நம்மைக் கடவுளாக்கும் கடவுள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
யார் குரு? யார் கடவுள்? Who is a Guru? Who is God?
ஞான சக்திகள் இப்பூமியில் உலாவிய இடங்களே தீர்த்தஸ்தலங்கள் The places where enlightened beings wandered are what we call holy shrines today
பக்தி பலவீனம் அல்ல... பலமே...
பூஜை ஒரு ஞான விளையாட்டு Pooja is a spiritual game
நேரடியாகக் கடவுளோடு பேசலாம் You can talk to God directly
முயற்சி செய்யும் மனப்பழக்கம் ஒரு மிகப்பெரும் கொடுப்பினை The habit of putting consistent effort itself is a gift
உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான்... Your very commitment is your strength...
❖
நம்மைக் கடவுளாக்கும் கடவுள்
குரு சிவனா?
கடவுள் சிவனா?
யார் உயர்ந்தவர்?
சத்யம் 1
இருவருமே ஒருவர்தான்.
சத்யம் 2
இருவரில் ஒருவரைத்தான் உங்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்.
சத்யம் 3
உங்களுக்கு நேரடியாய் உதவும் வகையில் தம்மை மாற்றியமைத்துக் கொண்ட கடவுளே, உயர்ந்த குரு.
யார் குரு? யார் கடவுள்?
Who is Master? Who is God?
“கடவுளை நீங்கள் எப்படி குருவாக்கலாம்?” என்று நீங்களும் கேட்கலாம். ஒருவர் அப்படித்தான் என்னிடம் கேட்டார், “சிவன் கடவுளல்லவா? அவரைப் போய் குரு என்று சொல்கிறீர்களே?” என்று.
இதற்கு அழகான ஒரு நிகழ்ச்சியில் இருந்து விடை சொல்லலாம். விவேகானந்தர் ராமகிருஷ்ணர் பற்றிச் சொல்லி கொண்டிருந்தபோது, “அவர் அவதார புருஷர், மிகப் பெரிய ஞானசக்தி,” என்கிறார்.
அப்போது ஒரு சீடர், “ராமகிருஷ்ணரை குரு என்று சொல்லுங்கள். ஒப்புக்கொள்கிறோம். ஆனால், கடவுள் என்று ஏன் சொல்கிறீர்கள்? மிகவும் அதிகமாகத் தெரிகிறதே,” என்கிறார்.
விவேகானந்தர் மிக அழகாக, “கடவுள் என்றால், உனக்கு என்ன புரியும்?” என்று கேட்கிறார். சிறிது நேரம் கழித்து விவேகானந்தர் அந்தச் சீடருக்கு, ‘கடவுள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிற எல்லாமே, சில கருத்துகளின் தொகுப்புதான்’ என்று புரிய வைத்தார்.
விவேகானந்தர், "நீ கடவுள் என்றால், என்னென்ன அதிக பட்சமாகக் கற்பனை செய்ய முடியுமோ, அதை எல்லாம் தாண்டிய சத்தியத்தை வெளிப்படுத்தியவர் ராமகிருஷ்ணர்.
அதனால் கடவுள் என்று அவரை நான் சொன்னேன் என்றால், அது முழுமையான சத்தியம் மட்டும் அல்ல, நீ புரிந்துகொண்டதை விட, ஆழமான சத்தியம் அதில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்," என்றார்.
மனிதனை
கடவுளாக்க,
கடவுள்
மனிதனாவதுதான்
அவதார பிறப்பு.
ஏன் இதைச் சொல்லுகிறோம் என்றால், நாம் எல்லோரும் நினைக்கிறோம், 'கடவுள் என்பது குரு என்பதைத் தாண்டிய ஒரு நிலை' என்று.
ஆழமாகப் பார்த்தீர்களானால் சத்தியம் என்பது இதுதான். உங்களைக் கடவுளாக்கும்வரை கடவுளுக்கு ஓய்வில்லை.
இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கிற ஐந்து காரியங்களை 'பஞ்ச கிருத்தியங்கள்' என்று சொல்வோம்.
உருவாக்குதல்,
காப்பாற்றுதல்,
அழித்தல்,
மாயையிலே இட்டு மறைத்தல்,
வெளியில் எடுத்து ஞானம் அருளல்.
இதுதான் கடவுள் செய்யும் ஐந்து காரியங்கள்.
நடராஜருடைய உருவத்தைப் பார்த்தீர்கள் என்றால், இந்த ஐந்து பெருங்காரியங்களைச் செய்வார்.
கையில் உள்ள உடுக்கையின் மூலமாக ஒலியை உருவாக்குதல்;
இடது கையில் இருக்கும் நெருப்பின் மூலமாக அழித்தல்;
வலது அபயகரத்தின் மூலமாகக் காத்தல்;
முயலகன் என்ற அரக்கனை அழித்து அவன் மீது ஆடுகிற பாதத்தின் மூலமாக மறைத்தல்;
தூக்கிக் காட்டிய திருப்பாதத்தின் மூலமாக, இதைப் பற்றிக் கொள். 'ஞானம்' கிடைக்கும் என்று அருளல்.
இந்த ஐந்து செயல்களையும், பஞ்ச கிருத்தியங்களையும் நடத்தியவாறே, அவர் செய்கிற தாண்டவம்தான் ஆனந்தத் தாண்டவம்.
இந்த ஐந்தையும் செய்துகொண்டே ஆடுகிற ஆனந்தக்கூத்து, "ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே, வந்த காரியத்தில் கண்ணாயிரு தாண்டவக்கோனே,” என்று, இடைக்காடர் புகழுகிற ஆரியக் கூத்தை ஆடினாலும், இந்தக் காரியத்திலே கண்ணாயிருப்பார்.
இந்த ஐந்து காரியத்தையும் நடத்திக் கொண்டே, ஆரியக் கூத்தை ஆடுபவர் அவர். இந்த ஐந்து காரியத்தையும் நடத்துகிற சக்தியைத்தான், பிரபஞ்ச சக்தி என்று சொல்கிறோம்.
முதல் நான்கு காரியத்தை நடத்துவதற்கு அவர் ஆன்ம சரீரம், நிர்வாண
சரீரம், சூட்சும சரீரம் என்கிற உயர் நிலை சரீரங்களில் இருந்துகொண்டே நடத்தி விடமுடியும்.
இதை இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ள, ஏழு சரீரங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்.
• முதலாவது ஸ்தூல சரீரம்: எலும்பாலும், சதையாலும் ஆனது, ஸ்தூல சரீரம்.
• இரண்டாவது பிராண சரீரம்: நமக்குள்ளே ஓடுகிற சுவாச ஓட்டம்.
• மூன்றாவது மன சரீரம்: நமக்குள்ளே ஓடுகிற எண்ண ஓட்டம்.
• நான்காவது சூட்சும சரீரம்: நமக்குள்ளே ஓடுகிற உணர்ச்சி ஓட்டம்.
• ஐந்தாவது காரண சரீரம்: நாம் ஆழ்ந்த தூக்கத்திலே அனுபவிக்கிற நிலை.
• ஆறாவது ஆன்ம சரீரம்: நமக்குள்ளே ஆழ்ந்த அமைதி ஏற்படும்போது, வருகிற நிலை.
• ஏழாவது நிர்வாண சரீரம்: ஞானம் அடைகிறபோது, உணருகிற பிரபஞ்ச மய மாக மாறிய நிலை.
பிரபஞ்ச சக்தி, முதல் நான்கு வேலைகளான உருவாக்குதல், ஆக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல் இவற்றைச் செய்வதற்கு நிர்வாண சரீர நிலையில் இருந்தே செய்து விட முடியும்.
ஆனால், ஐந்தாவது வேலையாகிய, ஞானம் அருளல் என்ற பணியைச் செய்ய வேண்டுமானால், ‘மனித உடல்’ தரித்தே ஆக வேண்டும்.
உருவாக்குதல்,
காப்பாற்றுதல்,
அழித்தல், மாயையிலே
இட்டு மறைத்தல்,
வெளியில் எடுத்து
ஞானம் அருளல்.
இதுதான் கடவுள் செய்யும்
ஐந்து காரியங்கள்.
காரணம் என்னவெனில், முதல் நான்கு வேலையையும் செய்வதற்கு அதாவது பிரபஞ்ச சக்திக்கு, உங்களை உருவாக்குவதற்கும், காப்பாற்றுவதற்கும், அழிப்பதற்கும், மாயையில் போடுவதற்கும், உங்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை.
உங்களைக் கேட்டு உங்களுடைய ஆக்குதல் நடத்தப்படவில்லை.
ஒரு வேளை உங்களிடம் விண்ணப்பப் படிவம் கொடுத்து, "நீங்கள் எங்கே பிறக்க வேண்டும்? என்ன? எது?" என்று டிக் செய்து கொடுக்கச் சொன்னால், நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்கிற விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்குள் என்ன ஆகும்? கடவுளுக்கே ஆயுள் முடிந்துவிடும்.
ஆக்குதல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.
காப்பாற்றுதல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.
அழித்தல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.
மறைத்தலும், மாயையில் இடப்படுவதும் உங்களுடைய ஒத்துழைப்போடு நடத்தப்படவில்லை.
இவற்றுக்கெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை. ஆனால் ஞானம் அடைவதற்கு, ஞானத்திலே மலர்வதற்கு, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்
மனிதனுடைய ஒத்துழைப்பு, ஒப்புதல் தேவை என்பதனால், மனிதர்களுக்கு உணர்த்துவதற்காக, மனிதர்களுக்குப் புரிகிற மொழியிலே பேசுவதற்காக, மனித உடலாக அந்தப் பிரபஞ்ச சக்தி அவதரிக்கிறது.
மனித உடலில்தான் அந்தப் பிரபஞ்ச சக்தி இறங்கி வருகிறது.
மனித உடலில்தான், அந்தப் பிரபஞ்ச சக்தி தம்மை வெளிப்படுத்துகிறது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது,
பிரபஞ்ச சக்தி முதல் நான்கு வேலைகளையும் செய்யும்பொழுது, கடவுள் என்ற தன்மையில், நிர்வாண சரீரத்தில் இருந்து செய்துவிடுகிறது.
இந்தப் பிரபஞ்ச சக்தி, ஐந்தாவது வேலையைச் செய்வதற்கு மனிதன் என்ற நிலையிலே குருவாக இறங்கி வரும் பொழுது, நிர்வாண சரீரம் என்ற ஒரு ச ரீரம் மாத்திரம் இல்லாமல், ஏழு சரீரத்தையும் எடுத்து வருவதனாலே, குரு என்று இறங்கி வந்த பிரபஞ்ச சக்திதான், கடவுள் என்கிற இறங்கி வராத பிரபஞ்ச சக்தியைவிட மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது... என்பதை நாம் ஆழமாய் உணர வேண்டும்.
நிர்வாண சரீரம் என்ற ஒரே ஒரு நிலையில் இருந்துகொண்டு நான்கு காரியங்களையும் நிகழ்த்துகிற சக்தி, ஞானம் அருளுவதற்காக குருவாக இறங்கி வருகிறது, உண்மையில் இறங்கி வரவில்லை. ஏறி வருகிறது.
இறங்கி வருகிறது என்ற வார்த்தையை விட, ஏறி வருகிறது என்ற வார்த்தையைத்தான் நாம் உபயோகிக்க வேண்டும்.
மனிதனைக் கடவுளாக்க,
கடவுள் மனிதனாவதுதான் அவதாரப் பிறப்பு.
ஞான சக்திகள் இப்பூமியில் உலாவிய
இடங்களே தீர்த்தஸ்தலங்கள்
All holy places, energy fields are places touched by Masters
குருவாக வெளிப்படும்பொழுது, அந்தச் சக்தியோடு நீங்கள் தொடர்பு கொள்வதைப் போல, அந்தச் சக்தியோடு இணைவதைப் போல கடவுளாக வெளிப்படுகிற சக்தியோடு, நீங்கள் நேரடியாக இணைய முடிவதில்லை.
அதனால், ஈஸ்வரனை ‘குரு’ என்ற வார்த்தையினால் சொல்லும்பொழுது, அவர்மீது இருக்கும் பக்தியையும், அவருடைய நிலையைப் பற்றி உங்களுக்குப் புரியவைப்பதையும் உயர்த்தினோமே தவிர தாழ்த்தவில்லை.
ஈஸ்வரரின் ‘குரு’ தன்மையைப் புரிந்து கொள்வதுதான், அவரின் கடவுள் தன்மையை தாண்டி அடைய உதவும்.
ஞான குருவாக,
ஞான சக்தியாக,
வெளிப்படுகிற ஈசன்
ஏழு சரீரங்களையும் தாண்டி,
இந்தப் பூமியில் உலவினார் என்பதே சத்தியம். நிர்வாண சரீரம் மாத்திரம் அல்லாமல் ஏழு சரீரங்களையும் தாண்டி, பிரபஞ்சத்திலே நம்மைப்போல் அவரும் பூமியில், தம் பொற்பாதம் படும்படி உலவினார்.
ஞான குருவான ஈஸ்வரன் உலவிய இடங்கள் எல்லாம் தீர்த்தஸ்தலங்களாக, சக்திபீடங்களாக, ஜோதிர்லிங்கங்களாக, சுயம்பு ஆலயங்களாக வெளிப்பட்டது. உங்கள் பகுத்தறிவை வைத்து, தர்க்க அறிவை வைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய சத்தியம் அல்ல இது.
இது அனுபவமாக உணரப்பட வேண்டிய ச த்தியம்!
பகுத்தறிவைத் தாண்டிய இதயப்பூர்வ
உணர்வை அனுபவித்து வாழும்
பாக்கியசாலிகள், கடவுளை நேரடியாகக்
கண்டுபிடித்து விடுவார்கள். காரணம்,
கடவுள், கடந்து உள் இருந்து
> பகுத்தறிவு பழுத்தால், அது
> இதயம் நோக்கி அவரை
> அழைத்துச் செல்லும்.
> அவருக்குள்ளே ஆழமாய்
> இருக்கும் தெய்வத்தை
> உணர உதவும். இது
> உணரப்படும்போது நம்மை
> கடவுளாக்கும் கடவுள், குரு
> என்பது அனுபவமாகும்.

அனுபவிக்கப்பட வேண்டிய ரசம்.
இதயம் திறந்து வாழ்பவர்கள்,
சில துளியாவது இந்த ரசத்தை
அனுபவித்திருப் பதால், அவர்களால்
நேரடியாய் கடவுள், மனிதன், குரு
ஆகிய மூன்று ரூபங்களிலும் உள்ள
தெய்வாம்சங்களை உணர முடியும்.
மூளையிலேயே சிக்கியிருக்கும் பகுத்தறிவு, அதிபட்சமாக அது கேள்விகளை உருவாக்கும். சந்தேகங்களைக் கிளப்பும். பகுத்தறிவு, மூளையைப் பீடித்த சூடு. இதயம், உணர்வு, தென்றல், தாயன்பு, நட்பு, அழகு, போன்ற சிறு சிறு தெய்வீக வெளிப்பாடுகளைக்கூட பகுத்தறிவாளியால் கூறு போட்டு பிரித்துப் பார்க்க முடியும்.
"ரோஜா இருக்கிறது. இதில் அழகு எங்கே இருக்கிறது? மானிடா யோசி," என்று மூளையின் சூட்டை கிளப்புவது போல... "விக்கிரகம் இங்கே இருக்கிறது. அதில் தெய்வீகம் எங்கே இருக்கிறது? கடவுள் இருக்கிறாரா யோசி?" என்று சொல்ல முடியும். கேட்க முடியும்.
இதனால் நேரடியாய் உலகுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. குழப்பமே மிஞ்சும்.
ஆனால் பழுத்த, முதிர்ந்த ஒரு பகுத்தறிவுவாதியால் தாயன்பையும், ரோஜாவின் அழகையும், விக்கிரகத்தின் தெய்வீகத்தையும், குருவின் வெளிப்பாட்டையும் நேரடியாய்ப் புரிந்து கொள்ள முடியும்.
பகுத்தறிவு பழுத்தால், அது இதயம் நோக்கி அவரை அழைத்துச்செல்லும். அவருக்குள்ளே ஆழமாய் இருக்கும் தெய்வத்தை உணர உதவும். இது உணரப்படும்போது நம்மைக் கடவுளாக்கும் கடவுள், குரு என்பது அனுபவமாகும்.
தாய்மையின் ரகசியம்
• யார் பெண்? தாய்மை குணம் மலர்ந்தவர்... யாராக இருந்தாலும் அவர் பூஜைக்குரிய பூ. ஆணாயிருந்தாலும்! • யார் ஆண்? தாய்மை குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும்!
பக்தி பலவீனம் அல்ல...
பலமே...
நம்முடைய வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் அளவில்லாத மூடநம்பிக்கைகளால் காலத்தையும் நேரத்தையும் வீணடித்து வருகிறோம்.
மூடநம்பிக்கை என்பது மனத்தை மந்தப்படுத்துகிற, உணர்வை பலவீனப்படுத்துகிற பழக்கவழக்கங்களாகும்.

இதற்குக் காரணம் எந்த ஒரு நிகழ்ச்சி
யையும் மேலோட்டமாகப் பார்க்கும்
மன அமைப்பு.
'உள்முகமாகத் திரும்புவது' என்ற ச
த்தியம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
நடந்தது என்றால், உங்களை
மேம்படுத்தக் கூடிய, நிறைவுத்
தன்மையைத் தரக்கூடிய சத்தியமாக,
அதே நிகழ்ச்சி மாறிவிடும்.
என்னுடைய வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
என்னுடைய வாழ்கையில் நிறைவுத்
தன்மையை தரும் சத்தியமான 'உள்
முகமாகத் திரும்புதல்' எனும் இந்தத்
தீக்ஷை எப்படி நடந்தது என்று
உங்களுக்கு விளக்க முயற்சிக்கி
றாம்.