பாதுகாப்பின்மையே பாதுகாப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Insecurity isThe only security
யார் யாருக்கெல்லாம், இந்த வாழ்க்கையில் இருந்து, பணமும் பாதுகாப்பும் தேவையில்லை என்று துறக்கிறீர்களோ, அந்த வினாடியிலிருந்து, உங்களுக்கும், வாழ்க்கைக்கும் இருக்கிற உறவு, ஞானத்தைத் தாண்டிய ரசமாக மாறுகிறது.
நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ‘ஜீவன் முக்தியை’ ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால், முழுமையான, பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதுதான் ஜீவன் முக்தி.
இதற்கு என்ன அர்த்தம் என்றால், பாதுகாப்பற்றத் தன்மையையே ஏற்றுக் கொள்வதன் மூலமாக, அதுவே ஒரு பாதுகாப்பாக மாறிவிடும்.
பாதுகாப்பை நீங்கள் எவ்வளவு தேடினாலும் எதிலும் பாதுகாப்பாக இருக்காது. வீடு இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறீர்களா? நிறைய சொத்து இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறீர்களா?
யாருக்குத் தெரியும், நீங்கள் இருக்கும் நாட்டுக்குப் போர் வராதென்று? வந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? போர் வந்தால் உங்கள் பணத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடுமே.
ஒரு வேளை நீங்கள் மிகவும் பாதுகாப்பானதென்று நம்பும் வேறு ஒரு நாட்டின் மீதே போர் தொடுக்கப்பட்டால், என்னவாகும்? முதலில் நீங்கள் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பணத்திற்கு, மதிப்பு இல்லாமல் போய்விடும். எதிலுமே, எப்பொழுதுமே பாதுகாப்பு இல்லை. அப்படிப் பாதுகாப்பைத் தேடி சுற்றிய ஒரு மனிதனுடைய கதை இருக்கிறது.
ஒரு கல் செதுக்குகிற சிற்பி ஒருவர் இருந்தார். அவருக்கு, "என்னடா இது? நமது வாழ்க்கையே இப்படி மாறிவிட்டதே! இந்தக் கல்லை செதுக்கி செதுக்கியே வாழ்ந்துகொண்டு இருக்கிறோமே. இதை விட நல்ல வாழ்க்கைக்குப் போகவே முடியாதா?" என்று நினைத்தார்.
தீவிர யோசனையில் இருக்கும் பொழுது, பக்கத்தில் அவர் வைத்திருந்த சாப்பாட்டை எலி சாப்பிட்டுவிட்டுச் சென்றது.
"என்னைவிட, இந்த எலி என்ன அருமையாக, இருக்கிறது பார்," என்று நினைத்தாராம். அப்போது அங்கு ஒரு ரிஷி வந்தாராம்.
அவர் ரிஷியிடம் சென்று, "நான் எலியாக மாற வேண்டும்," என்று கேட்டாராம். உடனே அந்த ரிஷி, "அப்படியே ஆகட்டும்," என்று சொன்னாராம். அவர் எலியாக மாறிச் சுற்றிக்கொண்டு இருந்தாராம். ஒருநாள் பூனை அவரைச் சாகடிக்க வந்ததாம். ஓ!
எலியை விட, பூனைதான் நல்லது என்று “பூனையாக மாற வேண்டும்,” என்றாராம். ரிஷி, அதற்கும் “சரி,” என்று சொல்லிவிட்டார். பூனையாக மாறிவிட்டார் அவர்.
சிறிது நாள் கழித்து பூனையை நாய் விரட்டிக்கொண்டு வந்ததாம். அப்போது இவர், ‘நாயாக இருப்பதுதான், நல்லது போலிருக்கிறது’ என்று நினைத்து. “நாயாக மாற வேண்டும்,” என்றாராம். ரிஷி அதற்கும் “சரி,” என்றார், உடனே சிற்பியும் ‘நாயாக’ மாறிவிட்டார்.
அந்த நாயைச் சிறுத்தை துரத்தியதாம். அதனால், “நான் சிறுத்தையாக மாற வேண்டும்,” என்று ரிஷியிடம் கேட்டாராம். “சரி, சிறுத்தையாகவே மாறிப்போ,” என்றாராம். அந்தச் சிறுத்தையை ஒரு பாம்பு விரட்டியதாம். “நான் பாம்பாக மாற வேண்டும்,” என்று கேட்டாராம். உடனே ரிஷி, “அப்படியே ஆகட்டும்,” என்றார். பாம்பை ஒரு கழுகு துரத்தியதாம். இவர், “கழுகாக மாற வேண்டும்,” என்று சொன்னதும், “கழுகாக மாறிப்போ,” என்றார் ரிஷி.
கழுகைக் காற்று அலைக்கழித்ததாம். அப்போது இவர் கேட்டாராம், “நான் காற்றாக மாற வேண்டும்,” என்று. “சரி காற்றாக மாறி போ,” என்றார். “காற்றுக்கு அசையாமல் மலை இருந்ததாம். இவர் சென்று, “நான் மலையாக மாற வேண்டும்,” என்றார்.“சரி மலையாக ஆகிவிடு,” என்றார்.
மலையை, ஒரு சிற்பி செதுக்கிக்கொண்டு இருந்தாராம். “இவர் என்னையே செதுக்குகிறாரே? நான் சிற்பியாக மாற வேண்டும்,” என்று கேட்டாராம். இறுதியில் சிற்பியாகவே மாறிப்போனாராம்.
பாதுகாப்பைத் தேடிப்போகிறவர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். நாம் தேடுவதுபோல், பாதுகாப்பு என்று ஒன்றும் கிடையாது.
பாதுகாப்பு இருக்கிற இடம் என்று தேடினால், ஒரே ஒரு இடம் இருக்கிறது. அதுதான் சுடுகாடு! போய்ப் படுத்துக் கல்லறையை மூடிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. அதனால் இந்தக் காலத்தில் அதுவும் பிரச்சினைதான். இரண்டு வருடங்கள் கழித்துத் தோண்டிப் போட்டுவிடுவார்கள்.
பாதுகாப்பு இருக்கிற இடம் சுடுகாடுதான். இதற்கு மேலே இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற இடமாக, சுடுகாடுதான் இருக்கிறது. ஆனால், அங்குப் போக யாரும் கட்டாயமாக விரும்ப மாட்டோம்.
கப்பல் பத்திரமாகப் பாதுகாப்பாகத் துறை முகத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் துறை முகத்திலேயே இருப்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை.
வாழ்க்கையில் பணத்தால் பாதுகாப்பாக வாழும் வாழ்க்கை இருக்க வேண்டியதுதான். தவறில்லை. ஆனால், அதற்காகவே உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அளிக்கப்படவில்லை..
ஊக்கமும், உற்சாகமும், ஸ்திரத் தன்மையும், தீவிரத்தன்மையும், வியப்படைவதும் ஜீவன் முக்த குணங்கள். பாதுகாப்பற்றத் தன்மையில் வீரமாய் வாழ்கிற மனிதர்களைச் சுற்றித்தான், அந்தக் குணங்கள் உயிரோடு இருக்கின்றன.
வீரலட்சுமி, தைரியலட்சுமி என லட்சுமிகள் எல்லாம், உங்களைச் சுற்றி வாழவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், எந்த லட்சுமியையும் நம்பாமல், செயலில் இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த லட்சுமியையும் நம்பாமல் காளியைப்போல் வாழ்ந்தீர்களானால், பாதுகாப்பற்ற நிலையிலேயே, தொடர்ந்து செயலை செய்துகொண்டே இருப்பீர்கள்.
தொடர்ந்து பாதுகாப்பற்ற தன்மையிலேயே இயங்குவது என்பது பாதுகாப் பற்ற தன்மையினாலேயே உங்கள் உடல், மனம் இரண்டையும் புடம் போடுவது. இந்த இரண்டையும் செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் பாதுகாப்பற்றத் தன்மையிலேயே இருப்பீர்கள்.
எப்போது உங்கள் வாழ்க்கையில் ஓர் வசதியான தன்மையை உணர்கிறீர்களோ, அப்பொழுதே அந்த வாழ்க்கையை உடைத்து, பாதுகாப்பற்ற தன்மைக்குள் நுழைந்து விடுங்கள். அது புது ஊருக்குச் செல்வதாகவோ, புது வேலைக்குச் செல்வதாகவோ இருக்கலாம்.
எவ்வளவு நாள் நீங்கள் இந்தப் பாதுகாப்பற்ற நிலையிலேயே இயங்குகிறீர்களோ, அவ்வளவு நாள்தான் வாழ்க்கைக்குத் தேவையான சக்தி பொங்கும். வாழ்வின் சக்தியினுடைய ஆணிவேர், ஆதிமூலம்தான் லக்ஷ்மி தன்மை.
வாழ்வை இயக்கும் சக்தியை உங்களைச் சுற்றிப் பொங்குவதற்கு அனுமதித்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், எல்லா லக்ஷ்மியும் உங்களைச் சுற்றி வாழும். இல்லையென்றால், குபேரன் வேண்டுமானால் இருப்பான். லக்ஷ்மி இருக்கமாட்டாள்.
குபேரனுக்கும், லக்ஷ்மிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. குபேரன் என்றால், மொத்த சொத்தையும் வைத்துக்கொண்டு, தாமும் அனுபவிக்காமல், மற்றவர்களையும் அனுபவிக்கவிடாமல் செய்பவன். வங்கிக் காவல்காரன், யக்ஷன்.
அவர் அவ்வளவு சொத்தை வைத்துக் கொண்டிருந்தாலும், அவர் ஒரு வேலைக்காரருடைய தலைமையில்தான் இருப்பார். அவர் வாங்குபவராக இருப்பார். மற்றவர்களையும் அனுபவிக்க அனுமதிக்க மாட்டார். தாமும் அனுபவிக்க மாட்டார்.
ஆனால், லக்ஷ்மி அப்படி இல்லை. தாமும் ஆனந்தமாக அனுபவித்து, சுற்றி வருபவர்களுக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருப்பாள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் லக்ஷ்மியின் சக்தி இருந்தால், கொஞ்சம் பணம் இருந்தாலுமே மிக ஆனந்தத்தோடு வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள்.
ஒரு ராஜாவைப் போன்று வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ்வீர்கள். ஆனால், குபேரனாக, யக்ஷர்களின் தலைவனாக, யக்ஷர்களாக இருந்தீர்கள் என்றால், எவ்வளவு கோடி சொத்து இருந்தாலும், துக்கத்தில்தான் இருப்பீர்கள். யக்ஷனுக்கும், குபேரனுக்கும் எப்பொழுதும் போதுமான வருமானவரிச் சோதனை இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால், லக்ஷ்மி எதையுமே பிடித்து வைக்க மாட்டாள். அவளிடம் செல்வம் பொங்கிக்கொண்டே இருக்கும். சுழன்றுகொண்டே இருக்கிற பாதுகாப்பற்றத் தன்மையின் உச்சத்திலே வாழுகிற சக்தி, லக்ஷ்மி.
உண்மையிலேயே சொல்கிறோம். ஒரே ஊரில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறவர் மாதிரி, ஒரு முட்டாள் யாரும் கிடையாது.
> எவ்வளவு நாள் நீங்கள்
> இந்தப் பாதுகாப்பற்ற
> நிலையிலேயே
> இயங்குகிறீர்களோ,
> அவ்வளவு நாள்தான்
> வாழ்க்கைக்குத்
> தேவையான சக்தி
> பொங்கும்
பாதுகாப்பில்லாத தன்மையில் வாழ்வதே ஜீவன் முக்தி
Living in insecurity is living enlightenment
பலபேர் என்னிடம் வந்து கேட்பதுண்டு, “ஒன்பது வருஷம் பரிவிராஜக யாத்திரை செய்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள். ஊர் ஊராகப் போய் பிச்சை எடுத்து சாப்பிடுவது கொடுமையான வாழ்க்கையாச்சே?” என்று.
நான் சொன்னேன், “ஐயா எனக்குத்தான், உங்கள் வாழ்க்கையைப் பார்த்தால் கொடுமையாகத் தெரிகிறது.
என் வாழ்க்கை கொடுமையே கிடையாது. அது என்ன ஒரு ஆனந்தமான வாழ்க்கை என்று உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்கு எப்படி என் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லையோ, அதுபோல் உங்கள் வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
> உங்கள் வாழ்க்கையில்கூட
> தேர்ந்தெடுக்கப்பட்ட
> வசனங்களைத்தான்
> பேசுகிறீர்கள். அதனால்,
> நீங்கள் என்ன செய்கிறீர்கள்,
> “நாம் சொல்லி, அவர் பதில்
> சொல்வதை விட, நாமே
> மனத்தில் சொல்லிக்
> கொள்ளலாம்,” என்று
> விட்டுவிடுகிறீர்கள்.
காலையில் எழுந்திருந்தால் அதே
வீடு, அதே கார், அதே வீட்டுக்காரர்.
ஒரே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு
இருக்கிறீர்கள். காலையிலிருந்து இரவுவரை,
நீங்கள் பேசுகிற வார்த்தைகள்கூட,
நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக்
கவனித்திருக்கிறீர்களா?
நீங்கள் காலையில் எழுந்த உடனே, என்ன
சொல்வீர்களோ, அதைத்தான் ஒவ்வொரு
நாளும் சொல்வீர்கள்.

வீட்டிலிருக்கும் அம்மா என்ன
சொல்ல வேண்டுமோ, அதைத்தான்
தினந்தோறும் சொல்வார்கள்.
அதில் ஏதேனும் ஒன்றிரண்டு
வார்த்தைகள்தான் புதிதாகச் சேரும்,
இல்லை நீக்கப்படும். அதுவும் வாரம்
இருமுறைதான், புதிய வார்த்தை
சேரும் அல்லது நீக்கப்படும்.
அதனால்தான் வீட்டிலிருப்பவர்கள்
இப்பொழுதெல்லாம் பேசி
க்கொள்வதுகூட இல்லை. தினசரி
வாழ்க்கையைப் பார்த்தீர்கள் என்றால்,
நீங்கள் சொல்கிற வார்த்தைகள்கூட
தயார் செய்யப்பட்ட வசனமாகி,
அச்சடிக்கப்பட்டதாகி விட்டது.
உங்கள் வாழ்க்கையில்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைத்தான் பேசுகிறீர்கள். "இதற்கு மேலே அதிகம் பேசி என்ன செய்யப் போகிறோம்? அட விடப்பா!" என்றிருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால், அவர்கள் என்ன பதில் சொல்வார் என்பதும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
அதனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், "நாம் சொல்லி, அவர் பதில் சொல்வதை விட, நாமே மனத்தில் சொல்லிக் கொள்ளலாம்," என்று விட்டுவிடுகிறீர்கள். அதனால் பெரிய கொடுமை பாருங்கள், நீங்கள் பேசுகிற வார்த்தைகளைக்கூட, நிரந்தரமானதாகச் செய்துவிட்டீர்கள்; தயார் செய்து விட்டீர்கள். அதில்கூட, பாதுகாப்பற்ற நிலை அனைத்தும் போய்விட்டது.
நான் எப்போதும் பிரம்மச்சாரிகளிடம் சொல்வேன், "புதிது புதிதாகத் தவறு செய்யுங்கள், புதிது புதிதாகச் சண்டை போடுங்கள், வளருவீர்கள், ஆனால் புதிது புதிதாகச் சண்டை போடுகிற அளவிற்குக்கூட, நீங்கள் யோசிப்பது இல்லை. ஒரே தவறை, பெரிய அளவிலோ சிறிய அளவிலோ செய்வீர்கள். அவ்வளவுதான்.
உங்கள் வாழ்க்கையில் புதிது புதிதாகத் தவறு செய்ய வேண்டும் என்றால்கூட, பாதுகாப்பில்லாமல் யோசனை செய்தாக வேண்டும்.
உங்களுடைய வார்த்தைகள்கூட தன்னிச்சையாக இருப்பதில்லை, எல்லாமே முன்பே திட்டமிட்டதாக, முடிவெடுக்கப்பட்டதாக, பாதுகாப்பாக இருக்கின்றன. முழுமையான பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதுதான் 'ஜீவன் முக்தி'.
கொடுத்ததே போதும்! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துக்கொள்
What you have given is enough. Whatever you want, take it from me!
“கொடுத்ததே போதும்! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துக் கொள். எனக்காகக் கொடுத்தது போதும்! உனக்காக நான் எதையும் கொடுப்பேன்,” என்று வாழ ஆரம்பித்துவிட்ட ஒவ்வொருவரும் கோபிகைகளே!
வாழ்க்கையோடு இன்று முடிவு செய்யுங்கள், “வாழ்க்கையே! சுவாசமாக எனக்குள்ளே சென்று, வெளியே வருகிற வாழ்க்கையே! ஜீவாதாரமே! இந்த உலகத் திற்கே உயிராக இருக்கிற, இந்த உலகத்தை நான் உணர்வதற்கு ஆதார சக்தியாக இருக்கிற வாழ்க்கையே! இன்றிலிருந்து, நீ எனக்கு எதுவும் தர வேண்டாம்.”
“என்னுடைய சுவாசமாக மலர்ந்து இருக்கிறாயே, இது போதுமானது, நீ என் உடலுக்குள்ளே உயிராக உலவுகிறாயே, அது போதுமானது.
ஒரு பொருளைத் தொட்டால், என்னால் உணர முடிகிறது. அது போதுமானது.
ஒரு பொருளை என்னால் பார்க்க முடிகிறது. அது போதுமானது.
ஒரு பொருளை ருசிக்க முடிகிறது. அது போதுமானது.
“வாழ்க்கையே, நீ ஏற்கெனவே, அளவுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டாய். இதற்குமேல், உன்னிடமிருந்து நான் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. உன்னிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லை, நீ எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், என்னிடம் இருந்து எடுத்துக் கொள்.
“அனைத்தையும் என்னிடம் இருந்து எடுத்துக்கொள். உனக்காகவே, அனைத்தையும் நான் விரித்து வைக்கிறேன்,” எனும் இந்த உணர்வை எடுத்துக்கொண்டு வந்து வாழ ஆரம்பித்தீர்களானால், அதுதான் ‘ஜீவன் முக்தி’.
அந்த வினாடியே உங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற உணர்வு, கிருஷ்ணருக்கும் கோபியருக்கும் இடையிலே இருக்கிற உணர்வாக மாறி விடுகிறது. உங்களின் வாழ்க்கையே ராசலீலையாகத்தான் இருக்கும்.
ஹோலி பண்டிகை என்பது, ராச லீலை என்பது, ஏதோ சிறிது நேரம் கோலாட்டம் அடித்து, கும்மியாட்டம் அடித்து, கலரைப் பூசிக்கொண்டு ஆடுவது இல்லை. அதை அடையாளமாகச் செய்ய வேண்டும், அவ்வளவுதான். அது ராசலீலை கிடையாது.
வாழ்க்கையே, ஞானத்தைத் தாண்டிய
> வாழ்க்கையே,
> ஞானத்தைத் தாண்டிய
> ரசமாக மாறுவதுதான்
> ராசலீலை.
ரசமாக மாறுவதுதான் ராசலீலை. உலகம் முழுவதும் பக்தர்கள் ராசலீலையைக் கொண்டாடுகிறார்கள். ஹோலிப்பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்று மட்டும் ராசலீலையைக் கொண்டாடுவது, ராசலீலை அல்ல. ஞானத்தைத் தாண்டிய ரசத்தை, வாழ்விலே உணர்வதனால், வாழ்க்கையே ராசலீலையாக மாறுவது; வாழ்வே ராசலீலையாக மாறுவது; வாழ்வே ராசலீலையில் கரைவது; வாழ்வே ராசலீலையில் malarvathu.
இல்லையென்றால், வாழ்க்கைக்கும், நமக்கும் உள்ள உறவு; சிசுபாலனுக்கும், சிசுபாலனோடு தங்கியிருந்த பெண்களுக்கும் இருக்கிற உறவு மாதிரிதான்.
வாழ்வுக்கு ஏதாவது தருவது என்பது, வாழ்வுக்காகத் தம்மை மலர்த்துவது என்பது, வாழ்க்கை எனும் பழத்திற்குள் சாற்றைச் சேர்ப்பதற்கான நீராக வருவதைப் போன்றது.
நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையில் இருந்து எதையாவது திருடிக்கொண்டே இருப்பது, வாழ்க்கை என்கிற பழத்தின் சாற்றைப்பிழிந்து, அதிலிருந்து திருடி சேர்த்து வைத்துக்கொள்வதற்குச் சமம். பலர் இருபத்தி நான்கு மணிநேரமும் இப்படியே முயற்சி செய்வீர்கள். வாழ்க்கை என்ன செய்யும்? உங்களுக்குக் கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, உங்களோடு பொம்மலாட்ட விளையாட்டு விளையாடிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் வேறு எங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்தாலும், அதையும் சேர்த்து மொத்தமாக எடுத்துக்கொள்ளும்.
வாழ்க்கை உங்களோடு, பொம்மலாட்டம் விளையாட்டு விளையாடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.
வாழ்க்கையோடு முழுமையாகத் திறந்து இருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உங்களுடைய உணர்வு முழுவதையும், ஒரே நிலை நோக்கி ஒன்றாக்குங்கள்
எதை நம்புகிறீர்களோ...
அதை மட்டும் பேசுங்கள்;
எதை நம்புகிறீர்களோ...
அதை மட்டும் செய்யுங்கள்;
எதை நம்புகிறீர்களோ...
அதை மட்டும் வாழுங்கள்.
நம்புதல் என்றால் உங்களுக்குள் அனுபவமாக மாறியவற்றை மட்டும் வாழ்தல். நம்பாத விஷயங்களை வாழ ஆரம்பிப்பது என்பது, சமூகக் காரணங்கள் கருதி போலி வாழ்வு வாழ்வது.
நம்பாத விஷயங்களை வாழ ஆரம்பிக்கிறவர், அனுபவமாகாத அனுபவங்களோடு வாழ்பவர், அது உளுத்துப் போன மூங்கில் மாதிரி. உளுத்துப்போன மூங்கில் புல்லாங்குழலாக மட்டும் அல்ல, பாடை கட்டக்கூட உபயோகம் ஆகாது.
புல்லாங்குழலா, உளுத்துப்போன மூங்கிலா?
Flute or withered bamboo?
உளுத்துப்போன மூங்கில் உள் உலகத்தில் மட்டும் அல்ல, வெளி உலகத்தில் ஜெயிப்பதற்குக்கூட உபயோகம் ஆகாது.
காலியான மூங்கில் புல்லாங்குழலாக உபயோகம் ஆகும். ஆனால், உளுத்துப்போன மூங்கில், பாடை கட்டக்கூட உபயோகம் ஆகாது. காலியான மூங்கில், இறைவன் கையில் புல்லாங்குழலாக இருக்கும். கனமான மூங்கில், பாடை கட்டி பிணம் தூக்க உபயோகம் ஆகும்.
அகங்காரம் இல்லாமல் போகும் பொழுது, இறைவன் கையில் புல்லாங் குழலாக மாறிவிடுகிறீர்கள்.
கனமான மூங்கிலாக.., அகங்காரத்தோடு வாழும் பொழுது, இந்த உடல் என்ற பிணத்தைத் தூக்கிக்கொண்டு போகிற "பாடை," கட்டுவதற்குத்தான் உபயோகம் ஆக வேண்டியிருக்கும். கடைசியில் உடம்பைத் தூக்கிக்கொண்டு வாழ்வதற்குக்கூட உபயோகம் இல்லாத நிலையில் வீழ்ந்து மாய்கிறீர்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஆழ்ந்து உள்வாங்கிக்கொள்ளுங்கள். இந்த வாழ்க்கையோடு, உங்களுக்கு இருக்கிற உறவை நேராக்குங்கள்.
உங்கள் உடல் வியாதிகள் மறைந்து, உள்ளத்தின் வியாதிகள் மறைந்து, உணர்வைக் சீரமைக்கும்."
கிராமத்து மக்களிடம் நான் பார்த்து இருக்கிறேன், உணர்வைச் சீரமைத்து வைத்திருப்பார்கள்.
மத்தியபிரதேசம் பக்கத்தில் ஒரு கிராமம், அருமையான ஒரு இடம். அந்தக் கிராமத்தில் இருக்கிற பழக்கம் என்னவென்றால், அந்த மக்கள் கனவில் யாரையாவது பார்த்துத் திட்டிவிட்டால், இல்லை ஏதாவது அவர்களுக்குத் தவறு செய்துவிட்டதாகக் கனவு கண்டால்கூட, மறுநாள் அவர்கள் வீட்டிற்குச்சென்று, அந்த நபரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு வருவார்களாம்.
நமக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், "கனவில் செய்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நிஜத்தில் அவர்களுக்குத் தெரியக்கூட தெரியாதே," என்று.
அதுபோல் செய்ய வேண்டி இருந்தால், தினம் எத்தனை பேர் காலில் விழ வேண்டி இருக்கும்?
அவர்கள் "நாம் கனவில் ஒரு தீங்கு இழைத்திருந்தாலும்கூட, அதற்கும் நம் உணர்வற்ற நிலையில் (Unconscious-ல்) அவர்கள் மேல் ஒரு வெறுப்பு எப்படியேனும் நினைவுப்பகுதியில் பதிந்துவிடும் என்றும். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும்," என்று நம்புகிறார்கள்.
"நமது உணர்வற்ற நிலையில் ஏதாவது ஒரு கோபம்
இருக்கும். அதனால்தான் இந்தச்செயலை நாம்
செய்கிறோம்," என்ற மிகத் தெளிவான சத்தியம்
அவர்களுக்கு புரிந்திருக்கிறது.
அதனால் உணர்வை நேராக்குவதற்காக, அவர்களுடைய உணர்வைச் சீர்செய்து கொள்வதற்காக, கனவில் யாரையாவது காயப்படுத்திவிட்டால்கூட அல்லது உடலாலோ, மனதாலோ, கனவில் ஒருவருக்கு வஞ்சம் செய்துவிட்டாலும்கூட, நனவிலே சென்று அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்கள்.
அதுதான் நேர்கொண்ட உணர்வு, நிமிர்ந்த வாழ்க்கை. பாரதி சொல்கிறார், "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச்செருக்கும்," என்று அது இதுதான்.
ஞானத்தினாலே வருகிற தெளிவு... அதுதான் வாழ்க்கையோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு... இதைத்தான், ஞானத்தைத் தாண்டிய ரசம் என்று சொல்கிறோம்.