உன்னத உறவு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எல்லா உறவுகளுமே நம்மை மீண்டும், மீண்டும், பந்தத்திற்குள்ளே ஆழ்த்தும் பலம் வாய்ந்தது.
ஆனால், இந்தக் குரு-சிஷ்ய உறவு மட்டும் நம்மை மீண்டும், மீண்டும் சுதந்திரத்திற்குள், ஆனந்தத்திற்குள் அழைத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது.
உறவு என்றால், என்னவென்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் மீது அவர்களுடைய சாயலைப் பதிப்பதனால் உங்களுக்கே உங்களைப் பற்றித் தெரியாத பல பரிமாணங்களை உங்களுக்குப் புரிய வைக்கிற நபருக்குத்தான் ‘உறவு’ என்று பெயர். உறவிற்கு அவ்வளவு பெரிய பலம் உண்டு.
> உங்கள் மீது அவர்களுடைய
> சாயலைப் பதிப்பதனால்
> உங்களுக்கே உங்களைப்
> பற்றித் தெரியாத
> பல பரிமாணங்களை
> உங்களுக்குப் புரிய வைக்கிற
> நபருக்குத்தான்
> ‘உறவு’ என்று பெயர்.
உங்களின் புதுப்புது பரிமாணங்களைத் திறப்பதே உறவு
Opening new dimensions of you is relationship
நாம் எல்லோருமே திரும்பத் திரும்ப செய்கிற ஒரு வேலை, ‘எங்கே ஏமாந்து விடுவேனோ?’ ‘எங்கே இவரிடம் ஏமாந்து போய்விடுவோமா?’ என்று நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கிறோம். இது நாம் எல்லோருமே செய்கிற ஒரு வேலைதான்.
ஆனால், திடீரென்று பார்த்தால், யாரோ ஒரு ஆணுக்காக, யாரோ ஒரு பெண்ணுக்காக, உங்களுடைய பொக்கிஷங்களையும், உங்களுடைய வாழ்க்கை முழுவதும் சேர்த்து வைத்த பணம் மட்டும் இல்லை, உங்கள் உணர்வையேகூட திறக்கத் தயங்க மாட்டீர்கள், அதுதான் மிகப்பெரிய விஷயம்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், பொக்கிஷத்தைக்கூட சில சமயம் திறந்து விடுவோம்.
நீங்கள் எப்படி உங்களை உலகத்திற்குக் காட்டுகிறீர்களோ, அது போலவே காட்டிக்கொண்டு இல்லாமல், இரகசியம், ஒளிவு, மறைவு என்பது இல்லாமல் அதாவது, திருத்தம் செய்யாமல் உங்களுடைய குணத்தை (Personality), உங்கள் நிஜமான
பரிமாணத்தைக் காட்டுகிற துணிவு!
இன்னொரு ஜீவனிடம் தம்மை
முழுமையாய்த் திறப்பது, அதுதான்
காதலுடைய அடையாளச் சின்னம்.
மற்றவர்களுக்கு எல்லாம் காட்டாத
உங்கள் குணத்தையே ஒருவரிடம்
திறந்து காட்டுகிறீர்கள். அதாவது
இந்த Personality-ஐத் திறந்து
காட்டுவதுதான் மிகப் பெரிய செயல்.
உங்களுடைய பர்ச
னாலிட்டியை... குணத்தைத் திறந்து
காட்டுவதென்றால், யாரிடம் திறந்து
காட்டுவீர்கள்? யார் உங்களை
அப்படியே ஏற்றுக்கொள்வார்களோ,
அவர்களிடம் மட்டும்தான் திறந்து
காட்டுவீர்கள்.

தந்தையால்திறக்க முடியாத பரிமாணத்தை, தாயால் திறக்க முடியாத பரிமாணத்தை, நண்பனால் திறக்க முடியும். நண்பனால்கூட திறக்க முடியாத பரிமாணத்தை, ஒரு காதலன் திறந்து வைத்து விடுவான்.
இவர்களையெல்லாம் தாண்டி, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான பரிமாணமான கடவுளை, திறந்து வைப்பவரே ‘குருநாதர்’ என்றழைக்கப்படுகிறார்.
உணர்வையே கரைக்கும் உறவு, குருசிஷ்ய உறவு
The relationship which can melt you, totally is Guru disciple relationship
இந்த உறவில் மட்டும்தான் இதற்கு மேல் அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற கரைந்து விடுதல் நிகழும்.
அதுதான் அந்தக் குரு-சிஷ்ய உறவின் உச்சம். குரு-சிஷ்ய உறவின் தன்மை.
உங்கள் உணர்வு கரைந்து போய் விடும்பொழுது, காணாமல் போய் விடும்பொழுது, நடப்பதுதான் ஞானத்தைத் தாண்டிய ரசம்.
அதனால் குரு-சிஷ்ய உறவிற்கு மீறி, குரு-சிஷ்ய உறவைத் தாண்டி உங்களுக்குள் நடப்பதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், அதுதான் வாழ்க்கையில் மிகச் சிறந்த நிகழ்வு. The greatest happening in your life. வாழ்வின் உச்சம்.
பல உறவுகள் சேர்ந்துதான் நீங்கள் என்கிற பட்டை தீட்டப்படாத வைரத்தை பட்டை தீட்டுகிறது. நீங்கள் ஒரு பட்டை தீட்டப்படாத வைரம் மாதிரி.
> உங்கள்
> உணர்வு கரைந்து
> போய்விடும் பொழுது
> நடப்பதுதான்
> ஞானத்தைத்
> தாண்டிய ரசம்
வைரம் போன்று, பட்டை தீட்டப்படுவது என்பது, பல்வேறு உறவுகள் உங்கள் மேல் உராயும்பொழுது நிகழ்வது. உராய்ந்து உராய்ந்து உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வதனால்தான், அதற்கு உறவு என்று பெயரோ, என்னவோ!
உராய்ந்து உராய்ந்து...
உங்களை
உன்னத நிலைக்கு
எடுத்துச் செல்வதனாலேதான்
அதற்குப் பெயர் உறவு.
அது உங்களுடைய ஒவ்வொரு பரிமாணத்தையும், மலரச் செய்யும். உதாரணமாக, தாய்மை என்கிற பரிமாணத்தை மலரச் செய்வது உங்களுடைய மகன் அல்லது மகள் என்கிற உறவு.
தனியாக இளம் பெண்ணாகச் செல்லும்போது நாயைப் பார்த்து பயப்படும் ஒரு இளம் பெண், அவளுடைய குழந்தையோடு செல்லும் பொழுது சிங்கம் எதிர்ப்பட்டால், குழந்தையைக் காப்பதற்காக அதை எதிர்த்து அடிக்கத் துவங்குவாள். முறத்தாலே புலியையும் விரட்டுவாள் என்பார்களே, அதுபோன்று அதே இளம் பெண் துடிப்போடு இயங்குவாள்.
எங்கிருந்து வந்தது அந்தத் தைரியம்? நேற்றுவரை தனியாகப் போக பயந்த இளம் பெண்ணாக இருந்தவள் அப்போது நாய்கூட அவளை எளிதில் மிரட்டியது. ஆனால் அவளுடைய குழந்தையைக் தாக்க புலியே வந்தாலும் அதைக்கூட விரட்டும் ச க்தியோடு எதிர்கொள்வாள்.
பெண்ணுக்குள் இருந்த தாய்மை என்கிற பரிமாணத்தை, இந்தக் குழந்தை உயிர்ப்பித்து விட்டது. அதனால்தான் சிங்கத்தைக் கண்டுகூட கலங்காத, ஸ்திரமான மனநிலை அவளுக்குள்ளே மலர்ந்து விடுகிறது.
உறவுகளைப் பற்றிய ஒரு ஆழமான சத்தியத்தை இங்கே உணர்த்துகிறோம்.
காதலன்-காதலி, கணவன்-மனைவி என்கிற ஒவ்வொரு உணர்விற்கும், ஒவ்வொரு
உறவிற்குள்ளும் நுழைவதற்கு
முன்பும், அகங்காரமில்லாமல்
தளர்வாக இருக்கிற மன உணர்வை
உருவாக்கிக் கொள்ள வேண்டியது
உங்கள் பொறுப்பு.
உங்களுக்குள்ளே செய்ய வேண்டிய நிரந்தரமான மாற்றத்தைச் செய்து வைக்க வேண்டும். நிரந்தரமான மாற்றத்தைச் செய்து விட்டுப் போவதற்காகத்தான், அந்த உறவுகளையெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிறோம். இல்லையென்றால் அந்த உறவுகள் எல்லாம் வீண்.
> 'காதலன்-காதலி 'கணவன்-மனைவி'
> என்கின்ற ஒவ்வொரு உணர்விற்கும்
> ஒவ்வொரு உறவிற்குள்ளும்
> நுழைவதற்கு முன்பும்.
> அகங்காரமில்லாமல் தளர்வாக
> இருக்கின்ற மன உணர்வை
> உருவாக்கிக் கொள்ள வேண்டியது
> உங்கள் பொறுப்பு
கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் இருக்கும் உறவு, ஒருவரை ஒருவர் மலர வைத்து உன்னதமான நிலையை அடைய வேண்டும். அகங்காரமில்லாத நிலையை அவர்களுக்குள் காட்ட முடியவில்லை, வெறுமனே உடலால் மட்டும்தான் சம்பந்தம் என்றால் அதற்கு 'உறவு' என்கிற அழகான வார்த்தையைத் தயவு செய்து உபயோகப்படுத்த வேண்டாம்.
அது உறவு அல்ல.
உண்மையான உறவு என்னவென்றால், உணர்விலே ஏற்படுத்துகிற ஆழமான மலர்ச்சி.
குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும்
Master disciple relationship makes your life to blossom
உங்களைச் சுற்றிச் சேருகிற நண்பர்கள், நட்பு என்கிற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.
உங்களைச் சுற்றிச் சேருகிற உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய தாய் என்ற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.
உங்களைச் சுற்றிச் சேர்கிற தாய், தந்தையர்கள் அல்லது பெரியோர்கள் உங்களைக் குழந்தை என்கிற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.
ஆனால், குரு, எல்லாத் திசைகளில் இருந்தும், உங்களைச்சுற்றிச் சூழ்வதனாலே, இந்த எல்லாப் பரிமாணத்தை மட்டும் அல்லாமல், இதையெல்லாம் தாண்டிய முழுமைத்தன்மை, உங்களை நீங்களே பிரதிபலித்துக்கொண்டு உங்களுக்குள் நீங்கள் கரைகிற பரிமாணத்தையும் வெளிப்படுத்த வைப்பார். அந்தப் பரிமாணத்தைத்தான் மஹாபாவம், ஞானம் என்று சொல்கிறோம்.
உங்களைச் சுற்றி சேருகிற உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய வாத்சல்ய பாவத்தை வெளிப்படுத்துவார்கள் உங்களைச் சுற்றிச் சேருகிற பெற்றோர்கள். உங்களுக்குள் இருக்கிற மாத்ரு பாவத்தை வெளிப்படுத்துவார்கள்.
> வாழ்க்கையில்
> மிகச்சிறந்த நிகழ்வு...
> உங்கள் வாழ்க்கையில்
> நடக்கும் மிகப்பெரிய
> விஷயம்,
> குரு – சிஷ்ய உறவுதான்.
உங்களைச் சுற்றி சேருகிற தாஸர்கள், தொண்டர்கள், உங்களுக்குள் இருக்கிற தலைவன் என்ற தாஸ பாவத்தை வெளிப்படுத்துவார்கள்.
உங்களைச் சுற்றிச் சேருகிற ஒவ்வொருவரும் உங்களுக்கே தெரியாத ஒவ்வொரு பரிமாணங்களை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், குரு உங்களை எல்லாத் திசைகளிலும் சுற்றிச் சூழ்வதனாலேயே உங்களுக்குள்ளே மலராது இருக்கிற, உங்களுக்குள்ளே உணராது இருக்கிற எல்லாப் பரிமாணத்தையும், உணர்த்துவது மட்டும் அல்லாமல், ‘மஹாபாவம்’ எனப்படும் மிகப்பெரிய உணர்வு நிலையையும், ‘உங்களுக்குள் நீங்களே கரைதல்’ என்கிற மிகப்பெரிய உணர்வு நிலையையும் உங்களுக்குள் உணர்த்துவார்.
உங்களுக்குள்ளும் மலர வைப்பார். என்னென்ன மாற்றங்களெல்லாம் அந்தக் குரு-சி ஷ்ய உறவினால் மலருகிறது என்று கணக்கேபோட முடியாது. கணக்குப் போட்டு அவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது.
எரிகிற ஒரு விளக்கு, எரியாத விளக்கிற்குள் என்ன மாற்றம் நிகழ்த்தியது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
எரிகிற விளக்கிலிருந்து எரியாத விளக்கிற்கு அந்த ஒளி பரவுகிறது. ஒளி பிடித்துக் கொள்கிறது. இப்போது அந்த எரியாத விளக்கிற்குள்ளே என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
குரு-சிஷ்ய உறவிற்குள்ளே இணைந்த பிறகுதான், விளக்கு என்ற வார்த்தையையே உபயோகம் செய்ய முடியும். அதுவரை விளக்கிற்கும், விளக்குமாறுக்கும் வித்தியாசம் இருக்காது. நெருப்பு பிடித்த பிறகுதான், அது விளக்கு என்கிற வார்த்தைக்கே தகுதியாகிறது.
எப்படி அந்த எரியாத விளக்கு, எரிகிற விளக்காகிய குருவிடம் சென்று திரும்பிய பிறகு, என்ன மாற்றம் நடந்தது என்று சொல்ல முடியாதோ...
அதுபோல் உணர்வினாலே குருவால் தொடப்பட்டவர்கள், உணர்வாலே குரு சக்தியோடு இணைந்தவர்கள், உணர்வாலே குருவை உணர்ந்தவர்கள். அவர்கள் உணர்விற்குள்ளே என்னென்ன மாற்றம் நடக்கிறது என்று ஒன்றுமே சொல்ல முடியாது.
உங்கள் வாழ்க்கையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்
Your life itself is just a doll"s play
உங்களுடைய உறவுகள் எல்லாமே ஒவ்வொரு பாத்திரங்கள்தான். ஒரு நடிப்புதான். நன்கு புரிந்துகொள்ளுங்கள், மொத்தமுமே Psycho dramaதான், அதில்தான் பிறப்பெடுக்கிறீர்கள்.
யாரோ ஒருவர் அப்பா, யாரோ ஒருவர் அம்மா, யாரோ ஒருவர் அக்கா, யாரோ ஒருவர் தம்பி, யாரோ ஒருவர் தங்கச்சி என்று வைத்து விளையாடுகிறோம்.
சின்ன வயதில் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
ஒரு நான்கு மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டு இந்தக் காலத்திலெல்லாம் இல்லாமல் போய் விட்டது. இந்தக் காலத்தில் எல்லாம் வீடியோ கேம்தான், குழந்தைகள் விMODUடும் விளையாட்டில் உறவு என்ற பெயரில் ஒரு நான்கு மரப்பாச்சி பொம்மையை வைத்தும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒன்றிற்கு வெள்ளைத் துணியை சுற்றி 'இது அப்பா' என்று வைத்து விடுவார்கள்.
இன்னொன்றிற்குக் கலர் துணியைச் சுற்றி, 'இது அம்மா' என்று வைத்துவிடுவார்கள். இன்னொரு பொம்மைக்குப் பேண்ட் மாதிரி போட்டுவிட்டு, 'இது அண்ணன்' என்று வைத்துவிடுவார்கள். இன்னொரு பொம்மைக்குச் சட்டை போட்டு விட்டு, 'இது தங்கச்சி' என்று வைத்து விடுவார்கள்.
இப்படிக் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தால், மிக சந்தோஷமாக இருக்கும். மிக ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அப்பா பொம்மையை எடுத்துக்கொண்டு "அப்பா வேலைக்குப் போகிறார்..." என்று கார் சத்தம் மாதிரியே சத்தம் போட்டுக்கொண்டு, அப்பாவை வேலைக்கு எடுத்துகொண்டு போய் உட்கார வைப்பார்கள்.
"அம்மா சமைக்கிறார்கள்...," என்று சமையல் செய்கிற மாதிரி சத்தம் எல்லாமே கொடுப்பார்கள்.
"அண்ணன் பள்ளிக்குப் போறார்...," என்று சைக்கிள் மிதித்துக்கொண்டே, அந்த அண்ணன் பொம்மையைப் பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போய் உட்கார வைப்பார்கள். அதன்பிறகு, "பாடம் படிக்கிறார்," போன்று சத்தம் எல்லாம் கொடுப்பார்கள்.
"A for Apple, B for Brinjal," என்று சொல்லித் தருவார்கள்.
"தங்கச்சி பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லி அழுகிறாள்," என்று சொல்லி என்ன செய்வார்கள். “ஆ!....” என்று தங்கை மாதிரி அழ ஆரம்பித்து விடுவார்கள்.
அதாவது எல்லா உறவுகளின் மாதிரியையும், இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்தே விளையாடிப் பார்ப்பார்கள். ஏதாவது, ஒரு பொம்மை இந்தக் குழந்தை இழுத்த இழுப்பிற்கு வரவில்லை என்றால், “இது கெட்ட பொம்மை,” என்று தூக்கிப் போட்டு விடுவார்கள். “இது ஆய் பொம்மை, ஒழுங்காக விளையாட்டுக்கு வரமாட்டேன் என்கிறது,” என்று ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
ஆழ்ந்து பாருங்கள், இந்த மொத்த வாழ்க்கையும் பாருங்கள், நம்முடைய வாழ்க்கையும் இவ்வளவுதான். வேறு ஒன்றுமே கிடையாது.
யார் யார், எப்படி எப்படி, எந்தெந்த மாதிரியில் விளையாட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதன்படி விளையாடினீர்கள் என்றால், அவர்கள் எல்லாம் உறவுகள்.
அந்தப் பாத்திரம் போன்று அவர்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால், அந்த உறவையே, “இது ஆய் பொம்மை, கெட்ட பொம்மை,” என்று தூக்கிப் போட்டுவிடுவோம்.
உங்களின் மொத்த வாழ்க்கையுமே இவ்வளவுதான், வேறு ஒன்றும் கிடையாது.
இப்படித்தான் எல்லாரும் விளையாடிக்கொண்டே இருப்போம். ஒரு குறிப்பிட்ட இடத்தை நம்முடையது என்று வேலி போடுகிறோம். அந்த வேலியை அகலமாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்போம்.
இப்போது, ஐம்பது ஏக்கர் நிலம் வைத்திருந்து, அதைச் சுற்றி வேலி போட்டிருந்தால் என்ன யோசிப்போம், “அடடா! இன்றும் ஒரு மூன்று அடி வேலியைத் தள்ளிப் போட்டிருக்கலாமே,” என்று யோசிப்போம்.
ஐம்பது ஏக்கர் என்பதால்தான் அப்படி யோசிக்கிறோம் என்று நினைக்காதீர்கள் ஒரு ஆயிரம் ஏக்கர் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? “ஒரு அடி வேலியைத்தள்ளி போட்டால்தான் என்ன,” என்று யோசிப்பீர்கள்.
அந்த எல்லைக்குள்ளிருந்து வேலியை அகலமாக்குவது, நம்முடைய ஜீவாதார ச க்தியோடு தொடர்புடையது.
வாழ்க்கையும் இவ்வளவுதான். வேலிகளை அகலமாக்குவது போன்று உறவுகளை ஆழமாக்குவது.
ஆழமாக்குவது என்றால் என்ன?
உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டுவருவது. மேலும் மேலும், பல்வேறு உறவுகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வருவது, அசைகிற பொருட்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதைதான் Possiveness என்று சொல்கிறோம்.
அசையாத பொருட்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதை 'Possesion' என்று சொல்கிறோம்.
இரண்டு வார்த்தையையும் புரிந்துகொள்ளுங்கள். அசையாத பொருட்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதைச் 'சேர்த்து வைத்தல்' என்கிறோம். அதுதான் வேலியை அகலமாக்க முயற்சி செய்வது.
அதுவே அசைகிற பொருட்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதை 'உறவுகள்' என்கிறோம். அவ்வளவுதான்.
> மூலாக்கினி
> திறந்துவிட்டதென்றால்,
> காலாக்கினி வேலை
> செய்யாது. பயமிருக்காது.
> அவர்களுடைய
> உணர்வின் புது
> பரிமாணத்தைப் பார்க்கத்
> துவங்கி விடுவீர்கள்.
அசையும் சொத்து, அசையாத சொத்தான உங்களின் வாழ்க்கையை, உங்களின் கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டு வருவதுதான் மொத்த விளையாட்டும்.
அந்த விளையாட்டையே விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று பார்த்தால், உங்களையே ஒருநாள் அசைத்து தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
மரணம் இன்னொரு இடத்தில் உங்களைப் பிறக்க வைத்துவிடும், உடனே என்ன செய்வீர்கள்? இன்னொருவரை 'அப்பா' என்றும், 'அம்மா' என்றும் பிடித்துக்கொண்டு விளையாடத் துவங்குவீர்கள். 'அண்ணன்' என்று பிடித்துக்கொண்டும் 'தம்பி' என்று பிடித்துக்கொண்டும் அதே விளையாட்டை ஆரம்பிப்பீர்கள்.
"இதுதான், என்னுடைய சொத்து. இதுதான் என்னுடையது," என்ற அதே விளையாட்டை ஆரம்பிப்போம், திரும்பவும், திரும்பவும், அதே விளையாட்டை சிறிது நாள் விளையாடுவோம். மரணம் வரும். மீண்டும் மீண்டும் அதே விளையாட்டை விளையாடுவது...
இந்த விளையாட்டில் ஒருநாள்...நம்மேயே அசையாச் சொத்தாக வைத்துக்கொண்டு இருக்கிற யாரோ ஒருவர் என்ன செய்கிறார்?
நம்மேயே அசைத்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்.
அதன்பிறகு உடனே திரும்பவும் இதே விளையாட்டை, மீண்டும் மீண்டும் இதே விளையாட்டை நடத்திக்கொண்டே இருப்போம்.
நம் மொத்த வாழ்க்கையுமே இந்த விளையாட்டுதான். இந்த மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான். வேறு ஒன்றும் கிடையாது.
அந்த விளையாட்டில் சிக்காத உறவு, குரு-சிஷ்ய உறவு,
இது உறவுகளிலேயே மிக உயர்ந்த உறவு, மிக உச்ச நிலையான உறவு.
இதற்கு மேல் உங்களுடைய Psycho drama நடக்காது. நீங்கள் நடத்திக்கொண்டு இருக்கிற நாடகங்களை முடிக்கிற கடைசி காட்சிதான் குரு-சிஷ்ய உறவு.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பல்வேறு விதமான நாடகக்காட்சிகளை நடத்தி, நடத்தி, நடத்திச் சலிப்படைந்து ஒருநாள் சோர்வாகி, “என்னடா இதே மாதிரி, இந்த நாடகங்களையே திரும்பத் திரும்ப நடத்திக்கொண்டே இருக்கிறாமே,” என்று சோர்வாகி விடும்.
அப்போது உங்களின் வாழ்க்கையில் வருகிற குரு-சிஷ்ய உறவில், இதற்கு மேல் நாடகம் தொடர்ந்து நடக்க முடியாது என்று முடிவுக்கு வருவீர்கள்.
> உங்கள்
> வாழ்க்கையில்
> வருகிற ஒவ்வொரு
> நபரும் உங்களை
> மலர வைத்து
> விட்டுதான்
> செல்வார்கள்.
எப்போது நாடகம் போதுமென்று நினைக்கிறீர்களோ, அப்போதுதான் நீங்கள் அந்தக் குரு-சிஷ்ய உறவிற்குத் தயாராகிறீர்கள்.
அதிர்ஷ்டசாலியின் ரகசியம்
• காதலர்கள்? அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துர்-அதிர்ஷ்டசாலிகள்.
• இன்றைய தம்பதியர்? துர்-அதிர்ஷ்டசாலிகள் என நம்பிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.
• யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்? எங்கிருந்தாலும், ஏங்காமல் இனிமையாய் இருக்க தெரிந்தவர்களே அந்த அதிர்ஷ்டசாலிகள்.