மகோன்னத தீக்ஷை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Ultimate initiation
ஒவ்வொரு முறையும் அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மீண்டும் மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு முழுவதினாலும் ஒத்துழைத்து, பயம் இல்லாமல் ஆழ்ந்து, அன்பின் ரச த்தில் கரையுங்கள்.
இரண்டு விஷயம் உண்டு. கரைவதற்கு இப்போது உணர்வு ரீதியாக தைரியம்: இரண்டாவது கரையும்போது நாம் ஏதாவது செயல்களைச் செய்தால், அதற்காக வருத்தப்படாமல், வருந்தாமல், குற்ற உணர்ச்சிக்குப் போகாமல் இருக்கிற முதிர்ச்சி, ஸ்திரத்தன்மை.
குரு, ஒரு பக்கம் எரிகிற காட்டுத் தீ. அவர் ஒரு கரையில், ஒருபக்கம் இருக்கிறார். நடுவில் சம்சாரம் என்கிற ஆறு ஓடுகிறது. நீங்கள் இன்னொரு பக்கம் இருக்கிறீர்கள்.
இரண்டு பேருக்கும் நடுவில் பாலம் இருக்கிறது. அது எந்தப் பொருளினால் உருவானாலும் பரவாயில்லை. இந்தக் காட்டுத் தீக்கு அந்தப் பாலத்தை எரித்து உங்களை ஏற்றுக் கொள்கிற சக்தி உண்டு.
பாலத்தை உருவாக்குவதே அந்த மகோன்னத நிலையை அடைவதற்கான தீக்ஷையை நிகழ்த்திவிடும்.
பாலத்தை மரத்தால் கட்டினாலும் சரி, இல்லை மண்ணால் கட்டினாலும் சரி, கல்லால் கட்டினாலும் சரி, சிமெண்டால் கட்டினாலும் சரி, எதில் கட்டினாலும் இந்தக் காட்டுத்தீ பரவி உங்களை ஏற்றுக்கொள்ளும்.
எந்தப் பாவனையில் பாலம் கட்டினாலும் சரி, சக பாவமானாலும், தாஸ பாவமானாலும் சரி. எந்தப் பாவமானாலும் சரி, அந்தப் பாவத்திலே நீங்கள் கரையுங்கள். அவரை இழுக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் கரையுங்கள்.
கரையத் துவங்கிய அந்த வினாடியே, உங்களின் உணர்வு கரைந்து, வாழ்க்கையின் உச்சத்தை, அது உங்களுக்கு மலர வைக்கும். அது உங்களுக்குள் ஆழமான மாற்றத்தை அளிப்பதாக மாறும் வேறு ஒன்றுமே செய்யத் தேவையில்லை.
அந்தச் சத்தியத்தை உள்வாங்கி இதற்காக முயற்சி செய்தீர்கள் என்றால் போதும். உங்கள் உணர்வை ஒன்று திரட்டி, "குரு சக்திக்குள், குரு என்கிற உணர்விற்குள், குரு தத்துவத்திற்குள் நான் கரைவேனாக," என்கிற ஆழமான சங்கல்பத்தை ஏற்படுத்தி, அந்த உணர்வை உங்களுக்குள் ஆழமாக்கினீர்கள் என்றால் போதுமானது.
“ஐயோ!
என்னால்
கரைய
முடியவில்லையே!
எப்படிக்
கரைவது?’’ என்று எல்லாம் கேட்கவே
வேண்டாம்.
“கரைவேனாக,”
என்கிற
சங்கல்பத்தை
ஆழமாக
ஏற்படுத்தினீர்கள்
என்றால்,
போதுமானது.
உங்களுக்குள்ளே அப்படியே கரைய
ஆரம்பித்து
விடுவீர்கள்.
வேறு
ஒன்றுமே நிற்காது.
> “ஐயோ! என்னால் கரைய
> முடியவில்லையே!
> எப்படிக்கரைவது என்றெல்லாம்
> கேட்கவே வேண்டாம்.
> ‘கரைவேனாக’ என்கின்ற
> சங்கல்பத்தை ஆழமாக
> ஏற்படுத்தினீர்களென்றால்
> போதுமானது. உங்களுக்குள்ளே
> அப்படியே கரைய ஆரம்பித்து
> விடுவீர்கள். வேறு ஒன்றுமே
> நிற்காது.
கரமாக நிற்கிற உங்களின் மனம்கூட, கரைகிற பாகத்தைப் பார்த்து தாமும் கரைந்துவிடும். வேறு ஒன்றுமே செய்ய வேண்டியது இல்லை.
அவ்வளவுதான், வேறு ஒன்றுமே இல்லை.
கண்களை மூடி ஆழ்ந்து இந்த உணர்விற்குள் செல்லுங்கள். இந்தச் சத்தியங்கள் வெறும் வார்த்தையாக இருக்கக்கூடாது.
வாழ்க்கையாக மாற வேண்டும்.