருக்காக வாங்கிக்கொண்டு வந்தேன். கோயிலில் இதைத்தானே படைக்கிறார்கள்...

அதுநாள்வரை நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது, என்னுடைய இந்த எளிமைத்தனத்துடன் பார்ப்பதாலும், சிறுபிள்ளை என்பதினாலும், தினந்தோறும் கோயிலில் எடுத்துச் சென்று வைக்கப்படும் சாப்பாட்டை அந்தத் தெய்வம் சாப்பிட்டு விடுகிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

படைத்து எடுத்து வந்து விடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால், "கோவிலில் என்ன நைவேத்தியம் செய்து வைத்தால், அவர் சாப்பிடுகிறாரோ, அதே சாப்பாட்டை எடுத்து வந்து வைக்கலாம். அப்போது இங்கேயும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது இல்லையா?! உடனே நான், அதே சமையலைப் பிள்ளையாருக்குத் தரவேண்டும் என்பதற்காகக் கோயிலுக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கி வந்தேன்.

கோயிலுக்குச் செல்லும்போது எல்லாம், தரையைக் கழுவி விடுவது, பெருக்கி விடுவது இதுபோன்ற வேலைகளை எல்லாம் செய்வோம்.

உழவாரப் பணி செய்வோம். நாங்கள் இதற்கென்றே கோவிலுக்குப் போட்டிபோட்டுச் செல்வோம். கோவிலின் மடப்பள்ளியைப் பலமுறை பிள்ளைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சுத்தம் செய்வோம்.

பிள்ளைகளை ஒன்றுதிரட்டிச் சென்று சுத்தம் செய்து உதவுவோம். அதனால் நாங்கள் போனால், அங்கு மீதமிருக்கும் பிரசாதத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள். மிச்சம், மீதி இருந்ததென்றால் அப்படியே எங்களிடம் கொடுப்பார்கள்.

அந்தப் பணியாளர்களோடு ஏற்கெனவே பழக்கம் இருந்ததால் அவரிடம் சென்று, "எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்குச் சோறு வைக்க வேண்டும். கொடுங்கள்," என்று கேட்டேன். அவர் கைநிறைய கொடுத்து அனுப்பினார். ஒரு இரண்டு கை அள்ளி வைத்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

வேகவேகமாக எடுத்துக்கொண்டு வந்து, பிள்ளையாருக்கு முன் அதே பிரசாதத்தை வைத்து விட்டு, "இதோ பார், நீ சாப்பிடுகிற அதே சாப்பாடு, அதே டயட், இது வேறு ச மையல், இது சரியில்லை என்று இப்போது நீ சொல்ல முடியாது," என்று சொல்லிவிட்டு, அங்கேயே உட்கார்ந்துகொண்டே இருந்தேன்.

அன்றைக்கும் அவர் சாப்பிடவேயில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார். அன்றைக்கும் தோண்டியில் வைத்து தண்ணீரில் போட்டுப் போட்டுப் பார்த்தேன். அப்போதும் சாப்பிடவில்லை. வேறு ஒன்றும் செய்யத் தெரியாமல் எடுத்து மேலே வைத்து விட்டேன்.

அன்றைக்கு இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று யோசனை செய்யத் துவங்கினேன்.

"நான் கொடுக்கும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடவில்லையே. என்ன காரணம்?" என்று யோசிக்கத் துவங்கினேன்.

அன்று மிகவும் துக்கமாகி விட்டது. அது வரையிலுமாவது ஒரு காரணம் இருந்தது. வீட்டுச் சமையல் பிடிக்கவில்லை போல, அதனால்தான் சாப்பிடவில்லை என்று.

இப்போது அவர் கோயிலில் சாப்பிடுகிற அதே சாப்பாட்டை எடுத்துக்கொண்டுவந்து வைத்தும் சாப்பிடவில்லை என்றால்...? நம்மீதுதான் ஏதோ தப்பு இருக்கிறது என்று தாங்காத துக்கம் பொங்க ஆரம்பித்து விட்டது.

துக்கத்திற்கே பெரிய சக்தி உண்டு. உங்களை உள்முகமாகத் திருப்பி விடும் சக்தி துக்கத்துக்கு உண்டு.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். துக்கத்தை மட்டும் சபிக்கவே சபிக்காதீர்கள்.

பல நேரத்தில், உங்களை உள்முகமாகத் திருப்பி, ஆழமான மனிதராக மாற்றிவிடும். ஒரு பெரிய சக்தி துக்கத்திற்கு உண்டு.

பொங்கி வந்த அந்தத் துக்கம் 'பளிச்' என்று ஒரு தெளிவை ஏற்படுத்தியது. "ஆஹா! நம்பியாண்டார் நம்பி அவரை வருத்திக்கொண்டதனால் விநாயகர் சாப்பிட்டார்.

நாமோ விநாயகரை வருத்திக் கொண்டிருக்கிறோமேடா. அதனால்தான் சாப்பிடவில்லை," என்ற இந்தத் தெளிவு பிறந்தது. அந்தர் முகமாகத் திரும்பிய உடனே ஏற்படுகிற, அந்தத் தீக்ஷைக்குப் பின் விளக்கம் பிறந்தது.

நன்கு புரிந்துகொள்ளுங்கள், இது ஒரு ஆழமான
திருப்புமுனை என்று சொல்லலாம். என்னுடைய
வாழ்க்கையிலே ஏற்பட்ட பெரிய திருப்புமுனை.

இப்போது, இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகக்கூட உங்களுக்கு இருக்கலாம். அது ஒரு பெரிய நிகழ்ச்சியாக உங்களுக்குத் தோன்றாமலும் இருக்கலாம்.

பல நேரத்தில்,
உங்களை உள்முகமாகத்
திருப்பி, ஆழமான
மனிதராக மாற்றிவிடும்.
ஒரு பெரிய
சக்தி துக்கத்திற்கு
உண்டு.

ஆனால், அந்த வயது பையனுக்கு அது ஒரு பெரிய நிகழ்ச்சி. அந்த வயதில் எனக்கிருந்த அறிவுக்கு, எனக்கிருந்த அந்தத் தேடுதலுக்கு மிகப் பெரிய நிகழ்ச்சி.

ஏனென்றால், அந்த சிறுவயதில் யாரும் அவ்வளவு ஆழமாக யோசனை செய்யமாட்டார்கள்.

புரியவும் புரியாது. மிஞ்சிப் போனால் அப்போது எனக்கு ஏழு, எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அதற்குமே குறைவு. அவ்வளவுகூட கிடையாது. கோயிலில் போய் சிறு பிள்ளையாக விளையாடிக் கொண்டிருக்கிற பருவம்.

திடீரென்று, "ஆஹா! நம்பியாண்டார் நம்பி தம்மை வருத்திக் கொண்டார். அதனால் விநாயகர் சாப்பிட்டார். நாம் என்ன செய்கிறோமென்றால் விநாயகரை வருத்துகிறோ றாம். அவரை மிரட்டுகிறோம். அதுதான் தவறு," என்று 'பளிச்' என்று உள்ளுக்குள்ளே அந்தத் தெளிவு பிறந்தது.

உண்மை புரிந்த உடனே முடிவு செய்தேன், "ஆஹா, இதுதான் காரணம்," என்ற ச த்தியம் புரிந்தது.

அதாவது சத்தியம் புரிந்து விட்டால் அதைக் கடைப்பிடிப்பதற்கான சிரத்தை உள்ளே உருவாகிவிடும். அந்த நம்பியாண்டார் நம்பி கதையை ஏற்கெனவே கேட்டதனாலும், இந்த இரண்டு, மூன்று நாட்களும் தவறான மார்க்கத்திலே முயற்சி செய்ததனாலும்... அந்தத் தவறான மார்க்கத்தில் முயற்சி செய்ததற்கான கூலி, 'முயற்சி செய்வது' என்ற மனப் பழக்கம் வருவதே!

தவறான மார்க்கமாக இருந்தால் கூட கவலைப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். காரணம் என்னவென்றால், முயற்சி செய்கிற மனப்பழக்கம் வந்து விடும். அதுவே மிகப்பெரிய கொடுப்பினை.

ஏற்கெனவே இந்த முயற்சியைச் செய்ததாலும், நம்பியாண்டார் நம்பி கதை கேட்டதனாலும், சத்தியத்தை வாழுகிற சிரத்தை வந்துவிட்டது.

அது மட்டும் இருந்தது என்றால், மருந்து வைத்த பீரங்கி போன்று, சத்தியம் புரிந்த அந்த விநாடியே நெருப்பு வைத்து விட்டதும், வெடித்துவிடும். ச த்தியம் புரிவது நெருப்பு வைப்பது மாதிரி.

சிரத்தை இல்லாமல், இந்தச் சத்தியத்தை வாழுகிற சி ரத்தை இல்லாமல், நெருப்பே வைக்கப்பட்டாலும், தீக்ஷையே நடந்தாலும், அதனால் உபயோகம் இல்லை. அது காலி பீரங்கிக்குத் தீப்பந்தத்தை வைத்து, நெருப்பு வைப்பது போலாகும். அதனால் ஒன்றும் நடப்பதில்லை.

> முயற்சி செய்யுங்கள்.
> காரணம்
> என்னவென்றால்,
> முயற்சி செய்கிற
> மனப்பழக்கம் வந்து
> விடும். அதுவே
> மிகப்பெரிய
> கொடுப்பினை.

அதேபோன்று, சிரத்தை மட்டும் இருந்து, அந்தத் தீக்ஷை நடக்காமல், இருந்தாலும், மருந்து மட்டும் இருக்கும் பீரங்கி போன்றது. அதுவும் வெடிக்காது.

இந்தத் தீக்ஷை எனக்குள் ஏற்கெனவே மருந்து இடிக்கப்பட்ட மனம் தீப்பற்றிக் கொண்ட நெருப்புபோன்றாகிவிட்டது.

நம்பியாண்டார் நம்பி கதையினாலும், தினம்தோறும் செய்த பூஜையினாலும், தவறான முறையாக இருந்தாலும், முயற்சி செய்து அதை வாழவேண்டும் என்கிற சிரத்தை எனக்குள் எழுந்தது.

மிக அருமையாகத் திருவள்ளுவர் சொல்கிறார்,

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்,"

அந்த முயற்சியால். மருந்து இடிக்கப் பட்ட பீரங்கியைப் போலத்தயாராகி விட்டது. அந்தப் பீரங்கி தயாராகிவிட்டது. தீக்ஷை நடந்து விட்டது!