KAILASA Library/ஜீவன் முக்தி/ராசலீலா தீக்ஷைSign in
ஜீவன் முக்தி

ராசலீலா தீக்ஷை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Rasa leela dheeksha

கோபியர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் எதுவும் கொடுக்க வேண்டியதும், வாங்க வேண்டியதும் இல்லை. அவர்கள் ஒரே உணர்வு என்பதை உணர்ந்து விட்டார்கள். ஆனாலும்கூட எளிமையோடு இருந்தார்கள்.

ஒரே உணர்வுதான் என்று உணர்ந்துகொண்டு, எப்போதும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால், அது ராசலீலையாக இருந்திருக்காது, போரடிக்கும். கட்டாயமாகப் போரடிக்கும். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

ஞானம் அடைவது எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், 'வெளிப்பாடு' வேறு வேறாக இருக்கும். புத்தர் நாற்பது வயதிற்குப்பிறகு ஞானம் அடைந்தார். சோர்வான உடல். ராசலீலைக்கான சக்தி வெளிப்பாடு நிகழ்வதற்கு, அந்த உடல் தயாராக வேண்டிய நிலையில் இருந்தது.

அவர்களின் உடல் தயாராகிவிடும் பொழுது, அந்த உடலின் மூலமாகப் பிறருக்குள் ஞானத்தை மலர்த்துகிற லீலை தொடங்கிவிடும்.

அவதார புருஷர்களைச் சந்தித்து ஆசிபெறுவதனாலும், தியான சிகிச்சை பெறுவதனாலும், சக்தி தீக்ஷை பெறுவதனாலும் நோய் குணமடைகிறது.

அவர்கள் உடலில் குணமடைதல் எப்படி நிகழ்கிறது?

எப்படி இவை எல்லாம் நடக்கிறதென்றால், சின்ன வயதிலேயே ஞானமடைந்து, உடல் அதற்காகத் தயாராகும் போதுதான் நிகழும்.

இடி இறங்கி, வெளிப்படுவதற்கான ஒடிரான்ஸ்பார்மராக உடல் சின்ன வயதிலிருந்து யோகம், தியானம் மூலமாகத் தயாராக இருக்க வேண்டும்.

ஞான சக்தி, உடம்பிற்குள் இடிபோன்று இறங்கும்போது, அதைத் தாங்கும் ஒரு சக்தி டிரான்ஸ்பார்மராக உடல் இருக்க வேண்டும். உடலையே மாற்றுகிற, மனத்தையே மாற்றுகிற சக்தி டிரான்ஸ்பார்மராக அந்த உடல் இருந்தாக வேண்டும்.

ஞானியின் உடல் ஒரு அணுசக்தி நிலையம் போன்று இருக்க வேண்டும். சிறு வயதிலேயே ஞானமடைந்து, தீக்ஷை தருகிற அளவுக்கு சக்தியை வெளிப்படுத்துகிற ஒரு அணுசக்தி நிலையம் போன்று இருக்க வேண்டும்.

கிருஷ்ணரின் உடல், மிகச் சரியாக ஞானத்தைத் தாண்டிய ரசத்தை தீக்ஷையாக தருமளவிற்குத் தயாராக இருந்தது. இதுபோன்ற அவதார புருஷர்கள் மலர்வது எப்போதாவது நிகழும் ஒன்று.

கிருஷ்ணருடையது ஞானத்தைத் தாண்டிய ரசம். இரண்டு பேரும் ஒன்று என்று உணர்ந்தாலும்கூட, சீண்டிப் பார்ப்பதிலே ஒரு ஆனந்தம், விளையாடிப் பார்ப்பதிலே ஒரு ஆனந்தம்.

கிருஷ்ணனின் லீலையைப் புரிந்து கொள்ள விரும்பி பாகவதத்தைப் படித்தால், கண்கள் நிறைந்து, உணர்வே மலர்ந்துவிடும். காரணமில்லாத விளையாட்டு, எதை வர்ணிப்பது, எதை விடுவது என்றே தெரியவில்லை. அந்தச் செயல்களை வர்ணிப்பதுகூட சாத்தியம் இல்லை. அந்த உணர்வைப் பற்றிச் சொன்னேன், அவ்வளவுதான்.

செயல்களை வர்ணிப்பதுகூட, சில மனிதர்களுக்குப் புரியாமல் போகலாம். கிருஷ்ணன் செய்த செயல்களைப் பார்த்தோம் என்றால், சில நேரம் பகுத்தறிவுக்குப் புரியாமல்கூட போகலாம். ஆனால், அந்த உணர்வை உள்வாங்கிக்கொள்ளுங்கள். அப்போது அந்தச் செயலுடைய மகத்துவம் புரியும்.

உணர்வு ரீதியாக ராசலீலையை உள்வாங்கினாலே, அதற்கான தீக்ஷை உங்களின் உணர்வுக்குள் நிகழ்ந்துவிடும்.

இந்த ஞானத்தைத் தாண்டிய ரசத்தை நேரடியாக அடைந்தால், அதைத்தான் பக்தி என்கிறோம். முக்தியடைந்து அந்த ரசத்தை அடையலாம், நேரடியாகவும் அடையலாம்.

தியானம் - ஞானம் - தவம் என்று படிப்படியாக ஏறி முக்தியைப் பெற்று பக்தியைப் பெறுபவர்கள் பக்தர்கள். நேரடியாகப் பக்தியில் கரைபவர்கள் கோபிகைகள்.

உன்னத உறவு

உங்கள் புதுப்புது பரிமாணங்களைத் திறப்பதே உறவு

Opening your new dimensions is what is ‘relationship"

உணர்வையே கரைக்கும் உறவு, குரு-சிஷ்ய உறவு

Guru-disciple relationship, The relationship That melts The very consciousness

குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும்

When The Guru-disciple relationship flowers, life itself flowers

உங்கள் வாழ்க்கையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்

Your life itself is just a doll"s play

அன்பைக் கண்டால் பயமா? ஆனந்த அலைக்கு அணை கட்டாதீர்!

Afraid of love? Don"t raise a wall for Bliss waves

அன்பின் உச்சம் கண்டு பயப்படக்கூடாது

You should not fear to touch The peak of love

உணர்வை மலர்த்துவது குரு சக்தியே

It is The Guru"s energy That makes The consciousness to flower

மகோன்னத தீக்ஷை

The ultimate initiation