KAILASA Library/ஜீவன் முக்தி/பூஜை ஒரு ஞான விளையாட்டுSign in
ஜீவன் முக்தி

பூஜை ஒரு ஞான விளையாட்டு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Pooja is a mystical game

சின்ன வயதில்...

என்னுடைய விளையாட்டு, வாழ்க்கை எல்லாமே... தெய்வ விக்கிரகங்களோடு உறவாடுவதும், அவர்களுக்கு பூஜைகள் செய்வதும்தான்.

அதுதான் என்னுடைய விளையாட்டு. அதுதான் வாழ்க்கையுமாகி இருந்தது. இதுவரை தமிழ்நாட்டில் இருக்கிற, சிறு பிள்ளைகள் விளையாடுகிற கோலி அடித்தல், குண்டு அடித்தல், பம்பரம் விடுதல் போன்ற விளையாட்டுகளில் எல்லாம் சிறுவயது முதலே ஈடுபட்டது கிடையாது.

அப்போதிலிருந்து என் வாழ்க்கையில் அதற்கு பாகமே ஒதுக்கியது இல்லை.

அதனால் அதிகமாக விளையாட்டும் வாழ்க்கையில் நடந்தது இல்லை.

நான் விளையாடியது எல்லாம் இந்த விநாயகரை வைத்தும், முருகரை வைத்தும், சிவனை வைத்தும், தேவியை வைத்தும் செய்கிற பூஜைகள்தான். இதில் விளையாட்டு என்றால்

365 நாளும் ஆன்மீக திருவிழா நடக்கும் திருவண்ணாமலை நகரம்.

சடங்குகளும், தியானங்களும்தான்.
அதுதான் விளையாட்டு; அதுதான்
வாழ்க்கை.

சின்ன வயதில் பெற்றோர் எனக்கு ஒரு
பிள்ளையார் வாங்கிக் கொடுத்தார்கள்.
பிறந்த நாள் பரிசாக அப்பா வாங்கிக்
கொடுத்தார். அதுதான் என்னுடைய
முதல் விளையாட்டு விக்கிரகம்.

காலையிலிருந்து மாலைவரை
அந்தப் பிள்ளையாரை வைத்து
விளையாடுவதுதான், என்
வாழ்க்கையாக இருந்தது.

> நான் விளையாடியது எல்லாம்
> இந்த விநாயகரை வைத்தும்,
> முருகரை வைத்தும், சிவனை
> வைத்தும், தேவியை வைத்தும்
> செய்கிற பூஜைகள்தான்.
> இதில் விளையாட்டு
> என்றால் சடங்குகளும்,
> தியானங்களும்தான். அதுதான்
> விளையாட்டு; அதுதான்
> வாழ்க்கை.

அவர் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றி, சுத்த சந்தனம் அரைத்து பொட்டு வைத்து, சாப்பாடு வைத்து, நாம் இந்த

உடலுக்கு என்னென்ன செய்வோமோ, அத்தனையும் அந்த உடலுக்கும் செய்து பார்ப்பேன்.

இதில் முக்கியமான ஒன்று... அந்த விக்கிரகங்களை நான் வெறும் விக்கிரகங்களாகப் பார்ப்பதில்லை. உயிருள்ள சக்தியாகவே உணர்ந்தேன்.

பிள்ளையார் சிலை என்று சொல்ல மாட்டோம். பிள்ளையார் என்றுதான் சொல்வோம். முருகன் சிலை என்று சொல்வது இல்லை. முருகன் என்றுதான் சொல்வது. சிவலிங்கம் என்றால் சிவன் சிலை என்று சொல்வது இல்லை. சிவன் என்றுதான் சொல்வது. அவ்வாறு உணர்வு ரீதியாகப் பழகியதால் வாழ்க்கையின் பாகமாகவே மாறிவிட்டிருந்தது.