அன்பைக் கண்டால் பயமா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனந்த அலைக்கு அணை கட்டாதீர்
Afraid of love? Don't raise a wall for Bliss waves
உணர்வின் ஆழமான அனுபவங்களைத் தருவதற்கு வரும் ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாதீர்கள்.
உணர்வின் ஆழமான அனுபவங்கள் உள்ளே மலர்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாமல் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்றால், வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும்போது, மிகப்பெரிய திருப்தியோடு மரணத்திற்குள் நுழைவீர்கள்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஏன் நாம் அந்த உணர்வின் மிகப் பெரிய தாக்கங்கள் நமக்குள் நடக்க அனுமதிக்காமல் இருக்கிறோம் என்றால், பயத்தினால்தான்! காரணம். நாம் நம்முடைய பொருட்களை நம்மிடம் இருந்து விட்டு விடுவோமென்று பயப்படுகிறோம். ஒன்று நாம் யாரை ஆழ்ந்து நேசிக்கிறோமோ அவருக்குக் கொடுத்து விடுவோமோ? இல்லை, அந்த நேசத்தினாலே இதெல்லாம் பராமரிக்கப்படாவிட்டால், தானாகவே காணாமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறோம்!
அந்த மிகப்பெரிய ஆன்மப் புரட்சி, ஆன்ம
எழுச்சி, அன்பின் எழுச்சி நமக்குள்ளே
நடக்கும்போது, அதைக்கண்டு
பயந்து நடுநடுங்கி, ஒடுங்கிக்
கொள்கிறோம்.
> உணர்வின் ஆழமான
> அனுபவங்கள் உள்ளே
> மலரவதற்கான ஒரு
> வாய்ப்பைக்கூட நழுவ விடாமல்
> வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்
> என்றால், வாழ்க்கையை வாழ்ந்து
> முடிக்கும்போது, மிகப்பெரிய
> திருப்தியோடு மரணத்திற்குள்
> நுழைவீர்கள்.
அன்பின் உச்சம் கண்டு பயப்படக்கூடாது
No need to have fear to touchThe peak of love
நம் NSP-யில் ஒரு அன்பர் கலந்து கொண்டார். கலந்து கொண்ட பிறகு, நம் ஆஸ்ரமத்திற்கே வருவதில்லை. நம் செக்ரட்டரி ஒரு நாள் ஃபோன் செய்து கேட்டிருக்கிறார்.
“ஏன் சார் வரவில்லை? உங்களுக்கு NSP பிடிக்கவில்லையா? நன்றாக இல்லையா?” என்று. அவர் சொன்னார், “இல்லை மிகவும் பிடித்திருக்கு... அதனால்தான் வரமாட்டேன் என்கி றேன்!’’
செக்ரட்டரி ஐயா கேட்டிருக்கிறார். “அதற்காகப் போய் ஏன் வராமல் இருக்கிறீர்கள்?’’ என்று.
“இதற்குமேல் வந்தேன் என்றால் அங்கேயே இருந்து விடுவேன். என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாதென்று, எனக்குத் தெரிகிறது.’’
> அன்பைக் கண்டு பயம்.
> அன்பின் உணர்வு,
> உச்சத்திலே
> செய்கிற செயலைத்
> தாங்கிக் கொள்கிற
> அளவிற்கு
> நமக்கு முதிர்ச்சி இல்லை.
அன்பைக் கண்டு பயம். அன்புணர்வின் உச்சத்திலே நாம் செய்கிற செயலைத் தாங்கிக்கொள்கிற அளவிற்கு முதிர்ச்சி இல்லை.
இப்போது அதைத்தான் செய்ய வேண்டும். இந்த அளவிற்கு அன்பின் உச்சத்தை எங்கு அனுபவிக்கப் போகிறோம்?
அன்பின் உச்சத்தை எதிர்ப்பது. அன்பின் ஆழமான அனுபூதியை மறுப்பது. அதைத்தான் குரு துரோகம் என்று சொல்கிறோம்.
நன்கு தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் பல நேரங்களில் குருவாக மட்டும் இல்லை. பல இடங்களில், குரு உங்கள் வாழ்க்கையிலே அன்பின் உச்சத்தை மலர வைக்கிறார்.
ஆனால், அந்த அன்பின் உச்சத்திலே என்ன செய்வோமென்று நமக்கே தெரியாமல், அந்த அளவிற்கு முதிர்ச்சி இல்லாதனால், அன்பின் உச்சம் என்ற மிகப் பெரிய அலை, அந்த ஆனந்த அலை, ஆனந்தத் தென்றல் வாழ்க்கையில் வீசுவதைத் தடுத்து அணை போட்டு வைப்பதுதான், வாழ்க்கைக்கு நாம் செய்கிற துரோகம்.
அப்போது, இரண்டுமுறை வாழ்க்கையில் நம் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு திறக்கவில்லை என்றால், அடுத்த கதவைத் தட்டப் போய்விடும்.
அதன் பிறகு, பார்த்தீர்கள் என்றால் என்றாவது ஒரு நாள் நீங்கள் கதவு என்று பூட்டு போட்டுப் பூட்டி வைத்திருந்த வீடே காணாமல்போகும். அப்பொழுது உள்ளேயும் ஒன்றும் இருக்காது. வெளியேயும் ஒன்றும் இருக்காது.
வாழ்க்கை என்பதின் மிகத் தெளிவான எளிமையான விளக்கம் இது. வைத்திருக்கிற பொருளை விற்று, ஆழமான உணர்வை, அனுபவங்களைச் சேர்த்துக்கொள்கிற சந்தைதான்.வாழ்க்கை!
பொருட்கள் செல்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
எங்கெங்கெல்லாம் உங்களுடைய உணர்வு உங்களை அறியாமல் மலர்கிறதோ, அங்கெல்லாம் பயமில்லாமல் அந்த அனுபவம் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வாங்கிக்கொள்ளும் ஸ்திரத்தோடு உங்களைத் திறந்து வைத்து, அதிலேயே கரையுங்கள்.
உணர்வை மலர்த்துவது குரு சக்தியே
Consciousness blossom by Guru sakthi
குரு-சிஷ்ய உறவு மலரும்போதெல்லாம், உங்களுடைய இருப்புத் தன்மை விரிவடையவில்லையா, முதிர்ச்சியடையவில்லையா, அப்பொழுதெல்லாம் நீங்கள் ஒரு மேம்போக்கான உறவில் சிக்கி இருக்கிறீர்கள்.
உங்கள் இருப்புத்தன்மையை முதிர்ச்சிக்குள் போக விடாமல் தடுக்கும் உறவு, மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.
குரு-சிஷ்ய உறவே மீண்டும் மீண்டும் மலர்த்தப்பட வேண்டும்.
உங்களுக்குள் மலர்ச்சியை உருவாக்கிட வேண்டும் என்றால் அது குரு சிஷ்ய உறவில்தான் நடக்கும். உங்களுக்கு வேண்டுமானால் குரு தேவைப்படாமல் இருக்கலாம். எதை இழக்கிறீர்கள் என்பது புரியாமல் இருக்கலாம்.
ஆனால் குருவால், 'தன் உணர்வை' மற்றவர்களுக்குள்ளும் நிகழ்த்தாமல் இருக்க முடியாது.
ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் 'தன் இருப்பை' உணர்ந்தவர்களால்தான் அதை மற்றவர்களுக்கும் மலர்த்த முடியும், வேறு நபரால் அதைக் கொடுக்க முடியாது என்பதையும் தெரிந்தவர்கள் குருமார்கள். இப்போது அனைத்து உறவுகளுமே ஆழமற்றவையாக ஆகிவிட்டது. ஆழ மற்றவை என்றால், மிக மேம்போக்காகி விட்டது. இப்போது கணவன், மனைவி உறவுகூட ஏறத்தாழ ஒரு boy friend, girl friend உறவுதான்.
ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம்.
நம்முடைய வேத பாரம்பரியத்தில் அந்த விவாகரத்து கிடையாது. சமஸ்கிருதத்தில் 'விவாகரத்து' என்ற வார்த்தையே இல்லை. ஏனென்றால், மரணம்வரை ஒன்றாக இருந்தாக வேண்டுமென்பதுதான் திருமணத்தில் எடுத்துக் கொள்ளப்படும் விரதம்.
விரும்பும்வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற விரதமில்லை. மரணம்வரை ஒன்றாக இருந்தாக வேண்டும். அடிவயிற்றில் இருக்கிற அக்னி எரியும்வரை ஒன்றாக இருந்தாக வேண்டும். அதுதான் விரதம். இப்போது என்ன செய்கிறோம்? சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகும்வரை ஒன்றாக இருக்கிறோம். மிகப்பெரிய வாழ்க்கை முறை.
எப்படியோ, குரு- சிஷ்ய உறவு மட்டும்தான், எப்போதும் முதிர்ச்சியை மலர வைக்கும். உங்களையே அறியாது உங்களுக்குள் இருக்கும் பல பரிமாணங்களை மலர வைக்கிற ச க்தி, குரு-சிஷ்ய உறவிற்குத்தான் உண்டு.
ஒவ்வொரு முறையும், எவ்வளவு முறை, எவ்வளவு ஆழமாக வாய்ப்பு கிடைத்தாலும், தவறாமல் அந்த உறவிலே கரையுங்கள்.